Archives: பிப்ரவரி 2023

எழுப்புதல் வருகிறது

அருகுன் என்பது மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிறிய பட்டணம். அதன் பழங்குடி மக்கள் ஏழு வகையான குலங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அருகுனுக்குச் சுவிசேஷம் அறிவிக்கப்படுகையில், அங்குப் பழிக்குப் பழிவாங்கும் நடைமுறை இருந்தது. 2015 ஆம் ஆண்டில் இனச்சண்டைகள்  அதிகரித்தன, மேலும் ஒரு கொலை நடந்தபோது, ​​​​குற்றவாளியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைப் பதிலுக்குக் கொலை செய்யப்பட வேண்டியிருந்தது.

ஆனால் 2016 இன் ஆரம்பத்தில் வியத்தகு காரியம் ஒன்று நடந்தது. அருகுன் மக்கள் ஜெபத்தில் தேவனைத் தேடத் தொடங்கினர். மனந்திரும்புதல், பின்னர் வெகுஜன ஞானஸ்நானம், பின்னர் எழுப்புதல் நகரம் முழுவதும் பரவத் தொடங்கியது. மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தெருக்களில் நடனமாடினர். பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையான நபரின் குடும்பம், கொலைசெய்த குலத்தை மன்னித்தது. விரைவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 1,000 பேர் தேவாலயத்திலிருந்தனர். அது வெறும் 1,300 பேர் மட்டுமே உள்ள ஒரு பட்டணம்!

எசேக்கியாவின் நாட்களில் ஜனங்கள் மகிழ்ச்சியுடன் தேவனிடம் திரும்பியதைப் போல (2 நாளாகமம் 30), ஆயிரக்கணக்கானவர்கள் மனந்திரும்பிய பெந்தெகொஸ்தே நாளைப்போல (அப்போஸ்தலர் 2:38-47) பல எழுப்புதல்களை வேதத்தில் காண்கிறோம். எழுப்புதல் என்பது தேவனின் செயலாக இருந்தாலும், அவர் திட்டமிட்ட காலத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அதற்கு முந்தியதாக ஜெபம் இருந்ததை வரலாறு காட்டுகிறது. “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளாகமம் 7:14) என்று தேவன் சாலொமோனிடம் கூறினார்.

அருகுன் மக்கள் கண்டுகொண்டது போல், எழுப்புதல் ஒரு நகரத்திற்கு மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் தருகிறது. நமது சொந்த நகரங்களுக்கு இத்தகைய மாற்றம் எவ்வளவு தேவை! தகப்பனே, எங்களுக்கும் எழுப்புதல் அருள்வீராக.

ஜெபக்குறிப்பு அட்டைகள்

புத்தக ஆசிரியர்களுக்கான ஒரு கலந்துரையாடலில் நானும் பணியாற்றிய போது, ​​என் தோழி ஒரு அஞ்சல் அட்டையைக் கொடுத்தாள் அதன் பின்புறம் தன் கைப்பட எழுதிய ஜெபம் ஒன்றும் இருந்தது. அவள், அந்த கலந்துரையாடலில் இருந்த ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததாகவும், ஒவ்வொரு அட்டையிலும் குறிப்பிட்ட ஜெபத்தை எழுதி, எங்களிடம் கொடுத்தபோது தானும் ஜெபித்ததாகவும் கூறினாள். எனக்கான அவளுடைய தனிப்பட்ட செய்தியால் பிரமிப்படைந்த நான், என் தோழி மூலம் என்னை ஊக்குவித்த தேவனுக்கு நன்றி கூறினேன். பின்னர் நானும் அவளுக்காக ஜெபித்தேன். நிகழ்ச்சியின்போது வலி மற்றும் சோர்வுடன் நான் போராடியபோது, ​​அந்த ஜெபக்குறிப்பு அட்டையை வெளியே எடுத்தேன். அதை மீண்டும் படித்தபோது தேவன் என் ஆவிக்குப் புத்துணர்ச்சி அளித்தார்.

