Archives: ஜனவரி 2022

பழிவாங்காதீர்கள்

2011ல் நடந்த விளம்பர நிகழ்வின்போது, இரண்டு 73 ஆண்டுகள் கடந்த முன்னாள் கனடியன் கால்பந்தாட்ட லீக் ஆட்டக்காரர்கள், மேடையிலேயே சண்டைபோட்டுக் கொண்டனர். 1963ல் அவர்கள் விளையாடிய ஆட்டத்திற்கான மதிப்பெண் விவகாரத்தில் அவர்களுக்குள் திருப்தியில்லை. ஆட்டக்காரர் ஒருவர் மேடையிலே அடுத்தவரை இடித்தபோது, கூட்டத்தினர் “விட்டுவிடுங்கள் போகட்டும்” என்று கூறினர். பழிவாங்குகிற எண்ணங்களை விட்டுவிடுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள். 

பழிவாங்குகிற எண்ணம் கொண்ட பலரைக் குறித்து வேதம் சொல்லுகிறது. தேவன் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக் கொண்டதால், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலின் மீது எரிச்சலுற்றான் (ஆதியாகமம் 4:5). இந்த வெறுப்பு அதிகமாகி அது கொலையில் போய் முடிந்தது. “காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி அவனைக் கொலை செய்தான்” (வச. 8). “ஏசா யாக்கோபைப் பகைத்து...” ஏனென்றால் யாக்கோபு ஏசாவுக்கு உரிய சேஷ்டபுத்திர பாகத்தை திருடிக்கொண்டான். இந்த வெறுப்பு மிகவும் ஆழமாக இருந்ததால் யாக்கோபு தன் உயிருக்கு பயந்து ஓடினான்.

வேதாகமம் பழிவாங்குதலை செயல்படுத்திய பல உதாரணங்களை முன்வைத்தாலும், அந்த வெறுப்பை அழிக்கும் வழிகளையும், மன்னிப்பையும், ஒப்புரவாகும் வழிமுறைகளையும் அறிவுறுத்துகிறது. பிறரிடம் அன்புகூர தேவன் நம்மை அழைக்கிறார் (லேவியராகமம் 19:18). நம்மை அவமானப்படுத்துபவரையும் காயப்படுத்துபவரையும் மன்னிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும், அனைவரிடமும் சமாதானத்தோடு வாழவும், பழிவாங்குதலை தேவனிடம் விட்டுவிடவும், தீமையை நன்மையால் மேற்கொள்ளவும் (ரோமர் 12:18-21) தேவன் நமக்கு அறிவுறுத்துகிறார். அவருடைய வல்லமையால் இன்றே நாம் பழிவாங்குகிற எண்ணத்தையும் பகையையும் அழிப்போமாக. 

மெய்யான மகிழ்ச்சி

பத்தாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டின் கோர்டொபா பகுதியை மூன்றாம் அப்த்-அல்- ரஹ்மான் ஆட்சி செய்தார். தன்னுடைய மக்களால் நேசிக்கப்பட்டவராய், எதிரிகளை பயமுறுத்தியவராய், கூட்டாளிகள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவராய் 50 ஆண்டுகள் வெற்றிகரமாய் ஆட்சி செய்த பின்பு, தன்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்தார். “செல்வமும், கனமும், வல்லமையும், மகிழ்ச்சியும் என்னுடைய அழைப்பிற்குக் காத்திருக்கிறது” என்று தன்னுடைய சிலாக்கியத்தைக் குறித்துக் கூறினார். ஆனால் அவர் மெய்யாய் மகிழ்ந்திருந்த நாட்களை கணக்கிட்டால், அவை வெறும் பதினான்கு நாட்களேயாகும். 

பிரசங்கியின் ஆசிரியரும் செல்வமும் கனமும் அதிகம் கொண்டவர் (பிரசங்கி 2:7-9). வல்லமையும் மகிழ்ச்சியும் உடையவர் (1:12; 2:1-3). அவருடைய சொந்த வாழ்வின் மதிப்பீடும் அபத்தமானது. மகிழ்ச்சி, குறைவானதையே கொடுக்க (2:1-2), அதிகமாய் பெருக வேண்டும் என்ற விருப்பத்தை ஐசுவரியம் அதிகரிக்கிறது (5:10-11) என்கிறார். வெற்றி என்பது திறமையால் அல்ல, காலம் தான் அதை தீர்மானிக்கிறது (9:11) என்றும் கூறுகிறார். ஆனால் பிரசங்கியின் மதிப்பீடு அப்த்-அல்-ரஹ்மானுடையது போல தெளிவில்லாமல் இல்லை. தேவனை விசுவாசிப்பதே அவருடைய மகிழ்ச்சிக்கான ஆதாரமாய் காண்பிக்கிறார். உண்பது, பிரயாசப்படுவது, நன்மை செய்வது ஆகிய எல்லாவற்றிலும் தேவனை மையமாகக் கொண்டு செய்யப்படவேண்டும் என்கிறார் (2:25; 3:12-13).

