Archives: பிப்ரவரி 2024

தேவனின் உண்மைத்தன்மையை கண்டுள்ளேன்

பிரிட்டனின் ஆட்சியாளராக இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 70 ஆண்டுகள் ஆட்சியின் போது எழுதப்பட்ட "தி சர்வன்ட் குயின் அண்ட் தி கிங் ஷீ சர்வ்ஸ்" என்ற தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை அங்கீகரித்து அதற்குத் தனிப்பட்ட முன்னுரையை எழுதினார். இந்த புத்தகம் அவரது தொண்ணூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் போது வெளியிடப்பட்டது. தனது நாட்டிற்குச் சேவை செய்தபோது அவரது விசுவாசம் அவரை எவ்வாறு வழிநடத்தியது என்பதை இது விவரிக்கிறது. முன்னுரையில், ராணி எலிசபெத்  தனக்காக ஜெபித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார் மேலும் தேவனின் மாறாத அன்புக்கு நன்றி தெரிவித்தார். "நிச்சயமாகவே அவரது நம்பகத்தன்மையைக் கண்டேன்" என்று நிறைவுசெய்தார்.

வரலாற்றில் ஆண்களும் பெண்களும் அனுபவித்த தேவனின் தனிப்பட்ட, உண்மையான கரிசனையைத்தான் எலிசபெத் மகாராணியின் எளிமையான கூற்று பிரதிபலிக்கிறது.இந்த கருப்பொருள்தான் தாவீது ராஜா தனது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்படி எழுதிய ஒரு அழகான பாடலின் அடிப்படை. 2 சாமுவேல் 22-ல் இந்தப் பாடல், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே. ஸ்துதிக்குப் பத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன் (வ.3-4, 44). என்று தேவன் உண்மையுள்ளவராக இருந்ததை விவரிக்கிறது.  தனது இந்த அனுபவத்திற்கு பிரதியுத்தரமாக, "இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்" (வ.50) என எழுதியுள்ளார். 

நீண்ட ஆயுளில் தேவனின் உண்மைத்தன்மையைக் காணுவது கூடுதல் அழகாக இருந்தாலும், நம் வாழ்வில் அவருடைய அக்கறையை விவரிக்க நாம் காத்திருக்க வேண்டியதில்லை. வாழ்க்கையில் நம்மைச் சுமந்து செல்வது நம்முடைய சொந்த திறன்கள் அல்ல, ஆனால் அன்பான தந்தையின் உண்மையுள்ள கவனிப்பு என்பதை நாம் அங்கீகரிக்கும்போது, ​​​​நன்றி செலுத்தவும் துதிக்கவும் நாம் உந்தப்படுகிறோம்.

தேவனின் மறுரூபமாக்கும் வாா்த்தை

கிறிஸ்டின் தனது சீன கணவருக்காக ஒரு விசேஷித்த புத்தகத்தை வாங்க விரும்பியபோது, சீன மொழியில் அவருக்குக் கிடைத்த ஒரே புத்தகம் பரிசுத்த வேதம். அவர்கள் இருவருமே கிறிஸ்தவ விசுவாசிகள் அல்ல எனினும், அவர் எப்படியும் இந்த பரிசை பாராட்டுவார் என அவள் நம்பினாள். சீன மொழியின் பரிசுத்த வேதாகமத்தைப் பார்த்ததுமே அவர் மிகுந்த கோபமடைந்தார் எனினும் ஏற்றுக்கொண்டார். இறுதியில் அவர் அதைப் படிக்கும்போது, அதிலிருந்த சத்தியம் அவரை விசுவாசிக்க வைத்தது. இந்த எதிர்பாராத நிகழ்வால் வருந்திய கிறிஸ்டினும், உடனே வேத சத்தியங்களை மறுப்பதற்காக அவளும் வேதத்தை வாசிக்கத் தொடங்கினாள். ஆனால் அவளும் இந்த வேத சத்தியத்தை ஏற்று நம்பி கிறிஸ்துவின் விசுவாசியாக மாறியது அவளுக்கே ஆச்சரியமாயிருந்தது.

வேதாகமத்தின் மறுரூபமாக்கும் தன்மையை அப்போஸ்தலனாகிய பவுல் அறிந்திருந்தார். ரோமாபுரியின் சிறையிலிருந்து தான் பயிற்றுவித்த தீமோத்தேயுவுக்கு எழுதுகையில், "பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும், …நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு" (2 தீமோத்தேயு 3:14-15) என வலியுறுத்தினார். மூல மொழியான கிரேக்கத்தில், "தொடரு" என்பதற்கு அர்த்தம் "வேதம் வெளிப்படுத்தினவற்றில் 'நிலைத்திரு' " என்பதாகும். ஊழியத்தில் தீமோத்தேயு எதிர்ப்பையும் துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டிவரும் என அறிந்திருந்த பவுல், இப்படிப்பட்ட சவால்களுக்குத் தயாராயிருக்கும்படி விரும்பினார். வேதத்தை வாசித்துத் தியானிக்க நேரத்தைச் செலவிடும்போது, தன இளம் சீடன் பொலத்தையும் ஞானத்தையும் பெறுவான் என்று நம்பினார்.

