எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வேலை என்னையும், என்னோடு பணிபுரியும் மற்றொருவரையும் 250 மைல்களுக்கப்பால் கொண்டு சென்றது. நாங்கள் வேலையை முடித்துவிட்டுத் திரும்பிய போது மாலை அதிக நேரமாகிவிட்டது. வயது சென்றதாலும், கூரியபார்வை குறைந்து விட்டதாலும் இரவில் வாகனத்தை ஓட்டுவதில் சற்று சிரமமிருந்தது. இருந்த போதிலும் நானே முதலாவதாகச் செல்ல விரும்பினேன். என்னுடைய கரங்கள் திசை மாற்றுச் சக்கரத்தை நன்கு பற்றியிருக்க, என்னுடைய கண்கள் கவனமாக அந்த மங்கலான ஒளியில் சாலையை கவனித்தன. நான் ஓட்டிச் செல்கையில், அந்த நெடுஞ்சாலையில் எனக்குப் பின்னால் வந்த வாகனங்களிலிருந்து வந்த ஒளிக்கற்றை நான் அந்தச் சாலையை நன்கு பார்க்க உதவியது. என்னுடைய நண்பன் தன்னுடைய காரை வேகமாக ஓட்டிக் கொண்டு எனக்கு முன்னே வந்த போது நான் சற்று நிம்மதி அடைந்தேன். அவன் என்னிடம் வந்து, நான் முன் விளக்குகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக பனிப்படல விளக்குகளை பயன்படுத்தி ஓட்டிக் கொண்டிருப்பதாகச் சுட்டிக் காட்டினான்.

நம்முடைய அனுதின வாழ்விற்குத் தேவையான வெளிச்சத்தைத் தருவது தேவனுடைய வார்த்தைகளே (வச. 105) என முற்றிலும் புரிந்து கொண்ட ஒருவருடைய மிகச்சிறந்த படைப்புதான் சங்கீதம் 119. நான் அந்த நெடுஞ்சாலையில், அந்த இரவில் சந்தித்த பிரச்சனையைப் போன்று, நம் வாழ்விலும் எத்தனை, அடிக்கடி அப்படிப்பட்ட சூழல்களைச் சந்திக்கின்றோம். நாம் தெளிவாகப் பார்க்கும்படிக்கு நம்மை வருத்திக் கொள்கின்றோம், சில வேளைகளில் நல்ல பாதையைவிட்டு விலகி விடுகின்றோம். ஏனெனில், நாம் தேவன் தரும் ஒளியாகிய தேவனுடைய வார்த்தையை மறந்து விடுகின்றோம். சங்கீதம் 119 நம்மை முன் விளக்கின் சுவிட்சை அவிழ்த்து விடும்படி நம்மைத் தூண்டுகிறது. நான் அந்த விளக்கைப் போடும் போது என்ன நடக்கின்றது? நாம் சுத்தப்படுத்தப்படும்படி ஞானத்தைக் கண்டடைகிறோம் (வச. 9-11). நாம் வீணாக அலைந்து திரிவதைத் தவிர்க்கும்படி புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கண்டு கொள்கின்றோம் (வச. 101-102). நாம் வேதத்தின் வசனமாகிய வெளிச்சத்தில் வாழும் போது சங்கீதக்காரனின் துதியும் நம்முடைய துதியாக மாறும். ‘உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்” என்போமாக.