“ஓ மனிதனே! உன்னுடைய நம்பிக்கையை இந்த உலகின் மீது வைக்காதே” என்று அப்த்-அல்- ரஹ்மான் தன் முடிவைத் தெரிவிக்கிறார். நாம் நித்தியத்திற்காக படைக்கப்பட்டோம் என்பதினால் (3:11), உலகம் கொடுக்கும் மகிழ்ச்சியால் நாம் திருப்தியடைய முடியாது. அவரைப் போல நம்முடைய வாழ்விலும் உண்பது, பிரயாசப்படுவது, நன்மை செய்வது ஆகிய எல்லாவற்றிலும் தேவனை மையமாகக் கொண்டு செயல்படும்போது மெய்யான மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க முடியும்.

அன்பான தேவன்

ஒரு பேராசிரியர் வழக்கமாக தன் ஆன்லைன் வகுப்பு இரண்டு விதமாக நிறைவுசெய்வார். அவர், “அடுத்தமுறை சந்திப்போம்” அல்லது “ஒரு நல்ல வாரயிறுதியை அனுபவியுங்கள்” என்று நிறைவுசெய்வார். சில மாணவர்கள், “நீங்களும் அவ்வாறே செய்யுங்கள், நன்றி!" என்று வாழ்த்துவார்கள். ஒருநாள் ஒரு மாணவர் பதிலுக்கு, “நான் உம்மை நேசிக்கிறேன்” என்றானாம். அவர் ஆச்சரியத்துடன், “நானும் உம்மை நேசிக்கிறேன்!” என்று பதிலளித்தாராம். அவனோடு கூட படிக்கும் மாணவர்கள் அனைவரும், அடுத்த ஆன்லைன் வகுப்பு நிறைவுறும்போது அவ்வாறே சொல்லுவதற்கு தீர்மானித்தனர். சில நாட்களுக்கு பிறகு அவர் பாடம் நடத்திய பின் ஒவ்வொரு மாணவர்களும் “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று வாழ்த்தினார்களாம். மாதக்கணக்காய் இந்த வழக்கத்தை அவர்கள் கடைபிடித்தனராம். ஆசிரியர் இந்த “நான் உம்மை நேசிக்கிறேன் சங்கிலி” ஒரு பலமான பிணைப்பை அவருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இடையே உருவாக்கியதால், அவர் அந்த வகுப்பை தன்னுடைய குடும்பமாய் கருதுகிறார். 

1 யோவான் 4:10-21ல், நாம் தேவனுடைய குடும்பமாய் இருப்பதால், அவரிடம் “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று சொல்ல பல காரணங்கள் இருக்கின்றன: அவர் தம்முடைய குமாரனை நம் பாவத்திற்கான பலியாகக் கொடுத்தார் (வச. 10). அவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை நம்முள்ளே வாசம்பண்ண அனுமதித்திருக்கிறார் (வச. 13, 15). அவருடைய அன்பு நம்பகமானது (வச. 16). நாம் ஆக்கினைத் தீர்ப்பைக் குறித்து ஒருபோதும் பயப்படத் தேவையில்லை (வச. 17). “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால்” (வச. 19) அவரையும் மற்றவர்களையும் நேசிக்க உதவுகிறார். 

அடுத்த முறை தேவ ஜனத்தோடு கூடும்போது நீங்கள் ஏன் தேவனை நேசிக்கிறீர்கள் என்ற காரணங்களை பகிர்வதற்கு நேரம் செலவழியுங்கள். “நான் உம்மை நேசிக்கிறேன்” என்ற சங்கிலியை தேவனுக்காய் உருவாக்கி, தேவனை துதியுங்கள்; தேவனோடு இன்னும் கிட்டிச் சேருங்கள். 

குயவனின் சக்கரம்

1952ல் மக்களின் கவனமின்மையால் கடையில் இருக்கும் பொருட்களை உடையாமல் தவிர்க்க கடைகாரர் ஒரு அடையாளத்தை வெளியிட்டார்: “நீங்கள் உடைத்த பொருள் உங்களுடையது.” பொருளை வாங்குபவர்களுக்கு அது எச்சரிக்கையின் வார்த்தைகளாக தென்பட்டது. இதுபோன்ற வித்தியாசமான அடையாள வாக்கியங்களை இதுபோன்ற கடைகளில் அநேகம் காணலாம். 

