திட்டங்களும் நடத்துதலும்
2000ஆம் ஆண்டு, வளர்ந்துவரும் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தை ரூ.375 கோடிக்கு மற்றொரு நிறுவனத்திற்கு விற்க முன்வந்தது. திரைப்படங்கள், மற்றும் வீடியோ கேம்களை வாடகைக்கு எடுக்கும் இந்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சுமார் 300000 சந்தாதாரர்களை கொண்டிருந்தது. ஆனால் அதே சமயத்தில், பெரிய திரைப்பட காணொலி நிறுவனங்களில் மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள் இருந்தனர். இவர்கள் இந்த சிறிய நிறுவனத்தை விலைகொடுத்து வாங்க மறுத்துவிட்டனர். அதன் விளைவு? இன்று நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 18 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களையும், 15 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனமுமாய் உருவெடுத்திருக்கிறது. வளர்ந்து வந்த மற்ற நிறுவனங்களெல்லாம், அதை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்காலத்தை யாராலும் தீர்மானிக்கமுடியாது.
நம்முடைய வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றும், நம்முடைய எதிர்காலம் சிறப்பானதாய் இருக்கும் என்றும் நாம் நம்புவதற்கு துண்டப்படுகிறோம். ஆனால் யாக்கோபு சொல்லும்போது, நம்முடைய வாழ்க்கையானது “கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே” (4:14) என்று குறிப்பிடுகிறார். வாழ்க்கை என்பது, சொற்பமானதும், துரிதமானதும், எளிதில் நொறுங்கக்கூடியதுமாயிருக்கிறது என்பதை நாம் உணர்வதுண்டு. திட்டமிடுதல் அவசியம் தான். ஆனால், நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் தான் அனைத்தும் இயங்குகிறது என்பது பாவம்.
ஆகையினால் தான் யாக்கோபு, “உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்டbமேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது” (வச. 16) என்று குறிப்பிடுகிறார். தேவனோடு உள்ள நெருங்கிய உறவின் மூலமே இந்த பழக்கத்திலிருந்து நாம் விடுபடமுடியும். நன்றியுள்ள ஜீவியமே, “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்” தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. நாம் தேவனை அணுகும்போது, நம்முடைய நிகழ்கால மற்றும் எதிர்கால திட்டங்களை ஆசீர்வதிக்கும்படிக்கு மட்டும் கேட்காமல், அவருடைய சித்தத்திற்கு உகந்த வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுப்போம். “ஆண்டவருக்குச் சித்தமானால்” (4:15) என்பதற்கான அர்த்தம் இதுவே.
கேட்டுப்பாருங்கள்!
என் வீட்டின் அடித்தளத்திலிருந்து என்னுடைய மனைவி ஷர்லியின் ஆனந்த கூச்சல் சத்தம் கேட்டது. ஒரு பத்திரிக்கையில் கட்டுரை எழுத அவள் மணிக்கணக்காய் போராடி, எழுதி முடிந்திருந்தாள். அதை எப்படி தொடர்ந்து எழுதுவது என்று குழம்பியிருந்த அவள் தேவனுடைய உதவியை நாடினாள். அவளுடைய முகநூல் நண்பர்களின் உதவியையும் நாடி அந்த கட்டுரையை குழு முயற்சியாய் நிறைவுசெய்தாள்.
பத்திரிக்கைக் கட்டுரை என்பது வாழ்க்கையில் சின்ன விஷயம். ஆனால் சிறிய விஷயங்கள் கூட வாழ்க்கையில் கவலையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தும். ஒருவேளை, நீங்கள் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் புதிய பெற்றோராய் இருக்கலாம், ஒரு மாணவனாய் கற்பதற்கு போராடிக்கொண்டிருக்கலாம், நேசித்தவர்களை இழக்கக் கொடுத்தவராய் இருக்கலாம். அல்லது வீடு, அலுவலகம், ஊழியத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். சிலவேளைகளில் நாம் அவற்றோடு தனியாய் போராடிக்கொண்டிருக்கிறோம், ஏனெனில் நாம் தேவனிடத்தில் உதவி கேட்பதில்லை (யாக்கோபு4:2).
