Archives: நவம்பர் 2023

சாகசம்

“கிறிஸ்தவம் எனக்கானது அல்ல. அது சலிப்பு தட்டுகிறது. நான் சாகசம் செய்ய விரும்புகிறேன். அதுதான் எனக்கு வாழ்க்கை” என்று ஒரு இளம் பெண் என்னிடம் கூறினார். இயேசுவைப் பின்தொடர்வதன் மூலம் வரும் நம்பமுடியாத மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அவள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது. இந்த ஆச்சரியமான சாகசம் வேறு எதனுடனும் ஒப்பிடமுடியாது. இயேசுவைப் பற்றியும் அவரில் உண்மையான வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும் அவளிடம் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டேன்.

தேவகுமாரனாகிய இயேசுவை அறிந்து, அவருடன் நடந்த ஆச்சரியமான சாகசத்தை விவரிக்க வெறும் வார்த்தைகள் போதாது. ஆனால் எபேசியர் 1ல், அப்போஸ்தலனாகிய பவுல், அவருடனான வாழ்க்கையைப் பற்றிய ஒரு சிறிய ஆனால் சக்திவாய்ந்த காட்சியை நமக்குத் தருகிறார். தேவன் நமக்கு நேரடியாக பரலோகத்திலிருந்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தருகிறார் (வச. 3), தேவனுடைய பார்வையில் பரிசுத்தம் மற்றும் குற்றமற்ற தன்மை (வச. 4), மற்றும் அவருடைய சொந்த குடும்பத்தின் அங்கத்தினராய் நம்மை தெரிந்துகொள்ளுதல் (வச. 5). அவருடைய மன்னிப்பு மற்றும் கிருபை (வச. 7-8), அவருடைய சித்தத்தின் மர்மத்தைப் புரிந்துகொள்வது (வச. 9) மற்றும் “அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு” (வச. 12) ஒரு புதிய நோக்கத்துடன் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பலப்படுத்தவும் வழிநடத்தவும் நமக்குள் கிரியை நடப்பிக்கிறார் (வச. 13). மேலும் அவர் தேவனுடைய பிரசன்னத்தில் நித்தியவாழ்விற்கு நமக்கு உத்தரவாதம் அளிக்கிறார் (வச. 14).

இயேசு கிறிஸ்து நம் வாழ்வில் பிரவேசிக்கும்போது, அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதும், அவரைப் பின்தொடர்வதும் மிகப்பெரிய சாகசமாகும். மெய்யான வாழ்க்கை வாழுவதற்கு நாம் ஒவ்வொருநாளும் அவரை தேடுவோம்.

தேவனின் மகத்துவங்களை சொல்லுங்கள்

எங்கள் சபையின் சாட்சி நேரத்தில், ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் தேவன் எவ்வாறு கிரியை செய்தார் என்பதை சாட்சியாய் பகிருவார்கள். ஆன்ட்டி அல்லது சகோதரி லாங்ஃபோர்ட் என்று எங்கள் சபைக் குடும்பத்தினரால் அறியப்பட்ட அவர், தேவனை மனதார துதிப்பதில் பெயர்பெற்றவர். அவர் தனது இரட்சிப்பின் சாட்சியை பகிர்ந்துகொண்டபோது, ஒரு அழகான ஊழியத்தை செய்வார் என்று எவரும் எதிர்பார்க்கலாம். ஆம்! தன்னுடைய ஜீவியத்தை கிருபையாய் மாற்றி தேவனுக்கு துதி செலுத்த அவருடைய இருதயம் துடித்தது. 

இதேபோல், 66 ஆம் சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரனின் சாட்சியில், தேவன் தன்னுடைய ஜனங்களுக்கு செய்த நன்மைகளை எண்ணி அவருடைய இருதயம் பூரிப்படைகிறது. “தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுப்புத்திரரிடத்தில் நடப்பிங்குங் கிரியையில் பயங்கரமானவர்” (வச. 5). அற்புதமான விதத்தில் அவர்களை தேவன் நடத்திவந்தார் (வச. 6). பாதுகாத்தல் (வச. 9) மற்றும் உபத்திரவம் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றின் பாதையில் கடந்து நன்மையான இடத்தை அவருடைய ஜனங்கள் அடைந்திருக்கின்றனர் (வச. 10-12). கிறிஸ்தவ விசுவாசிகளுடன் நமக்கு சில பொதுவான வாழ்க்கை அனுபவங்கள் இருப்பினும், ஒவ்வொருவருடைய வாழ்க்கைப் பயணத்திலும் பிரத்யேகமான அனுபவங்கள் அவரவர்க்கு கிடைக்கின்றன. தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பித்த தருணங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்டா? உங்கள் வாழ்க்கையில் அவர் எவ்வாறு கிரியை செய்தார் என்பதைக் கேட்க வேண்டிய மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மதிப்புக்குரியது. “தேவனுக்கு பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்” (வச. 16).