ஆனால் பரம குயவனுடைய கடையில் முரண்பாடான ஒரு வாக்கியத்தை நாம் பார்க்கமுடியும். எரேமியா 18ல் பதிவாகியுள்ள, “நீங்கள் உடைத்தால், நாங்கள் அதைவிட சிறந்ததாய் உருவாக்குவோம்” என்னும் வாக்கியமே அது. எரேமியா ஒரு குயவனின் வீட்டிற்குச் சென்று, குயவன் எவ்வாறு “கெட்டுப்போன” மண்பாண்டத்தை கையில் எடுத்து அதை நேர்த்தியாய் “வேறே பாண்டமாக வனைந்தான்” (வச. 4) என்பதை பார்க்கிறார். தேவன் மிகத்திறமையான குயவன் என்பதையும் நாம் களிமண் என்பதையும் தீர்க்கதரிசி நமக்கு நினைவூட்டுகிறார். தேவன் சர்வவல்லவர் என்பதினால், அவர் உருவாக்கிய பாத்திரத்தைக் கொண்டு தீமையை அழிக்கவும், நம்மில் அழகை உருவாக்கவும் அவரால் முடியும். 

நாம் கெட்டுப்போயிருந்தாலோ அல்லது உடைக்கப்பட்டாலோ தேவனால் நம்மை மீண்டும் உருவாக்க முடியும். அவர் திறன்வாய்ந்த குயவன்; நம்முடைய உடைக்கப்பட்ட வாழ்க்கைத் துண்டுகளைக்கொண்டு புதிய விலையேறப்பெற்ற பாத்திரத்தை அவரால் உருவாக்க முடியும்.  தேவன் நம்முடைய உடைந்த வாழ்க்கைகளையோ தவறுகளையோ, கடந்தகால பாவங்களையோ பயன்படாத விஷயங்களாய் பார்ப்பதில்லை. அதற்கு பதிலாக, நமது உடைந்த துண்டுகளை எடுத்து, அவருடைய பார்வைக்கு நலமாய் பட்டபடி மறுவுருவம் கொடுக்கிறார். 

நாம் உடைக்கப்பட்டபோதிலும் அவர் நம்மை பொருட்படுத்துகிறார். உடைந்த துண்டுகளும் அவரின் கைகளில் உபயோகப்படும் அழகான பாத்திரங்களாய் வனையப்படுகிறது (வச. 4). 

இது கிருபை

 “லேஸ் மிசெரபிலெஸ்” என்ற பிரபலமான ஒரு பிரெஞ்சு வரலாற்று நாவலில், பரோலில் வெளிவந்த ஜீன் வால்ஜீன் என்ற குற்றவாளி, ஒரு மதகுருவின் வெள்ளியைத் திருடிவிடுவான். அவன் கையும் களவுமான பிடிபடுகிறான். அவன் சிறைக்கு செல்லுவான் என்று எதிர்பார்க்கும் வேளையில், அந்த வெள்ளியை தானே அவனுக்குக் கொடுத்ததாக மதகுரு கூறி, அவனை காப்பாற்றுவார். காவலர்கள்  போனதும், “இனி நீ தீமைக்குச் சொந்தமானவன் அல்ல; நன்மைக்கு சொந்தமானவன்” என்று அறிவுறுத்துவதாக நாவல் நீளுகிறது.

பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு விசுவாசிகளிடம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே நகரத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்தனர் என்றார். மக்கள் கூட்டம் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்கிறார்கள். பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” (அப்போஸ்தலர் 2:38) என்று ஆலோசனை கூறுகிறார்.  அவர்களுக்கு தகுந்த தண்டனையை இயேசு ஏற்றார். இப்பொழுது அவர்கள் விசுவாசத்தை அவர் மீது வைத்ததினால் தண்டனையிலிருந்து மன்னிக்கப்படுவர்.

என்னே ஆச்சரியமான கிருபை! மக்கள்தான் கிறிஸ்துவின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள், அதினால் அந்த மரணத்தால் அவர்களுக்கே மன்னிப்பளிக்கப்படுகிறது. தேவன் கிருபையுள்ளவர், வல்லமையில் சிறந்தவர். மானுடத்தின் பெரிய பாவத்தை அவர்களின் இரட்சிப்பிற்காகவே பயன்படுத்தினார். தேவன் இயேசுவை முன்பே சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்திருந்தால் எதுவுமே நன்மையானதாக மாறியிருக்காது என்று நாம் யோசிக்கலாம். சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிற (ரோமர் 8:28) அவர் ஒருவரையே விசுவாசியுங்கள்.