ராகுலுக்கும் நிஷாவிற்கும் அந்த வாரம் கடினமானதாயிருந்தது. ராகுல், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருந்தொற்று பாதிப்பின் நாட்களில், வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருந்து அவருடைய நான்கு பிள்ளைகளும் சோர்ந்துபோயிருந்தனர். அத்துடன் மிஞ்சியிருந்த மளிகைப் பொருட்களைக் கொண்டு நல்ல ஆகாரத்தை நிஷாவினால் சமைக்க முடியவில்லை. அந்த தருணத்தில், கேரட் சாப்பிடவேண்டும் என்று அவள் ஏங்கினாள்.
சரியாய் ஒருமணி நேரம் கழித்து, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அவருடைய சினேகிதி அனிதாவும் அபிஷேக்கும் அவர்களுக்காய் நேர்த்தியான உணவைச் சமைத்துக்கொண்டு வந்திருந்தனர். அதில் கேரட்டும் இடம்பெற்றிருந்தது.
பிசாசுக்கு எல்லாம் தெரியுமா? இல்லை. தேவனுக்கு எல்லாம் தெரியும் என்பதைப் பிரதிபலிக்கும் ஆச்சரியமான ஒரு யூத கதை உள்ளது. பார்வோன், “பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிட… கட்டளையிட்டான்” (யாத்திராகமம் 1:22). அந்த படுகொலைச் சம்பவம் அதி உன்னதமான ஒரு காரியத்தை நிகழ்த்தியது. மோசேயின் தாயும் தன் பிள்ளையைப் பாதுகாப்பாய் நதியில் மிதக்க விடுகிறாள். அந்த நைல் நதியிலிருந்து தேவ ஜனத்தை பின் நாட்களில் மீட்கப்போகும் குழந்தையை பார்வோன் குமாரத்தி மீட்டெடுக்கிறாள். அந்த குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை அவனுடைய தாயிடத்திலேயே ஒப்படைத்ததே ஆச்சரியம் (2:9).
இந்த யூத தேசத்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட ஒரு பிள்ளை உதிக்கும். அதனுடைய வாழ்க்கை ஆச்சரியம் நிறைந்ததாயும் தெய்வீக தொடுதல் நிரம்பியதாயிருக்கும். அனைத்திற்கும் மேலாக, நம்முடைய பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து இயேசு நம்மை மீட்டெடுக்கும் பாதையை நமக்குக் காட்டுவார்.
கடினமான சூழ்நிலைகளும் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. “தேவன் எனக்கு கேரட் கொடுத்தார்” என்று நிஷா பெருமிதம் கொள்ளுகிறாள்.