காலத்திற்கும் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான ஐசக் வாட்ஸ், “நான் அதிசயமான சிலுவையை ஆராய்கையில்” பாடலை எழுதினார். அதன் பாடல் வரிகளை எழுதுவதில், அவர் கவிதையில் முரண்பாடென்னும் யுத்தியைப் பயன்படுத்தி கருப்பொருள்களில் ஒரு மாறுபாட்டைக் காட்டினார்: “எனது செழிப்பான ஆதாயத்தை நான் நஷ்டமாக எண்ணுகிறேன்” மற்றும் “என் பெருமையின் மீது அவமதிப்பை ஊற்றுங்கள்” என்று வரிகள் இருக்கும். நாம் சில சமயங்களில் இதை ஆக்ஸிமோரான் (முரண்தொகை) அதாவது “முரண்பட்ட இரட்டைகளை இணைக்கும் வார்த்தைகள்” என்று அழைக்கிறோம். “கசப்பான இனிப்பு” மற்றும் “இருண்ட வெளிச்சம்” போன்றவை. வாட்ஸின் பாடல் வரிகளைப் பொறுத்தவரை, இந்த யுத்தி மிகவும் ஆழமானது.
இயேசு அடிக்கடி முரண்பாட்டைப் பயன்படுத்தினார். “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” (மத்தேயு 5:3), நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பெறுவார்கள் என்று அவர் கூறினார். நீங்களோ அல்லது நானோ, நாம் நேசித்த ஒருவரின் இழப்பிற்காகத் துக்கமடைந்து துயரப்படுகையில், நாம் ஆறுதலடைவோம் (வ.4) என்று இயேசு கூறுகிறார். பொதுவான இவ்வாழ்க்கைக்குரிய விதிகள் தேவனுடைய ராஜ்யத்தில் எவ்வாறு பொருந்தாது என்பதைக் கிறிஸ்து காட்டினார்.
கிறிஸ்துவுக்குள் வாழ்வது, எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறுகிறது என்று இந்த முரண்பாடுகள் நமக்குக் கூறுகின்றன: அடையாளமற்றிருந்த நாம் யாரோ ஒருவராகப் போற்றப்படுகிறோம். சிலுவையிலும் இயேசு ஒரு முரண்பாட்டைக் காட்சிப்படுத்தினார்; அங்கே முள் கிரீடத்தை அணிந்திருந்தார். ஐசக் வாட்ஸ் இந்த ஏளனச் சின்னத்தை எடுத்து, முரண்பாடாக, அதற்கு மிகவுயர்ந்த அழகைக் கொடுத்தார்: “இத்தகைய அன்பும் சோகமும் சந்தித்ததா, அல்லது முட்கள் இத்தனை விலையேறப்பெற்ற கிரீடத்தை உருவாக்கினதா?”.இந்த மெய்சிலிர்க்கும் வரிகள், நம்மைச் சிந்திக்கவும் வைக்கின்றன: “இந்த அன்பு மிகவும் அற்புதமானது, மிகவும் தெய்வீகமானது; என் ஆன்மா, என் வாழ்க்கை, என் அனைத்தையும் கோருகிறது”
மலைப்பிரசங்கத்தில் (மத்தேயு 5) எந்த வாக்கியங்கள் உங்களோடு அதிகம் ஒத்துப்போகின்றன? அது உங்கள் வாழ்க்கை அனுபவத்துடன் எவ்வாறு தொடர்புடையது?
அன்பு தேவனே, என்னை உமது ராஜ்யத்தில் ஒருவனாக மாற்றும்படி சிலுவையில் நீர் செய்த உமது தியாகத்திற்காக நன்றி.