அன்பின் வல்லமை
80 வயதை கடந்த ஒரு வினோதமான ஜோடி, ஒருவர் ஜெர்மனியிலிருந்து மற்றொருவர் டென்மார்க்கிலிருந்து. இருவரும் தம் தம் துணையை இழப்பதற்கு முன் 60 ஆண்டுகள் திருமண வாழ்வை அனுபவித்தனர். 15 நிமிட பயண தொலைதூரம்தான் இருவருக்கும் இருந்த போதிலும் அவர்களுடைய வீடுகள் வெவ்வேறு நாட்டில் இருந்தன. எனினும், அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்க தொடங்கினார்கள், வழக்கமாக உணவு சமைத்து ஒன்றாக தங்கள் நேரத்தை கழித்தனர். துரதிருஷ்டவசமாக ஜெர்மானிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் காரணமாக, அதின் எல்லைகளை கடப்பதற்கு தடை செய்தது. ஆனாலும், தடையின்றி அனுதினமும் மாலை மூன்று மணிக்கு இருவரும் இரு நாட்டின் எல்லை கோட்டின் அருகே அமைதியான எல்லைப் பகுதியில் அவரவர்களுடைய நாட்டுக்குரிய எல்லைகளில், அருகருகே அமர்ந்து இன்பச் சுற்றுலா அனுபவித்து மகிழ்ந்தனர். "நாங்கள் இங்கே இருப்பதற்கு காரணமே அன்புதான் " என்று அந்த மனிதர் விளக்குகிறார். அவர்களுடைய அன்பு நாட்டின் எல்லைகளை விட வலிமையாகவும், பெருந்தொற்றை காட்டிலும் பலமாகவும் இருந்தது.
உன்னதப்பாட்டு அன்பின் வெல்லமுடியாத வலிமையை பற்றி ஆழமாக பதிவிடுகிறது "நேசம் மரணத்தைப்போல் வலிது" (8:6.) என்று சாலொமோன் வலியுறுத்துகிறார். நாம் யாரும் மரணத்திற்கு தப்புவதில்லை; அது தகர்க்க முடியாத வலிமையோடு இறுதி நிலையாக நம்மேல் வருகிறது. ஆயினும், எழுத்தாளர் கூறுகிறார், அன்பும் மரணத்தைப் போலவே ஒவ்வொரு அணுவிலும் சமவலிமை உடையது. இன்னும் என்ன சொல்வோம், அன்பு "அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது." (வ.6). நீங்கள் எப்போதாகிலும் நெருப்பை கொழுந்துவிட்டு எரிய பார்த்ததுண்டா? அன்பும் நெருப்பை போலவே அவிக்க இயலாது. "திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது;" (வ.7)
மனித அன்பும் எப்பொழுதெல்லாம் தன்னலமற்றதாயும், உண்மையுள்ளதாயும் இருக்கிறதோ, அப்போது இத்தகைய குணாதிசயங்களை பிரதிபலிக்கும். எனினும், தேவனுடைய அன்பு மாத்திரமே இத்தகைய ஆற்றலும், இத்தகைய அளவில்லா அழங்களும், இத்தகைய உறுதியான வல்லமையும் கொண்டிருக்கிறது. நமக்கு வியப்பூட்டும் செய்தி யாதெனில் தேவன் நம் ஒவ்வொருவரையும் இத்தகைய அணைக்க முடியாத அன்பினாலே நேசிக்கிறார்.
மறக்கப்படவில்லை
நாம் சரித்திர சிறப்புமிக்க, நவீன சிந்தனையாளர்களாய் இருந்த அருட்பணியாளர்களை நினைக்கும்போது, சார்லஸ் இரேனியஸ் (1790-1838) என்ற பெயர் நம்முடைய நினைவுக்கு வருவதில்லை. ஆனால் நிச்சயம் அது வந்தாகவேண்டும். ஜெர்மானிய தேசத்தில் பிறந்த இரேனியஸ், தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு அந்தப் பகுதியின் முதல் அருட்பணியாளர்களின் வரிசையில் வந்தார். குறுகிய காலகட்டத்திலே 90 கிராமங்களுக்கு இயேசுவின் சுவிசேஷத்தை கொண்டுபோய் சேர்த்து, மூன்றாயிரம் ஆத்துமாக்களை சம்பாதித்தார். அவர் எழுத்தாளராகவும், வேதாகமத்தை தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பவராகவும் பணியாற்றினார். மேலும் அவர் "திருநெல்வேலியின் அப்போஸ்தலன்" என்று பரவலாக அறியப்பட்டிருக்கிறார், தென்னிந்திய திருச்சபையை நிறுவிய அருட்தந்தைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.
தேவனுடைய ராஜ்யத்தின் பணிக்கு ஏற்ற இரேனியஸின் வியத்தகு வாழ்வை சிலர் மறந்திருக்கலாம் ஆனால் அவருடைய ஆவிக்குரிய சேவையை தேவன் ஒருபோதும் மறக்க மாட்டார். தேவனுக்கென்று நீங்கள் செய்வதையும் அவர் மறக்கமாட்டார். எபிரெயருக்கு எழுதின நிருபம் இப்படிப்பட்ட வார்த்தைகளால் நம்மை ஊக்குவிக்கிறது, " உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே" (6:10). தேவனுடைய உண்மைத்தன்மையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது, ஏனெனில் அவர் தம்முடைய நாமத்தினாலே செய்யப்பட்ட அனைத்தையும் மெய்யாய் அறிந்திருக்கிறார், அவைகளை ஞாபகத்தில் வைத்துள்ளார். அவ்வாறே எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம், "வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து" (வ.11) என்று நம்மை ஊக்குவிக்கிறது.
நாம் யாரும் அறியாவண்ணம் நம் சபையிலும், சமுதாயத்திலும் சேவை செய்கையில் நம்முடைய கடுமையான பணி ஒருவராலும் பாராட்டப் படவில்லை என்று நாம் உணர்வது இயல்புதான். மனம் தளராதீர்கள், நம்மை சுற்றியுள்ள ஜனங்கள் நமது சேவைகளை அங்கீகரிக்கிறார்களோ, வெகுமதி அளிக்கிறார்களோ இல்லையோ, தேவன் உண்மையுள்ளவர். அவர் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை.
விசுவாசத்தில் வாழுதல்
மோகித் நடக்கும்போது, அவரால் சமநிலையில் சரியாக நடக்க இயலாத காரணத்தால் அவருடைய மருத்துவர் அவருக்கு சில உடற்பயிற்சி சிகிச்சைகளை பரிந்துரைத்தார். ஒருமுறை அவருடைய சிகிச்சையாளர் அவரிடம், "நீங்கள் எதை பார்க்கிறீர்களா அதையே அதிகமாக நம்புகிறீர்கள் அது தவறாக இருந்தாலும் கூட அதைத்தான் நம்புகிறீர்கள் எனேவே நீங்கள் உங்களுடைய உடலின் மற்ற அமைப்புகளை சார்ந்துகொள்வது இல்லை, ஏனெனில் நடக்கும்போது உங்கள் பாதத்தின் கீழ் நீங்கள் என்ன உணர்கிறீர்களோ மேலும் உங்கள் அகச்செவி உண்டாக்கும் உள்ளுனர்வுகளும் கூட நீங்கள் சமநிலையாய் நடப்பதற்கு உதவுகின்றன." என்றார்.