தேவையானது ஒன்றே

மார்ச் மாதத்தின் ஒரு வார இறுதியில், பெத்தானியாவில் வசித்த இயேசுவின் நேசத்திற்கு பாத்திரமான மரியாள், மார்த்தாள் அவர்களுடைய சகோதரனாகிய லாசுரு (யோவான் 11:5) என்னும் தலைப்பில் ஒரு ஐக்கிய கூடுகையை நான் நடத்த நேரிட்டது. நாங்கள் ஆங்கிலேய கடற்கரையோரத்திலிருந்து தொலை தூரத்தில் இருந்தோம். அங்கு எதிர்பாராத விதமாக பனிப்பொழிவு ஏற்பட்டபோது, பங்கேற்பாளர்களில் பலர், மரியாளைப் போலவே கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து இன்னுமொரு நாள் பயிற்சி செய்யலாம் என்று தீர்மானித்தனர். இயேசு மார்த்தாளிடத்தில் அன்பாய் சொன்ன, “தேவையானது ஒன்றே” (லூக்கா 10:42) என்ற வாக்கியத்திற்கிணங்க, அவரை நெருங்கி அவரிடத்தில் கற்றுக்கொள்ள தீர்மானித்தோம். 

இயேசு, மார்த்தாள் - மரியாள் - லாசரஸ் வீட்டிற்குச் சென்றபோது, அவர் வருவதை முன்கூட்டியே மார்த்தாள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் உணவளிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்ட மார்த்தாள், ஏன் மரியாளிடம் கோபப்பட்டால் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் உண்மையில் முக்கியமானது எது என்பதை அவள் அறியாதிருந்து, அவரிடத்திலிருந்து கற்றுக்கொண்டாள். இயேசுவுக்கு அவள் சேவை செய்ய விரும்பியதற்காய் இயேசு அவளை திட்டவில்லை. மாறாக, அவள் மிக முக்கியமான விஷயத்தை இழக்கிறாள் என்பதை அவளுக்கு நினைவூட்டினார்.

குறுக்கீடுகள் நம்மை எரிச்சலடையச் செய்யும்போது அல்லது நாம் சாதிக்க விரும்பும் பல விஷயங்களைப் பற்றி அதிகமாக உணரும்போது, வாழ்க்கையில் உண்மையில் என்ன முக்கியம் என்பதை நாம் நிறுத்தி நிதானிக்கவேண்டும். நாம் நம்மை நிதானப்படுத்தி, இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்து அவருடைய அன்பினாலும் ஜீவனாலும் நம்மை நிரப்பும்படிக்கு நாம் அவரை வேண்டிக்கொள்ளலாம். அவருடைய அன்பான சீஷனாயிருப்பதில் நாம் மகிழ்ச்சியடையலாம்.

இனி உன் பாவங்கள் நினைவுகொள்ளப்படாது

நான் பனியைப் பார்த்ததில்லை. ஆனால் நான் அதை உணர்ந்திருக்கிறேன். நான் என்னுடைய தாத்தாவின் லாரியை வீட்டின் பின்புறமாக ஓட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று வந்த அந்த வளைவு என்னை நிலைகுலையச் செய்து, பதினைந்து அடி சுவரை தகர்த்துக்கொண்டு, லாரியும் நானும் காற்றில் பறக்க ஆரம்பித்தோம். இந்த விபத்திலிருந்து தப்பித்து நான் உயிர்பிழைத்தால் நலமாயிருக்கும் என்று யோசித்தேன். சிறிது நேரம் கழித்து, லாரி செங்குத்தான சரிவில் நொறுங்கி கீழே உருண்டது. நொறுக்கப்பட்ட வண்டியிலிருந்து நான் காயமடையாமல் ஊர்ந்து வெளியே வந்தேன். 