பிறர் வாழ்க்கையை உறுதிப்படுத்தும் ஜெபத்தின் தாக்கத்தை அப்போஸ்தலர் பவுல் அறிந்திருந்தார். " வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்" (எபேசியர் 6:12) போராடத் தயாராகும்படி விசுவாசிகளை அவர் வலியுறுத்தினார். அவர் இடைவிடாத மற்றும் நோக்கம் நிறைந்த ஜெபங்களை ஊக்குவித்தார், அதே சமயம் நாம் ஒருவருக்கொருவர் பரிந்து பேசும் மன்றாட்டு ஜெபத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். பவுலும் தமக்கு தைரியம் உண்டாகத்  தமது சார்பான ஜெபங்களையும் கோரினார். "சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத்திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்." (வச. 19-20).

நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஆறுதல் அளித்து, நமது தீர்மானங்களைப் பலப்படுத்துகிறார். நமக்கு அவரும், பிறரும் தேவை என்று அவர் உறுதிப்படுத்துகிறார், ஒவ்வொரு ஜெபத்தையும் அவர் கேட்கிறார் என்று உறுதியளிக்கிறார்.  மௌனமாகவோ, சொல்லப்பட்டதோ அல்லது அட்டையில் எழுதப்பட்டதோ அவர் ஜெபங்களுக்குத் தமது பரிபூரண சித்தத்தின்படி பதிலளிக்கிறார்.

மெய்யான அன்பு

ல்லாரும் அன்புக்காக ஏங்குகிறோம். ஆனால் மெய்யான அன்பு எப்படியிருக்கும்? அதைக் கண்டடைந்தோம் என்று எவ்வாறு அறிந்துகொள்ளலாம்? சிலருக்கு இது வார்த்தையால் விவரிக்க இயலாத காதல் வயப்படும் உணர்வாகும். ஆனால் வேதாகமத்தில் உள்ள காலத்தை வென்ற அதின் ஞானமானது, அன்பிற்கு இன்னும் அர்த்தமுள்ள மற்றும் நிலைத்திருக்கும் ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது.

பின்வரும் பக்கங்களில் போதகரும், வேதாகம ஆசிரியருமான பில் கிரவுடர், 1 கொரிந்தியர் 13:4-8 இல் உள்ள வார்த்தைகளின் தாக்கத்தை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க நமக்கு உதவுகிறார். பாப் லிண்ட் எனும் பாடலாசிரியர், அன்பை "கைநழுவும் பிரகாசமான பட்டாம்பூச்சி"…

முற்றிலும் தூய்மையாக்கப்பட்ட

சமீபத்தில், விருந்தினர் வருவதற்கு முன்பு நானும் என் மனைவியும் எங்கள் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தோம். எங்கள் சமையலறையின் வெள்ளை தரையில் சில கருப்பு கறைகளை நான் கவனித்தேன். அதை முழங்கால் ஊன்றி  தேய்க்க வேண்டியிருந்தது. 

ஆனால் எனக்கு விரைவில் ஒன்று தோன்றியது: நான் எவ்வளவு அதிகமாகத் துடைத்தாலும், மற்ற கறைகளை நான் கவனித்தேன். நான் நீக்கிய ஒவ்வொரு கறையும் மற்றதை மிகவும் தெளிவாக்கியது. திடீரென்று எங்கள் சமையலறையின் தளத்தைச் சுத்தமாக்குவது இயலாமல்போனது. நான் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், என்னால் இந்த தரையை முழுமையாகச் சுத்தம் செய்ய முடியாது என்று ஒவ்வொரு முறையும் நான் உணர்ந்தேன்.