"நீங்கள் எதை பார்க்கிறீர்களோ அதையே அளவுக்கு அதிகமாக நம்புகிறீர்கள்" இது ஒரு இளம் ஆடு மேய்ப்பனாக கோலியாத்தை எதிர்த்த தாவீதின் கதையை எனக்கு நினைவுபடுத்துகிறது. நாற்பது நாட்களாக பெலிஸ்தியரின் மிகச்சிறந்த வீரனான கோலியாத், இஸ்ரவேலின் ராணுவத்திற்கு முன்பாக கொக்கரித்துக் கொண்டு, தன்னோடு சண்டையிடும்படி யாரையாகிலும் அனுப்புமாறு அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தான் (1சாமுவேல் 17:16). ஆனால் ஜனங்கள் இயல்பாக எதை கவனித்தார்களோ, அதுவே அவர்களுக்கு அச்சத்தை வருவித்தது. அப்பொழுதுதான் இளம் தாவீது அங்கே வருகிறார் ஏனெனில், அவருடைய தந்தை அவர் மூத்த சகோதரர்களுக்கு உணவுகளை வழங்குமாறு அவரை அங்கே அனுப்பியிருந்தார் (வ.18).
இந்த சூழ்நிலையை தாவீது எப்படி பார்த்தார்? அவர் தன்னுடைய பார்வையை கொண்டல்ல, மாறாக தேவன்மேல் கொண்ட நம்பிக்கையில் அதை பார்க்கிறார். அவரும் ஒரு ராட்சதனை பார்த்தார், ஆனால் தேவன் தம்முடைய ஜனங்களை விடுவிப்பார் என்பதை உறுதியாய் நம்பினார். அவர் சிறுவனாய் இருந்த போதிலும் சவுல் ராஜாவிடம், "இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; ... நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் " என்றார் (வ.32). பின்பு கோலியாத்திடம் "யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்" என்றார் (வ.47) அதைத்தான் தேவன் செய்தார்.
தேவனுடைய குணாதிசயத்தையும், வல்லமையையும் நாம் நம்புவது அவரோடு கூட பார்வையில் அல்ல விசுவாசத்தில் நெருங்கி வாழ உதவும்.
பிதாவின் குரல்
என் நண்பனின் அப்பா சமீபத்தில் மரித்துவிட்டார். அவர் வியாதிபட்ட உடனே அவர் நிலைமை வேகமாக சீர்குழைந்தது, பின்னர் சில நாட்களிலேயே அவர் கடந்து போய்விட்டார். என் நண்பனும், அவன் தந்தையும் எப்போதும் நெருங்கிய உறவிலிருந்தார்கள், ஆயினும் கேட்கப்பட வேண்டிய அநேக கேள்விகள் இருந்தன, தேடப்படவேண்டிய பதில்களும், பேசப்பட வேண்டிய உரையாடல்களும் இருந்தன. சொல்லப்படாத அநேக காரியங்கள் இருக்க, இப்போது அவனுடைய தந்தை போய்விட்டார். என் நண்பன் ஒரு தேர்ந்த ஆலோசகர்: அவனுக்கு துயரத்தின் நெளிவுசுளிவுகள் எல்லாம் அத்துப்படி, கடினமான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டுமென்று நன்கு அறிந்திருந்தான். இருந்தபோதிலும் அவன் என்னிடம், "சில நாட்கள் அப்பாவின் குரல் எனக்கு கேட்க வேண்டுமென்று உள்ளது, அது எனக்கான அன்பை உறுதியளித்தது. அதுவே எப்போதும் என்னுடைய உலகமாய் இருந்தது" என்றான்.
இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் ஆரம்பத்திலே யோவானின் கைகளால் ஞானஸ்நானம் பெற்றது மிக முக்கியமான பகுதியாகும். யோவான் அதற்கு தடைசெய்ய முயன்றபோதிலும், அந்த தருணம் தன்னை மனித குலத்தோடு அடையாளபடுத்திகொள்ள அவசியமானது என்று வலியுறுத்தினார். "இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது " (மத்தேயு 3:15) இயேசு சொன்னபடியே யோவான் செய்தான். பின்பு ஏதோவொன்று நடந்தது, அது யோவானுக்கும், சுற்றியிருந்த கூட்டத்திற்கும் இயேசுவின் அடையாளத்தை அறிவித்தது, மேலும் அது இயேசுவின் இதயத்தையும் ஆழமாக தொட்டிருக்க வேண்டும். பிதாவின் சத்தம் குமாரனுக்கு உறுதியளித்தது: "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" (வ.17)
அதே குரல் விசுவாசிகளாகிய நம்முடைய இதயங்களிலும் நமக்கான அவருடைய பேரன்பை உறுதியளிக்கிறது (1 யோவான் 3:1)
அவருடைய வியத்தகு உதவி
2020ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் கொலராடோ பகுதியின் மலைகளில் கொழுந்துவிட்டெரிந்த கிழக்கு காட்டுத்தீயின் போது, தேவனுடைய உதவிக்காக ஏறெடுக்கப்பட்ட ஜெபங்களை குறித்து அந்த ஊர்த்தலைவர் "லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான ஜெபங்கள் இருந்திருக்கும்" என்று வியப்புடன் மதிப்பீடுகிறார். அதின் பெயருக்கேற்றாற்போல (பிரச்சினைக்குரிய கிழக்கு தீ) பன்னிரண்டு மணிநேரத்தில், நெருப்பு 100,000 ஏக்கர் நிலங்களை சுட்டெரித்தது, காய்ந்த மரங்கள் நிறைந்த காடுகளின் வழியே கட்டுக்கடங்காமல் பாய்ந்து முன்னூறு வீடுகளை தரைமட்டாக சம்பலாக்கி, அதின் பாதையிலே இருந்த நகரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. அப்பொழுதுதான் ஒரு வானிலை ஆய்வாளர் வர்ணித்ததுபோல "தேவனால் அனுப்பப்பட்ட" மழை அல்ல மாறாக சரியான நேரத்தில் பொழிந்தது பனி. அது நெருப்பு பற்றியெரிந்த பகுதி முழுதும் பெய்தது, அந்த ஆண்டில் வழக்கத்திற்கு முன்பாகவே பெய்ய துவங்கிய பனி ஒரு அடிக்கும், அதற்கும் மேலாகவும் ஈரமான பனியை பொழிந்தது, நெருப்பின் வேகத்தை குறைத்து, சிலஇடங்களில் முற்றிலும் அனைத்தது.
இப்படிப்பட்ட இரக்கம் நிறைந்த உதவி விளக்குவதற்கு மிகவும் வியப்பாக இருந்தது. பனிக்காக, மேலும் மழைக்காகவும் கூட நாம் ஏறெடுக்கும் ஜெபங்களை தேவன் கேட்கிறாரா? வேதாகமம் அவருடைய நிறைய பதில்களை பதிவு செய்துள்ளது, அதிலொன்றுதான் எலியாவின் மழைக்கான நம்பிக்கை (1 இராஜாக்கள் 18:41-46) பெரும் விசுவாசம் கொண்ட ஊழியக்காரனான எலியா, வானிலையையும் சேர்த்து ஆளும் தேவனுடைய சர்வ ஆளுகையை புரிந்துகொண்டார். சங்கீதம் 147இல், தேவனை குறித்து கூறப்படுவது போல "அவர் பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி" (வ.8) "பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; ...அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?" (வ.16-17).
மேகங்கள் உருவாகும் முன்னரே, எலியாவால் "பெருமழையின் இரைச்சலை" கேட்க முடிந்தது (1 இராஜாக்கள் 18:41). அவருடைய வல்லமையின்மேல் நாம் கொண்ட விசுவாசம் இவ்வளவு உறுதியானதா? அவர் பதிலளிப்பாரோ, இல்லையோ, தேவன் நமது நம்பிக்கையை எதிர்பார்க்கிறார். அவருடைய வியத்தகு உதவிக்காக நாம் அவரை நோக்கி பார்க்கலாம்.