சுந்தரம் ஒரு வயதான ஓய்வுபெற்ற கண்ணியமானவர், அவர் தனியாக வசிக்கிறார், சமீபத்தில் வாகனம் ஓட்டுவதைக் கைவிட வேண்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகைப் பொருட்கள், மருந்துகள் வாங்கவும் மற்றும் சபைக்குச் செல்லவும் அவருக்கு உதவி தேவை. “ஆனால் உங்களுக்குத் தெரியுமா, நான் வீட்டில் இருக்கும் நாட்களையே விரும்புகிறேன். நான் நாள் முழுவதும் இணையத்தில் இலவச ஆராதனை பாடல்களையும், தொலைக்காட்சியில் வேதாகம பாடங்களையும் அனுபவித்து மகிழ்கிறேன்” என்று சுந்தரம் கூறுகிறார். சுந்தரம் தனது நாட்களை வேதாகமம், ஜெபம் மற்றும் துதி ஆகியவற்றுடன் கழிக்கிறார்

நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், நம் இதயங்கள் எங்கு நாட்டப்பட்டுள்ளன என்பதைத் தீர்மானிக்கின்றன. சங்கீதம் 1, தேவதயவைப் பெற்ற ஒருவரின் பழக்கவழக்கங்களை விவரிக்கிறது: அவர்கள் அவருடைய சத்தியத்தில் மகிழ்கிறார்கள், அதை அடிக்கடி தியானிக்கிறார்கள், எனவே உலகின் முரட்டாட்டமான முறையைப் பின்பற்றுவதில்லை (வ.1-2). எல்லோருக்கும் கஷ்டம் வரும், ஆனால் தேவனின் வழிகளில் வேரூன்றிய வாழ்க்கை “நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு,.. இலையுதிராதிருக்கிற” (வ.3) மரத்தைப் போலிருக்கும். நம் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து, வேதவாசிப்பில் ஒரு நாளைக்குப் பல மணிநேரம் செலவிட முடியாமல் போகலாம். இருப்பினும், தாகமாக தம்மிடம் வருவார் எவரையும் அவர் திருப்தியாக்குவார் என்றும், பரிசுத்த ஆவியானவர் தம்மைப் பின்பற்றுபவர்களை ஒரு நதியைப் போல நிரப்புகிறார் என்றும் இயேசு கூறினார் (யோவான் 7:37-39). துதி மற்றும் வேதாகமத்தின் மூலமாகவும், பிறரிடம் கரிசனை கொள்வதன் மூலமாகவும், நாம் வேலை செய்யும் போதும் தேவனிடம் பேசுவதன் மூலமாகவும், நாம் தவறும் போது மன்னிப்பு கேட்பதன் மூலமாகவும் நம் இதயங்களை ஜீவத் தண்ணீரில் மூழ்கடிக்க முடியும்.

தேவனின் ஞான ஆலோசனைகளைப் பின்பற்றுதல், வளமான மண்ணில் நம் இதயங்களை நடுகிறது. அந்த வாழ்க்கை நீதியென்று அழைக்கப்படுகிறது, தேவன் அதைக் காப்பாற்றுகிறார் (சங்கீதம் 1:6).