நான் யார்? என்று ஒரு மங்கிப்போன, பஞ்சடைக்கப்பட்ட மிருக பொம்மை தன்னைக் கேட்டுக் கொண்டது. மைக் இங்க் பென் எழுதிய ‘ஒன்றுமில்லை” என்ற குழந்தைகளின் புத்தகத்தில் இதனைக் காணலாம். ஒரு பரணின் மூலையில் தூசிபடிந்து கிடந்த அந்த மிருகத்தை அங்கு வந்த பொருட்களை அடுக்குபவர்கள் ‘ஒன்றுமில்லை” என அழைத்ததால் ‘ஒன்றுமில்லை” என்பதே தன்னுடைய பெயரென அது நினைத்துக் கொண்டது.

அது மற்ற மிருகங்களைச் சந்தித்த போது தன்னைப் பற்றிய நினைவைத் திரும்பப் பெற்றது. இப்பொழுது ‘ஒன்றுமில்லை” தனக்கு ஒரு வாலிருந்தது, மீசை முடிகளிருந்தன, தன் உடலில் கோடுகள் வரையப்பட்டிருந்தன என்பதை நினைவு கூர்ந்தது. டாபி என்ற பூனையைச் சந்தித்தப் பின்னர் தான், தன்னுடைய வீட்டிற்கான வழியையும் தான் யாரென்பதையும் ஒன்றுமில்லையால் நினைவுபடுத்த முடிந்தது. உண்மையில் அது டோபி என்றழைக்கப்படும் ஒரு பஞ்சு பூனை பொம்மை. அதனுடைய எஜமானன் அன்போடு அதனைச் சேர்த்துக் கொண்டு, அதன் மீது புதிய காதுகளைத் தைத்தார், வாலையும், மீசை முடிகளையும், உடலின் கோடிகளையும் கொடுத்தார்.

நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதெல்லாம், நான் என்னுடைய அடையாளத்தைக் குறித்து சிந்தித்துக் கொள்வேன். நான் யார்? யோவான் விசுவாசிகளுக்கு எழுதும் போது, தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளென அழைப்பதைக் குறிப்பிடுகின்றார் (1 யோவா. 3:1). இந்த அடையாளத்தை நாம் முற்றிலுமாக புரிந்துகொள்வதில்லை. ஆனால், நாம் இயேசுவைப் பார்க்கும் போது நாம் அவரைப் போன்றிருப்போம் (வச. 2). டோபி என்ற அந்தப் பூனையைப் போல நாமும் நமக்கென்று நியமிக்கப்பட்டுள்ள அடையாளங்களைப் பெற்றுக் கொள்வோம். அந்த அடையாளம் இப்பொழுது பாவத்தால் மறைந்துவிட்டது. ஆனாலும், நாம் அந்த அடையாளத்தின் ஒரு பகுதியை நாம் தேவனுடைய சாயலாக இருப்பதை நாம் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்க முடியும். ஒரு நாள் நாம் இயேசுவைக் காணும் போது. தேவன் நமக்கென்று வைத்துள்ள அடையாளத்தை முற்றிலும் மீண்டும் பெற்றவர்களாகக் காணப்படுவோம். நாம் புதிதாக்கப்படவோம்.