நான் இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கும் முன்பு மிகவும் ஆழமாகக் காயப்பட்டிருந்தேன். நான் மேலும் காயப்பட்டு விடுவேனோ என்ற பயத்தில் யாரிடமும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக்கொள்ள பயந்தேன். நான் ஆலனைத் திருமணம் செய்துகொள்ளும் வரை என்னுடையத் தாயாரே எனக்கு நெருங்கிய சிநேகிதியாக இருந்தார்கள். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் என்னுடைய திருமணத்தை முறித்துக் கொள்ள இருந்த போது, பாலர் பள்ளி செல்லும் என்னுடைய குழந்தை சேவியரை தூக்கிக் கொண்டு ஆலய ஆராதனைக்குச் சென்றேன். நான் அங்கு வெளியே செல்லும் கதவண்டை உட்கார்ந்தேன். விசுவாசிப்பதற்கு பயந்தும், உதவியை எதிர்பார்த்தும்
அவலநிலையிலிருந்தேன்.

நல்ல வேளையாக, அங்கிருந்த விசுவாசிகள் முன் வந்து, எங்களுடைய குடும்பத்திற்காக ஜெபித்தனர். ஜெபத்தின் மூலமாயும், வேதத்தை வாசிப்பதன் மூலமாயும் தேவனோடு உறவை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது என்று கற்றுக் கொடுத்தனர். நாட்கள் சென்றபோது கிறிஸ்துவின் அன்பும், அவரைப் பின்பற்றுகின்றவர்களும்,  என்னை மாற்றினர்.

அந்த முதல் ஆராதனைக்குப் பின் இரண்டு வருடங்கள் கழித்து அந்த ஆலய ஆராதனையில் ஆலன் சேவியர் மற்றும் என்னை ஞானஸ்நானம் எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். சில நாட்களுக்குப் பின் நாங்கள் வழக்கம் போல வார இறுதியில் பேசிக் கொள்வது போன்று என் தாயாருடன் பேசிக் கொண்டிருந்தபோது ”நீ முற்றிலும் மாறுபட்டிருக்கின்றாய். இயேசுவைப் பற்றி மேலும் எனக்குச் சொல்” என என்னிடம் கேட்டுக் கொண்டார். சில மாதங்கள் சென்றன. அவர்களும் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.

இயேசு வாழ்வை மாற்றினார். இயேசுவைச் சந்திக்கும் வரை சபைகளைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்த சவுலின் வாழ்வை மாற்றினார் (அப். 9:1-5). மற்றவர்கள் அவன் இயேசுவைக் குறித்து மேலும் கற்றுக் கொள்ள உதவினர் (வச. 17-19). அவனுடைய திடீர் வாழ்வு மாற்றம் அவனை ஆவியில் நிறைந்து போதனை செய்பவராக அவனை பெலப்படுத்தியது (வச. 20-22).

நாம் இயேசுவை முதலில் சந்தித்த விதம் சவுலுடையதைப் போன்று தீடீரென ஏற்பட்டதாயிருக்க அவசியமில்லை. நம்முடைய வாழ்வு மாற்றமும் வேகமானதாகவோ திடீரென ஏற்பட்டதாகவோ இருக்க முடியாது. ஆனாலும் கிறிஸ்துவின் அன்பு நம்முடைய வாழ்வை மாற்றுவதை நம்முடைய சுற்றத்தார் கவனிப்பர். காலம் செல்லும்போது நாமும் மற்றவர்களுக்கு தேவன் நமக்குச் செய்தவற்றைச் சொல்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.