வல்லமையுள்ள சமாதானம், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு தேவ சமாதானம் நம்முடைய ஆழ்ந்த துயரத்தின் போது நம்முடைய இருதயங்களை நிரப்புகிறது (பிலி. 4:7), என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. நான் இதனை சமீபத்தில் என்னுடைய தந்தையின் நினைவு ஆராதனையில் உணர்ந்தேன். ஒரு நீண்ட வரிசையில், அனுதாபத்தைத் தெரிவிக்கும்படி மக்கள் கடந்து வந்து தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டபோது, நான் என் பள்ளித் தோழனைச் சந்தித்த போது வெகுவாக சமாதானம் பெற்றேன். ஒரு வார்த்தையும் பேசாமல், அவன் என்னை அணைத்துக் கொண்டான். அவனுடைய அமைதியான புரிந்து கொள்ளல், அந்தக் கவலையும் கஷ்டமும் நிறைந்த நாளில் என்னைச் சமாதானத்தால் நிரப்பிற்று. நான் நினைத்துக் கொண்டபடி தனிமையிலில்லை என்ற வலிமையான நினைவைத் தந்தது.

சங்கீதம் 16ல் தாவீது விளக்குவது போல, நம்முடைய வாழ்வின் கடினமான சூழல்களில் தேவன் தருகின்ற சமாதானமும், மகிழ்ச்சியும் நம்முடைய சொந்த பெலத்தினால் நாம் பெற்றுக் கொண்டதல்ல. ஆனால், அது நாம் தேவனிடத்தில் பாதுகாப்பைத் தேடும் போது நாம் அநுபவிக்கும்படி அவர் நமக்குத் தருகின்ற மிகப் பெரிய ஈ.வு. (வச. 1-2).

மரணம் கொண்டு வருகின்ற வேதனைகள் சில வேளைகளில் நம்மை வழிதவறச் செய்து, ஒருவேளை அந்நிய தேவர்களிடம் கொண்டு சென்றால், அங்கு இந்த வேதனைகளைத் தள்ளிவிடலாம் என்று எண்ணுவோமாயின் அது தவறு. அது இன்னும் அதிக வேதனையையே கொண்டு வரும் (வச. 4).

நாம் இதனைப் புரிந்து கொள்ளமுடியாவிடினும், நம்பிக்கையோடு தேவனிடம் திரும்புவோம். தேவன் நமக்குத் தந்த இந்த வாழ்வு வேதனை நிறைந்ததாயிருந்தாலும் அது இன்னமும் அழகாகவும், நல்லதாகவுமேயுள்ளது (வச. 6-8). நம்முடைய வேதனையின் வழியே நம்மை அன்போடு சுமந்து சென்று, மரணம் கூட எடுத்து விட முடியாத நித்திய சமாதானம், மகிழ்ச்சிக்குள் நம்மை அழைத்துச் செல்பவரின் அன்பு கரங்களில் நம்மை அர்ப்பணிப்போம் (வச. 11).