அபிஷ்வாஸ்  தனது மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவனது பாதையில் திசைதிரும்பிய ஒரு கார், அவனை எதிர்வரும் வாகனத்தின் மீது மோதச் செய்தது. இரு வாரங்கள் கழித்து ஒரு சிகிச்சை மையத்தில் கண்விழித்த போதுதான், அவனுடைய மோசமான நிலை புரிந்தது. அதிலும் மோசமாக, தண்டுவடம் காயப்பட்டதால் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். அபிஷ்வாஸ், தான் குணமாக ஜெபித்தான், ஆனால் அது அவனுக்கு கிடைக்கவில்லை. மாறாக, “இந்த வாழ்வின் நோக்கமே நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாவதுதான். துரதிருஷ்டவசமாக அது நமக்கு எல்லாமே நன்மையும், இன்பமுமாய் இருக்கும்பட்சத்தில் சாத்தியமாகாமல் , நம் வாழ்க்கை கடினமாகும்போதும், ஒவ்வொரு நாளையும் கடக்கவே ஜெபத்தின் மூலமாக தேவனை சார்ந்துகொள்வது கட்டாயமாகும்போதும் தான் அது சாத்தியமாகும்” என்பதை தேவன் தனக்கு உருக்கமாக கற்றுக்கொடுத்ததாக விசுவாசிக்கிறான்.

தேவனோடுகூட சரியான உறவிலிருப்பதால் உண்டாகும் இரு நன்மைகளை குறித்து அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறார் அவை: உபத்திரவத்தில் பொறுமை மற்றும் உபத்திரவத்தை குறித்து மேன்மைபாராட்டுவது (ரோமர் 5:3-4) இவ்விரு நன்மைகளும் ஏதோ மனவலிமை பெற்று துன்பத்தை சகிக்கவோ அல்லது துன்பத்தில் இன்பம் காணவோ நம்மை அழைக்கவில்லை. மாறாக, தேவன் மீது கொண்ட அசையாத நம்பிக்கைக்கு நம்மை அழைக்கிறது. கிறிஸ்துவுடன் கூடிய உபத்திரவம், “பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது” (வ.3). இவை அனைத்துமே நம் தகப்பன் நம்மை கைவிடமாட்டார் மாறாக நம்மோடு அக்கினியிலும் கூட நடப்பார், நமது எதிர்காலத்திலும் நடத்துவார் என்ற விசுவாசத்திலிருந்து வழிகின்றன.

தேவன் நமது உபத்திரவங்களில் நம்மை சந்தித்து அவருக்குள் நாம் வளர உதவுகிறார். துன்பங்களை அவருடைய தண்டனைகளாக பார்ப்பதை விடுத்து அவைகளை கொண்டு நம்மை அவர் மெருகேற்றும் வழிமுறைகளை கண்டுகொண்டு நமது குணாதிசயங்களை வளர்த்து “தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதை” (வ.5) அனுபவிப்போமாக.