பிலிப்பு பட்டணத்து விசுவாசிகளுக்கும், நமக்கும் பவுல் “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6) என்று ஆலோசனை கொடுக்கிறார். வாழ்க்கையில் நம்பிக்கையிழக்கும் தருணங்களில், கீழ்க்கண்ட ஆங்கில பாடல் போன்று பாடல்களை நாம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்:
இயேசுவில் நமக்கு ஒரு நண்பர் இருக்கிறார், நாம் ஏன் சமாதானத்தை அடிக்கடி இழக்க வேண்டும், ஓ, என்ன தேவையற்ற வலியை நான் பொறுக்க வேண்டும், எல்லாவற்றையும் நான் சுமக்கத் தேவையில்லை, ஜெபத்தில் தேவனிடத்தில் ஒப்படைக்கிறேன்.
தேவனிடத்தில் நாம் உதவிக்காய் நாடும்போது, நமக்கு உதவிசெய்யும் நபர்களை தேவன் நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவருவார்.
நேர்த்தியாய் நிறைவுசெய்தல்
கடந்த சில ஆண்டுகளாக திருச்சபையில் கடினமான சூழல் நிலவுகின்றது. அது வெளிப்புற அச்சுறுத்தலால் அல்ல, நமது ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய தரக் குறைவால் விளைந்தது. கவனச்சிதறல், ஏமாற்றம் மற்றும் விரக்தியில் விழுந்தவர்களை தூக்கிட இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது. நேர்த்தியாய் நிறைவு செய்கின்ற இலக்கை நினைவுபடுத்துவதற்கு இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது.
மார்ட்டின் ஆர்.டி ஹான்
- மாற்றத்தை கிருபையோடும் தொலைநோக்குப் பார்வையோடும் எதிர்கொள்ளுதல்
- நேர்த்தியாய் நிறைவுசெய்யாத பக்தியுள்ள ராஜா
- நேர்த்தியாய் நிறைவுசெய்த முன்னாள் பரிசேயன்
- உங்களுடைய முடிவு கதை
நேர்த்தியாய் நிறைவுசெய்தல் என்பது, வாழ்க்கை என்னும் புத்தகத்தை…
உங்களுக்கு உதவி தேவைப்படும்போது
அது ஒரு திங்கட்கிழமை காலை நேரம். என்னுடைய நண்பர் தீபக் அலுவலகத்தில் இல்லை. அவர் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். ஒரு மாத காலமாய் வேலை இல்லாமையினால் சிரமப்பட்டார். கோவிட்-19 தொற்று காரணமாக அவருடைய நம்பிக்கை தகர்க்கப்பட்டு, எதிர்காலத்தைக் குறித்த பயம் அவரை ஆட்கொண்டது. அவருடைய குடும்பத்தை அவர் தாங்கவேண்டும் என்று அவர் எண்ணினார். உதவிக்கு எங்கு போவது?
சங்கீதம் 121:1இல் எருசலேமுக்கு பரதேசப் பயணம் மேற்கொண்ட சங்கீதக்காரன் தனக்கு ஒத்தாசை எங்கிருந்து வரும் என்ற அதே கேள்வியை கேட்கிறான். சீயோன் பர்வதத்தில் இருக்கும் பரிசுத்த நகரத்திற்கு போகும் பயணமானது நீண்ட ஆபத்தான பயணம். பல மலைகளை கடக்கவேண்டியிருக்கும். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களும் ஏறத்தாழ அவர்கள் சந்திக்கும் சவால்களைப் போன்றதே, வியாதி, உறவுமுறை பிரச்சனைகள், துயரம், வேலையில் மன உளைச்சல் என்பன. தீபக் பணத்தேவை மற்றும் வேலையில்லாமை ஆகிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கர்த்தரிடத்திலிருந்து நமக்கு ஒத்தாசை வரும் என்று நம்முடைய இருதயத்தை தேற்றிக்கொள்ள முடிகிறது (வச. 2).
அவர் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார் (வச. 3,5,7-8), நம்முடைய தேவை என்ன என்பது அவருக்குத் தெரியும். பார்த்துக்கொண்டிருத்தல் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட “ஷாமர்” என்னும் எபிரெய வார்த்தைக்கு “பாதுகாத்தல்” என்று பொருள். உலகத்தை உண்டாக்கிய தேவன் நமக்கு பாதுகாவலராயிருக்கிறார். அவருடைய பாதுகாப்பில் நாம் இருக்கிறோம். “தேவன் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் பாதுகாத்தார்: சரியான தருணத்தில் எனக்கு ஆசிரியர் வேலை கிடைக்கச் செய்தார்” என்று சமீபத்தில் தீபக் சாட்சி சொல்லக்கேட்டேன்.
நாம் தேவனை நம்பி ஒவ்வொரு அடியிலும் அவருக்கு கீழ்ப்படியும்போது, நாம் தேவனுடைய ஞானம் மற்றும் அன்பு என்னும் பாதுகாப்பு வளையத்திற்குட்பட்டிருக்கிறோம் என்பதை நாம் பார்க்க முடியும்.
இறங்குமிடம்
மான் குடும்பத்தை சேர்ந்த, இம்பாலா என்று அழைக்கப்படும் ஒருவகையான மான் இனம், பத்து அடி உயரம், முப்பது அடி நீளம் வரை தாவக்கூடியது. அது வாழும் ஆப்பிரிக்க காடுகளில், இந்த சுபாவம் அதற்கு தேவைதான். ஆனால் மிருகக்காட்சிசாலைகளில் இவ்வகை இம்பாலா மான்களை அடைத்து வைத்திருக்கும் இடத்தின் மதிற்சுவர்களின் உயரம் வெறும் மூன்று அடிதான் இருக்குமாம். இந்த அளவிற்கு உயரம் தாண்டக்கூடிய மான்களை குறுகிய சுவருக்குள் எப்படி அடைத்து வைக்கமுடியும்? இது எப்படி சாத்தியமாகிறது என்றால், இம்பாலா மான்கள் தரையிரங்கும் இடத்தை பார்க்க இயலாவிடில், அது தாவ முயற்சிக்காதாம். மூன்று அடி உயரமுள்ள சுவர்கள், தூரத்தை பார்க்கவிடாமல் அதின் பார்வையை மறைப்பதால், அந்த சுவரின் மறுபக்கத்தில் இருப்பதென்ன என்பது அதற்குத் தெரியாது, அதினால் அது தாவ முயற்சிக்காதாம்.
மனிதர்களாகிய நாமும் அதிலிருந்து வேறுபட்டவர்கள் இல்லை. நாம் அடுத்த அடி எடுத்து வைக்குமுன்னரே விளைவு என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். விசுவாச வாழ்க்கையும் சிலவேளைகளில் அப்படியிருக்கிறது. கொரிந்து சபைக்கு பவுல் எழுதும்போது, “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” (2 கொரிந்தியர் 5:7) என்று நினைவூட்டுகிறார்.
“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிக்கும்படிக்கு இயேசு நமக்கு கற்றுக் கொடுத்தார். அதற்காக அதின் விளைவை நாம் முன்கூட்டியே அறியமுடியும் என்று அர்த்தமல்ல. விசுவாசத்தில் வாழ்வதென்பது, தேவனுடைய சித்தத்தை நாம் அறியமுடியாவிட்டாலும், அவருடைய நன்மையான நோக்கத்தை நம்பி நடப்பதென்பதுதான். வாழ்க்கை கேள்விக்குறியாய் மாறும்வேளைகளில் அவருடைய மாறாத அன்பின் மீது நாம் நம்பிக்கை வைக்கமுடியும். வாழ்க்கை நம்மை எங்கு தூக்கி எறிந்தாலும் “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க” நாடுவோம் (2 கொரிந்தியர் 5:9).