டிசம்பர் 1992, காலை லாரி முற்றிலுமாக சேதத்திற்குள்ளாகி நொறுங்கியது. தேவன் என்னை சேதமின்றி பாதுகாத்தார். ஆனால் என் தாத்தா என்ன சொல்லப்போகிறார் என்று பயந்தேன். அவர் சேதமடைந்த லாரியைக் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. என்னை அவர் திட்டவும் இல்லை. அதை பழுதுபார்ப்பது குறித்தோ என்னிடம் ஆலோசனை எதுவும் நடத்தவும் இல்லை. முழுமையான மன்னிப்பு. மேலும் எனக்கு ஒன்றும் பாதிப்பில்லாதது குறித்து அவர் புன்னகைத்தார். 

என் தாத்தாவின் கிருபை எரேமியா 31-ல் உள்ள தேவனின் கிருபையை எனக்கு நினைவூட்டுகிறது. அங்கு அவர்களுடைய மிகப்பெரிய தோல்விகள் இருந்தபோதிலும், தேவன் தம் ஜனங்களுக்கு “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” (வச. 34) என்று வாக்களிக்கிறார். 

நான் அவருடைய லாரியை உடைத்ததை என் தாத்தா ஒருபோதும் மறக்கமாட்டார் என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் இங்கே தேவனைப் போல நடந்து கொண்டார். அதை நினைவில் கொள்ளவில்லை, என்னை அவமானப்படுத்தவில்லை, நான் செலுத்த வேண்டிய கடனை அடைக்க என்னை வேலை செய்ய சொல்லுவும் இல்லை. தேவன் சொன்னதைப்போலவே, நான் செய்த அழிவு நடக்காதது போல், என் தாத்தா அதை இனி நினைவுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை.

முகவரி அட்டையும் ஜெபமும்

சமீபத்தில் விதவையான பெண் ஒருவள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தாள். இன்ஷ_ரன்ஸ் பாலிசியில் இருந்து சில முக்கிய நிதிகளைச் சேகரிக்க, கணவரின் உயிரைப் பறித்த விபத்து பற்றிய முக்கிய தகவல்கள் அவளுக்குத் தேவைப்பட்டன. அவளுக்கு உதவுவதாகக் கூறிய ஒரு போலீஸ் அதிகாரியிடம் அவள் பேசினாள். ஆனால் அவள் அவருடைய முகவரி அட்டையை தொலைத்துவிட்டாள். அதனால் அவள் உதவிக்காக தேவனிடம் மன்றாடி ஜெபித்தாள். சிறிது நேரம் கழித்து, அவள் தேவாலயத்தின் வெளிப்புறமாக நடந்துசென்றுகொண்டிருக்கையில் தேவாலயத்தின் ஜன்னல் ஒன்றில் ஒரு முகவரி அட்டையைப் பார்த்தாள். ஆம், அவள் தொலைத்த அதே போலீஸ்காரரின் அட்டை. அது எப்படி அங்கு வந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் அது ஏன் அங்கு வந்தது என்பது அவளுக்குத் தெரியும்.

அவள் ஜெபத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டாள். ஏன் கூடாது? தேவன் நம் விண்ணப்பங்களுக்கு செவிசாய்க்கிறார் என்று வேதம் கூறுகிறது. பேதுரு சொல்லும்போது “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதல்களுக்குக் கவனமாயிருக்கிறது” (1 பேதுரு 3:12) என்று கூறுகிறார். 

ஜெபத்திற்கு தேவன் எவ்வாறு பதிலளித்தார் என்பதற்கு வேதாகமம் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறது. அதில் வியாதிப்பட்ட யூதேயாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் ஒருவர். அவர் மரித்துவிடுவார் என்று ஏசாயா தீர்க்கதரிசியே தீர்க்கதரிசனம் சொல்லிவிட்டார். ஆனால் ராஜாவே என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தான். “அவன் கர்த்தரை நோக்கி... விண்ணப்பம்பண்ணினான்” (2 இராஜ. 20:2). உடனே தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை நோக்கி, “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்” (வச. 5) என்று அவனிடம் சொல்லும்படிக்கு சொன்னார். எசேக்கியாவுக்கு மேலும் பதினைந்து ஆண்டுகள் ஆயுள் கூட்டப்பட்டது.

ஜன்னலில் அட்டை தென்பட்டதுபோல தேவன் எப்போதும் நமக்கு பதிலளிப்பதில்லை. ஆனால் கடினமான சூழ்நிலைகள் எழும்போது, அவற்றை நாம் தனியாக எதிர்கொள்ள மாட்டோம் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார். தேவன் நம்மைப் பார்க்கிறார், அவர் நம்முடன் இருக்கிறார் - நம் ஜெபங்களைக் கேட்கிறார்.