கிளென்டா திருச்சபையின் வளாகத்திற்குள் நுழையும்போதே அவளுக்குள்ளிருந்த மகிழ்ச்சி அந்த அறையையே நிரப்பிற்று. அவர் கடினமான மருத்துவச் சிகிச்சை பெற்று, மீண்டு வந்திருக்கிறார். ஆலய ஆராதனை முடிந்து, நாங்கள் வழக்கமாய் சந்திக்கும்போது, அவர் என்னோடு சேர்ந்து கண்ணீர் சிந்திய கடினமான தருணங்களுக்காகவும், அவருடைய மென்மையான கடிந்துகொள்ளுதலுக்காகவும் என்னை உற்சாகப்படுத்தியதற்காகவும் நான் தேவனுக்கு நன்றி சொன்னேன். சூழ்நிலை எதுவாயினும், என்னுடைய பிரச்சினைகளை வெளிப்படையாய் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்து, தேவனுக்கு நன்றி சொல்லும் காரணங்களை எனக்கு அவர் நினைப்பூட்டுவார்.
அவர்களை “கிளென்டா அம்மா” என்று அன்போடு அழைக்க அனுமதித்த அவர்கள், என்னை கட்டித் தழுவினார். “மகளே” என்று அணைத்துக்கொண்டார். நாங்கள் சிறிதுநேரம் பேசி ஜெபித்தோம். அதற்குப் பின், மற்றவர்களையும் உற்சாகப்படுத்தும் பொருட்டு, பாடிக்கொண்டே என்னை விட்டு நகர்ந்தார்.
சங்கீதம் 64இல், தம்முடைய குற்றச்சாட்டுகளுடன் தாவீது தேவனை அணுகுகிறான் (வச.1). தன்னைச் சுற்றி பெருகும் அக்கிரமத்திற்கு விரோதமாய் தேவனிடத்தில் முறையிடுகிறான் (வச.2-6). ஆனால் தேவனுடைய வல்லமையின் மீதும் வாக்குத்தத்தத்தின் மீதான நம்பிக்கையை அவன் இன்னும் இழக்கவில்லை (வச.7-9). மேலும், “நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்” (சங்கீதம் 64:10) என்பதை நன்கு அறிந்திருந்தார்.
இயேசுவின் வருகைக்காய் காத்திருக்கும் தருணங்களில் நாம் கடினமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம். ஆனாலும், தேவன் படைத்த ஒவ்வொரு நாளிலும் மகிழ்ந்திருக்கும் காரணங்கள் எப்போதும் நமக்கு இருக்கும்.