தேவன் தமது ஆவியினால் வேதத்தை நமக்கு ஜீவனுள்ளதாகத் தருகிறார். நாம் அதில் வாழும்போது, சியோ-ஹூ மற்றும் கிறிஸ்டினுக்கு செய்ததைப் போலவே, அவர் நம்மையும் அவரைப் போலவே மாற்றுகிறார்.

தேவனின் பேரன்பின் சுழற்சி

என் முப்பது வயதில், இயேசுவுக்கு என் வாழ்க்கையை அர்ப்பணித்தபின் புதிய விசுவாசியான என் உள்ளத்தில் அதிக கேள்விகள் இருந்தன. நான் வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கியபோது, கேள்விகள் இன்னும் அதிகமாயிற்று. "தேவனின் அனைத்து கட்டளைகளுக்கும் எப்படிக் கீழ்ப்படிய கூடும்? நான் இன்று காலைதான் என் கணவரை மனமுடையச் செய்துவிட்டேனே!" என்று ஒரு நண்பரிடம் கேட்டேன்.

"வேதாகமத்தை தொடர்ந்து வாசி, இயேசு உன்னை நேசிப்பது போல நீயும் பிறரை நேசிக்க உதவுமாறு பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடு" என்றாள் தோழி.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேவனுடைய பிள்ளையாக வாழ்ந்த பிறகு, அந்த எளிய ஆனால் ஆழமான சத்தியம் அவருடைய பேரன்பின் சுழற்சியின் மூன்று படிகளை கடைப்பிடிக்க இன்னும் எனக்கு உதவுகிறது: முதலாவதாக, அப்போஸ்தலன் பவுல், இயேசுவை பின்பற்றுவோர் வாழ்வில் அன்பே மையமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினார். இரண்டாவதாக, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் "ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கான கடனை" கடைப்பிடிப்பதின் மூலம், ஆண்டவருக்கு கீழ்ப்படிவார்கள். "பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்." (ரோமர் 13:8). இறுதியாக, "அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது;"(வ.10) என்பதால் இதைச் கடைப்பிடிப்பதின் மூலம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம்.

 

கிறிஸ்து சிலுவையில் நமக்காகப் பலியாகக் கொடுக்கப்பட்டதால் தேவனுடைய பேரன்பை நாம்  அனுபவித்திருப்பதால், நாம் நன்றியுள்ள இருதயத்தோடு இவ்வன்பைப் பிரதிபலிக்க முடியும். இயேசுவுக்கான நமது நன்றியுணர்வு, நமது வார்த்தைகள், செயல்கள் மற்றும் மனப்பான்மைகளால் மற்றவர்களை நேசிக்க வழிவகுக்கிறது. அன்பாகவே இருக்கும் உண்மையான தேவனிடமிருந்தே அந்த மெய்யான அன்பு பாய்ந்தோடுகிறது, (1 யோவான் 4:16,19).

அன்பு தேவனே, உம் பேரன்பின் சுழற்சியினால் இயங்கிட எங்களுக்கு உதவும்!

தாழ்த்தப்படுதல்

பெருமை கனவீனத்திற்கு வழிவகுக்கிறது என்பதை நார்வேயில் உள்ள ஒருவன் அறிந்துகொண்டான். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் உலக சாதனை படைத்த கார்ஸ்டன் வார்ஹோல்முவிடம், ஓடுவதற்கு ஏற்ற உடைகள் கூட அணியாத ஒருவன் தன்னுடன் போட்டிப்போடும்படி, திமிராகச் சவால் விடுத்தான். உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி செய்துகொண்டிருந்த வார்ஹோம், சவாலை ஏற்று அவனைத் தோற்கடித்தார். எல்லைக்கோட்டில், தனக்குச் சரியான துவக்கம் கிடைக்கவில்லையென்றும், மீண்டும் பந்தயம் நடத்த வேண்டுமென்றும் அவன் கூறியபோது இரண்டு முறை உலக சாம்பியனான அவர் நகைத்தார்!

"மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்" என நீதிமொழிகள் 29:23-ல் நாம் வாசிக்கிறோம். நீதிமொழிகளின் புத்தகத்தில் தேவன் அகந்தை உள்ளவர்களை நடத்தும் விதத்தைப் பற்றி எழுதுவது சாலொமோனுக்கு பிடித்த ஒன்றாகும் (11:2; 16:18; 18:12). இந்த வசனங்களில் அகந்தை அல்லது இறுமாப்பு என்ற வார்த்தைக்கு " புடைத்தல்" அல்லது "பொங்குதல்" என்று பொருள். அது தேவனுக்குரிய கனத்தை நாம் எடுத்துக்கொள்வதாகும். நாம் அகந்தைக்கொள்கையில்,  நம்மைப் பற்றி இருப்பதை விட உயர்வாக நாம் நினைக்கிறோம்.

இயேசு ஒருமுறை, "தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" (மத்தேயு 23:12) என்றார். அவரும், சாலொமோனும் தாழ்மையையும், பணிவையும் பின்பற்ற நம்மை நடத்துகிறார்கள். இது மாய்மாலமான தாழ்மை அல்ல, மாறாக, நம்மை சரிப்படுத்தி, நம்மிடம் உள்ள அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை ஒப்புக்கொள்வதாகும்.  தன் வார்த்தைகளில் பதறாமல் (நீதிமொழிகள் 29:20) ஞானமாய் இருப்பதாகும்.

அவரைக் கனப்படுத்துவதற்கும் அவமானத்தைத் தவிர்ப்பதற்கும், நம்மைத் தாழ்த்திக்கொள்ளும் இதயத்தையும் ஞானத்தையும் நமக்குத் தரும்படி தேவனிடம் கேட்போம்.

சுவர்களில் தேவதூதர்கள்

வாலஸ் மற்றும் மேரி பிரவுன் இருவரும் இங்கிலாந்தின் ஏழ்மையான பகுதிக்கு குடிபெயர்ந்து, மரித்த நிலையில் இருக்கும் ஒரு திருச்சபையின் போதகராக பணியாற்றிட சென்றனர். ஒரு கூட்டத்தினர் தங்கள் திருச்சபைக்குச் சொந்தமான மைதானத்தையும் வீட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குத் தெரியாது. இக்கூட்டம்  ஜன்னல் வழியாகச் செங்கற்களை வீசி, வேலிகளுக்கு தீ வைத்து, குழந்தைகளை மிரட்டினர். இந்த தாக்குதல் பல மாதங்கள் தொடர்ந்தது; காவல்துறையால் கூட அவர்களைத் தடுக்க முடியவில்லை.

நெகேமியாவின் புத்தகம் இடிபட்ட எருசலேமின் அலங்கத்தை மீண்டும்  இஸ்ரவேலர்கள் எவ்வாறு கட்டினர் என்பதை விவரிக்கிறது. அதன் உள்ளூர் வாசிகள் "பிரச்சினையைத் தூண்டி", யுத்தத்தினால் எதிர்க்கையில் (நெகேமியா 4:8), இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி. . .ஜாமங்காக்கிறவர்களை வைத்தனா் (வ. 9). இந்த வேதபகுதியின் மூலம் தேவன் வழிநடத்துவதை உணர்ந்த பிரவுன் குடும்பத்தினர் மற்றும் சிலர், அவர்கள் ஆலயத்தை சுற்றி நடந்து, தேவன் தங்களது சுற்று சுவர்களில் தங்களைக் காக்கும்படி தூதர்களை நிறுத்தும்படி ஜெபித்தனர். இதைக் கண்ட அந்த கும்பல் கேலி செய்தது, ஆனால் அடுத்த நாள், அவர்களில் பாதி பேர் மட்டுமே வந்தனர். அதற்கு அடுத்த நாள், ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்; மறுநாள், யாரும் வரவில்லை. பின்னர் அந்த கும்பல் மக்களை அச்சுறுத்துவதைக் கைவிட்டதாக ஊழியர்கள் கேள்விப்பட்டனர்.

ஜெபத்திற்கான இந்த அற்புதமான பதில், நமது சொந்த பாதுகாப்பிற்கான சூத்திரம் அல்ல. மாறாக ஊழியத்திற்கு எதிர்ப்புகள் வரும், அதை ஜெபமென்னும் ஆயுதத்தால் போரிட வேண்டும் என்பதையே நினைவூட்டுகிறது. நெகேமியா இஸ்ரவேலர்களுக்கு சொன்னது "மகத்துவமும் பயங்கரமுமுள்ள கர்த்தரை நினைவுகூருங்கள்" (வ. 14). கொடுமை நிறைந்த இருதயங்களை கூட தேவன் விடுவிப்பார்.