சினேகா ஜன்னல் அருகே அமர்ந்து, பையை வைத்துக்கொண்டு, தன் அப்பா வருவதற்காக ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் பிரகாசமான பகல் இருண்டு பின்னர் இரவாக மாறியது, அவளுடைய உற்சாகம் மங்கியது. அப்பா மீண்டும் வரவில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.

சினேகாவின் பெற்றோர் விவாகரத்தானவர்கள், மேலும் அவள் தனது அபபவுடன் நேரத்தைச் செலவிட விரும்பினாள். அவள் நினைத்தது முதல் முறை அல்ல, “நான் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர் என்னை நேசிக்கவில்லை” என்று அவள் எண்ணுவது இது முதல்முறையல்ல.

சினேகா பின்னர் கற்றுக்கொண்டது போல்; இயேசுவை நம் இரட்சகராகப் பெறும் நாம் அனைவரும் அறிந்து கொள்வது போல் – நமது பூமிக்குரிய பெற்றோரும் மற்றவர்களும் நம்மை ஏமாற்றினாலும், நம்மை நேசிக்கும் ஒரு பரலோக தகப்பன் இருக்கிறார், நம்மை ஏமாற்றவே மாட்டார்.

மூன்று வேதாகம நிருபங்கள், தன்னுடைய பெயரைக் கொண்ட ஒரு சுவிசேஷம் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் ஆசிரியர் யோவான், தேவனுடைய அன்பின் ஆழத்தைப் புரிந்துகொண்டவர். உண்மையில், அவர் தன்னைதான் ” இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும்” (யோவான் 21:20) என்று குறிப்பிட்டார். கிறிஸ்துவின் அன்பினால் வாழ்க்கை மாற்றப்பட்ட ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்தினார். “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1) என்று அவர் எழுதினார்.

தேவன் நம்மை மிகவும் நேசிக்கிறார், அவர் நமக்காகத் தமது ஜீவனையே கொடுத்த தம்முடைய குமாரனாகிய இயேசுவை தந்தருளினார் (வ.16; யோவான் 3:16). அவரை எப்பொழுதும் ஜெபத்தில் நாம் அணுகலாம், மேலும் அவர், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று வாக்குரைக்கிறார். அவருடைய அன்பில் நாம் பாதுகாப்பாக இளைப்பாற முடியும்.