வெளிநாட்டில், ஒரு தெரு வழியே நானும் என் மனைவியும் சென்று கொண்டிருந்த போது, கம்பீரமான ஒரு மனிதன் எங்களை நோக்கி வந்த போது நாங்கள் பயத்தால் பின்வாங்கினோம். எங்களுடைய விடுமுறை நாட்கள் மோசமாகப் போய் கொண்டிருந்தது. சிலர் எங்களிடம் கத்தினர், எங்களை ஏமாற்றினர், அநேக முறை அச்சுறுத்தலையும் சந்தித்தோம். ஒரு வேளை மீண்டும் எங்களை கீழே தள்ளப் போகின்றாரா? என்ன ஆச்சரியம்! அந்த மனிதன் அவருடைய பட்டணத்தின் சிறந்த காட்சியை எங்கிருந்து பார்த்தால் தெளிவாகக் காண முடியும் எனச் சுட்டிக்காட்டினார். பின்னர், அவர் எங்களுக்கு ஒரு சாக்லேட் கட்டியைக் கொடுத்து விட்டு சிரித்து எங்களை விட்டுப் பிரிந்து சென்றார். அந்த சிறிய செயல் அந்த நாளையும் எங்களுடைய முழுபயணத்தையும் மகிழ்ச்சியாக்கியது. எங்களை மகிழச் செய்த அந்த மனிதனையும், தேவனையும் நன்றியோடு நினைக்கச் செய்தது.

அந்த மனிதன் இரு அந்நியர்களுக்கு உதவும்படி அவரைத் தூண்டியது யார்? அவர் அந்த நாள் முழுவதும் சாக்லேட் கட்டிகளோடு, யாரிடமாகிலும் கொடுத்து ஆசிர்வதிக்கும்படி திரிந்து கொண்டிருந்தாரா?

ஒரு சிறிய நற்கிரியை, பெரிய மகிழ்ச்சியைத் தந்து, ஒருவரை தேவனுக்கு நேராக வழிநடத்த முடிகிறது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். வேதாகமம் நற்கிரியைகள் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது (யாக். 2:17,24). அது ஒருவேளை சவால் மிக்கதாகத் தோன்றினாலும் தேவன் நம்மை இத்தகைய காரியங்களைச் செய்யும்படி அவர் நமக்கு பெலனளிக்கிறார், நமக்கு உறுதியளிக்கின்றார். ”அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கின்றார்” (எபே. 2:10).

இன்று யாரோ ஒருவருக்கு ஊக்கமளிக்கும் சில வார்த்தைகள் தேவையென்பதையறிந்து தேவன் நம்மை அவர்களோடு தொடர்பு கொள்ளச் செய்கின்றார். பிறருக்கு உதவும்படி நமக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவருக்குக் கீழ்படிந்து செயல்படுதலே.