சுய சுத்திகரிப்பு பற்றி வேதம் கூறுகிறது. பாவத்தை நாம் சொந்தமாகக் கையாள்வதில் நாம் எடுக்கும் சிறந்த முயற்சிகள் எப்போதும் தோல்வியடையும் . தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர்கள், அவருடைய இரட்சிப்பை அனுபவிக்கக் கூடாமல் இருப்பதால் (ஏசாயா 64:5) விரக்தியடைந்த ஏசாயா தீர்க்கதரிசி, “நாம் எல்லாரும் அசுத்தமானவர்களைப் போல் ஆனோம், எங்களுடைய நீதியான செயல்களெல்லாம் அழுக்கான துணியைப் போலிருக்கிறது”(வ. 6) என்றெழுதினார்.

ஆனால் தேவனின் கருணையின்  மூலம் எப்போதும் நம்பிக்கை இருப்பதை ஏசாயா அறிந்திருந்தார். ஆகையால், "நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர்" (வ. 8) என்று கெஞ்சினார். ஆழமான கறைகள் "உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்" வரை நம்மால் முடியாததைத் தேவன் ஒருவரே சுத்தம் செய்ய முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார் (1:18).

நம் ஆத்துமாக்களில் படிந்திருக்கும் பாவத்தின் கறைகளையும், அழுக்கையும் நாம் துடைக்க முடியாது. அதிர்ஷ்டவசமாக, நம்மை முழுமையாகச் சுத்திகரிக்கும் பலியாக மாறின அவரில் நாம் இரட்சிப்பைப் பெறலாம் (1 யோவான் 1:7).

அவருடைய ஒளியை பிரதிபலித்தல்

நிலப்பரப்புகள் அடங்கிய அவரது எண்ணெய்த்தாள் ஓவியங்களில், பிரதிபலிப்பு ஒளியின் அழகைப் படம்பிடிக்க, அந்த கலைஞர் ஒரு முக்கிய கலை சூட்சுமத்தைப் பின்பற்றுகிறார்: "பிரதிபலிக்கப்பட்ட ஒளி அதன் மூல ஒளியைப் போல ஒருபோதும் வலுவாக இருக்காது." ஆனால் அனுபவமற்ற  ஓவியர்கள் பிரதிபலிக்கப்பட்ட ஒளியை மிகைப்படுத்துவதாகக் கூறுகிறார். அவர் "பிரதிபலிக்கப்பட்ட ஒளி நிழலுக்குச் சொந்தமானது, எனவே ஓவியத்தின் ஒளிரும் பகுதிகளுடன் போட்டியிடாமல் அதற்கு இசைவாய் இருக்கவேண்டும்." என்கிறார்.

"மனுஷருக்கு ஒளியாயிருந்தது" (யோவான் 1:4) என்று வேதம் இயேசுவைக் குறிப்பிடுவதில் இதேபோன்ற ஒர் உட்கருத்தை நாம் காண்கிறோம். யோவான் ஸ்நானன் "தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்" (வ. 7). சுவிசேஷ ஆக்கியோன் "அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்." (வ. 8) என்கிறார்.

யோவானை போலவே, விசுவாசமற்ற உலகத்தின் இருளில் வாழ்பவர்களுக்கு கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிக்க நாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டோம். ஒருவர் சொல்வதுபோல "ஒருவேளை அவிசுவாசிகள் அவருடைய ஒளியின் முழு மகிமையையும் நேரடியாகத் தாங்க கூடாமற்போகலாம்" என்பதால் இது நமது பொறுப்பு.

அந்த ஓவிய ஆசிரியர் தமது மாணவர்களுக்கு "ஒர் ஓவியத்தில் நேரடி ஒளி எதன்மீது விழுந்தாலும், அது ஒளியின் ஆதாரமாக மாறும்" என்று கற்பிக்கிறார். அதேபோல, இயேசுவே “எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.” (வச. 9), நாம் சாட்சிகளாகப் பிரகாசிக்க முடியும். நாம் அவரைப் பிரதிபலிக்கும்போது, ​​அவருடைய மகிமை நம் மூலம் பிரகாசிப்பதைக் கண்டு உலகம் வியக்கட்டும்.