எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

இவர் யாரோ?

நான் மாணவனாயிருந்தபோது “உங்கள் சாய்வு மேஜைகளிலிருந்து எல்லாவற்றையும் அகற்றிவிட்டு ஒரு பேப்பரும் பென்சிலும் எடுத்துக் கொள்ளுங்கள்.” என்ற அச்சுறுத்தும் அறிவிப்பைக் கேட்டவுடனே, “பரீட்சை நேரம்” வந்துவிட்டது என்று அறிந்து கொண்டேன்.

கடற்கரையில் போதனையோடு ஆரம்பித்த இயேசுவின் அன்றைய தினம் (மாற். 4:1) கடலில் ஒரு சோதனையான வேளையோடு முடிந்தது (வச. 35). இயேசுவின் பிரசங்க மேடையாகப் பயன்படுத்தப்பட்ட அந்தப் படகு இயேசுவையும் அவருடைய சில சீடர்களையும் கடலின் அக்கரைக்குக் கொண்டுபோகப் பயன்படுத்தப்பட்டது. களைப்படைந்த இயேசு படகின் பின்னணியத்தில் படுத்துத் தூங்கிவிட்டார். பயணத்தின்போது அவர்கள் ஒரு பலத்த சுழல்காற்றை எதிர்கொண்டனர் (வச. 37). அவைகளினால் முற்றிலும் நனைந்த சீடர்கள், “போதகரே நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள் பின் இக்காரியம் நிகழ்ந்தது (வச. 38). காலையில் ஜனக்கூட்டத்தை பார்த்து “கேளுங்கள்” என்று அறிவுரை கூறியவர், ஒரு எளிய வல்லமையான கட்டளையை இயற்கைக் காற்றைப் பார்த்து காற்றுக்கு “இரையாதே, அமைதலாயிரு” என்றார் (வச. 39).

காற்றும் கீழ்ப்படிந்தது. மிகவும் பயந்த சீடர்கள் ஆச்சரியப்பட்டு “இவர் யாரோ?” என்றார்கள் (வச. 41). சீஷர்கள் இவர் யாரோ என்று கேட்ட கேள்வி நல்ல கேள்விதான் ஆனால், மெய்யாகவே இயேசு தேவனுடைய குமாரன்தான் என்று சரியாகக் கண்டுகொள்ள அவர்களுக்குச் சற்றுக் காலம் வேண்டியதாயிருந்தது.

இன்றைய காலக்கட்டத்திலும் இயேசுவைப்பற்றி திறந்த உள்ளத்தோடு உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ள அனுபவத்துடன் கேள்வி கேட்பவர்கள் இதே முடிவிற்குத்தான் வருவார்கள். அவர் நமக்கு போதனை செய்பவர்மட்டுமல்ல, ஆராதனைக்கும் உரிய தேவனானவர்.