ஸ்வீடனில், தோஸ்தத்னிங் எனப்படும் ஒரு பொதுவான கருத்து உள்ளது. இதன் பொருள் “மரண சுத்திகரிப்பு”. நமக்கு வயதாகும்போது, ​​​​”பொருட்களை” குவிப்பதை நிறுத்திவிட்டு, நம் வாழ்நாள் முழுவதும் வாங்கி குவித்துள்ள தேவையற்றவைகளை அகற்றிட ஆரம்பிக்க வேண்டும் என்பதே இதன் கருத்து. “ஸ்வீடிஷ் மரண சுத்திகரிப்பு” என்பது, உண்மையில் குழந்தைகளுக்கும் நண்பர்களுக்குமான நமது அன்பின் பரிசாகும், ஏனென்றால் இது நாம் விட்டுச்செல்லும் விஷயங்களை வைத்துக்கொண்டு அவர்கள் அலைந்து திரிவதைத் தடுக்கிறது.

இயேசுவின் விசுவாசிகளாக, ஒரு குறிப்பிட்ட வயதில் நமக்கு எஞ்சியிருக்கும் நம் சொத்துக்களைப் பற்றிச் சிந்திக்கிறோம். இது பெரும்பாலும் பணம், பரம்பரை சொத்து அல்லது தானம் செய்வதின் (இதைக்குறித்து நிறையச் சொல்லலாம்) அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் இயேசுவின் கடைசி நேரத்தில், அவருடைய சீடர்களுடன் அவர் உரையாடியதைப்  பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்: “நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய்” (யோவான் 13:36). இரண்டு வசனங்களில் (வ.34-35), அவர் அன்பைக் குறிக்கும்  வார்த்தைகளை நான்கு முறை பயன்படுத்துகிறார். அவருடைய சொத்து அன்பே. அவர் அவர்களிடம் கூறினார்: “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (வ.34).

ஒழுங்கீனத்தை நீக்கி, மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே விட்டுச்செல்லும்படி நம் வாழ்விலும் சில “ஸ்வீடிஷ் மரண சுத்திகரிப்பு” செய்வது நல்லது. ஆனால் அது உண்மையில் பொருட்களையோ பணத்தையோ பற்றியது அல்ல. நீங்கள் விட்டுச் செல்லக்கூடிய மிக முக்கியமான சொத்து, இயேசுவின் மீதான உங்கள் அன்பே. குழந்தைகளும் நண்பர்களும் உங்களை இயேசுவை நேசிப்பவராக நினைவுகூரும்போது, ​​அதுவே சிறந்த பரிசு. “விட்டுச் செல்லுதல்” என்ற சொற்றொடருக்கு இது புதிய அர்த்தத்தை அளிக்கிறது.