2020ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் கொலராடோ பகுதியின் மலைகளில் கொழுந்துவிட்டெரிந்த கிழக்கு காட்டுத்தீயின் போது, தேவனுடைய உதவிக்காக ஏறெடுக்கப்பட்ட ஜெபங்களை குறித்து அந்த ஊர்த்தலைவர் “லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான ஜெபங்கள் இருந்திருக்கும்” என்று வியப்புடன் மதிப்பீடுகிறார். அதின் பெயருக்கேற்றாற்போல (பிரச்சினைக்குரிய கிழக்கு தீ) பன்னிரண்டு மணிநேரத்தில், நெருப்பு 100,000 ஏக்கர் நிலங்களை சுட்டெரித்தது, காய்ந்த மரங்கள் நிறைந்த காடுகளின் வழியே கட்டுக்கடங்காமல் பாய்ந்து முன்னூறு வீடுகளை தரைமட்டாக சம்பலாக்கி, அதின் பாதையிலே இருந்த நகரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. அப்பொழுதுதான் ஒரு வானிலை ஆய்வாளர் வர்ணித்ததுபோல “தேவனால் அனுப்பப்பட்ட” மழை அல்ல மாறாக சரியான நேரத்தில் பொழிந்தது பனி. அது நெருப்பு பற்றியெரிந்த பகுதி முழுதும் பெய்தது, அந்த ஆண்டில் வழக்கத்திற்கு முன்பாகவே பெய்ய துவங்கிய பனி ஒரு அடிக்கும், அதற்கும் மேலாகவும் ஈரமான பனியை பொழிந்தது, நெருப்பின் வேகத்தை குறைத்து, சிலஇடங்களில் முற்றிலும் அனைத்தது.

இப்படிப்பட்ட இரக்கம் நிறைந்த உதவி விளக்குவதற்கு மிகவும் வியப்பாக இருந்தது. பனிக்காக, மேலும் மழைக்காகவும் கூட நாம் ஏறெடுக்கும் ஜெபங்களை தேவன் கேட்கிறாரா? வேதாகமம் அவருடைய நிறைய பதில்களை பதிவு செய்துள்ளது, அதிலொன்றுதான் எலியாவின் மழைக்கான நம்பிக்கை (1 இராஜாக்கள் 18:41-46)  பெரும் விசுவாசம் கொண்ட ஊழியக்காரனான எலியா, வானிலையையும் சேர்த்து ஆளும் தேவனுடைய சர்வ ஆளுகையை புரிந்துகொண்டார். சங்கீதம் 147இல், தேவனை குறித்து கூறப்படுவது போல “அவர் பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி” (வ.8) “பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; …அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?” (வ.16-17).

மேகங்கள் உருவாகும் முன்னரே, எலியாவால் “பெருமழையின் இரைச்சலை” கேட்க முடிந்தது (1 இராஜாக்கள் 18:41). அவருடைய வல்லமையின்மேல் நாம் கொண்ட விசுவாசம் இவ்வளவு உறுதியானதா? அவர் பதிலளிப்பாரோ, இல்லையோ, தேவன் நமது நம்பிக்கையை எதிர்பார்க்கிறார். அவருடைய வியத்தகு உதவிக்காக நாம் அவரை நோக்கி பார்க்கலாம்.