நான் பனியைப் பார்த்ததில்லை. ஆனால் நான் அதை உணர்ந்திருக்கிறேன். நான் என்னுடைய தாத்தாவின் லாரியை வீட்டின் பின்புறமாக ஓட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று வந்த அந்த வளைவு என்னை நிலைகுலையச் செய்து, பதினைந்து அடி சுவரை தகர்த்துக்கொண்டு, லாரியும் நானும் காற்றில் பறக்க ஆரம்பித்தோம். இந்த விபத்திலிருந்து தப்பித்து நான் உயிர்பிழைத்தால் நலமாயிருக்கும் என்று யோசித்தேன். சிறிது நேரம் கழித்து, லாரி செங்குத்தான சரிவில் நொறுங்கி கீழே உருண்டது. நொறுக்கப்பட்ட வண்டியிலிருந்து நான் காயமடையாமல் ஊர்ந்து வெளியே வந்தேன். 

டிசம்பர் 1992, காலை லாரி முற்றிலுமாக சேதத்திற்குள்ளாகி நொறுங்கியது. தேவன் என்னை சேதமின்றி பாதுகாத்தார். ஆனால் என் தாத்தா என்ன சொல்லப்போகிறார் என்று பயந்தேன். அவர் சேதமடைந்த லாரியைக் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. என்னை அவர் திட்டவும் இல்லை. அதை பழுதுபார்ப்பது குறித்தோ என்னிடம் ஆலோசனை எதுவும் நடத்தவும் இல்லை. முழுமையான மன்னிப்பு. மேலும் எனக்கு ஒன்றும் பாதிப்பில்லாதது குறித்து அவர் புன்னகைத்தார். 

என் தாத்தாவின் கிருபை எரேமியா 31-ல் உள்ள தேவனின் கிருபையை எனக்கு நினைவூட்டுகிறது. அங்கு அவர்களுடைய மிகப்பெரிய தோல்விகள் இருந்தபோதிலும், தேவன் தம் ஜனங்களுக்கு “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” (வச. 34) என்று வாக்களிக்கிறார். 

நான் அவருடைய லாரியை உடைத்ததை என் தாத்தா ஒருபோதும் மறக்கமாட்டார் என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் இங்கே தேவனைப் போல நடந்து கொண்டார். அதை நினைவில் கொள்ளவில்லை, என்னை அவமானப்படுத்தவில்லை, நான் செலுத்த வேண்டிய கடனை அடைக்க என்னை வேலை செய்ய சொல்லவும் இல்லை. தேவன் சொன்னதைப்போலவே, நான் செய்த அழிவு நடக்காதது போல், என் தாத்தா அதை இனி நினைவுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை.