இலுதெரா என்னும் கரிபியன் தீவில் மனிதர்களால் கட்டப்பட்ட ஒரு மேம்பாலம் இருக்கிறது. பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அதின் ஒருபுறம் அட்லாண்டிக் கடலின் நீலநிற தண்ணீரும் மறுபுறம் கரிபியக் கடலின் தண்ணீரும் வேறொரு நிறத்தில் வித்தியாசமாய் தெரியும். கற்களினால் இயற்கையாய் அமைந்திருந்த அந்த வளைவு புயல் காற்றினால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது. தற்போது பார்வையாளர்களுக்காய் அந்த பாலத்தின் மீது அமைக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல் பாதை, “பூமியின் குறுகலான இடம்” என்று அழைக்கப்படுகிறது. 

நித்திய ஜீவனுக்கு போகிற பாதை குறுகலானது என்றும் “அதை கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்றும் வேதம் சொல்லுகிறது (மத். 7:14). வாசல் குறுகலானது என்று சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மட்டுமே பரிசுத்த ஆவியின் துணையோடு, ஒரு பாலமாய் செயல்பட்டு பாவமுள்ள மானுடத்தை. தேவனிடத்தில் ஒப்புரவாக்க முடியும் (யோவான் 10:7-9; 16:13). எல்லா தேசங்களிலிருந்தும், மக்கள் கூட்டத்திலிருந்தும், மற்றும் சமுதாயம் எங்கிலுமிருந்தும் விசுவாசிகள் பரலோகத்தில் பிரவேசித்து ராஜாதி ராஜாவின் முன் பணிந்து, அவருடைய சிங்காசனத்தைச் சுற்றிலும் ஆராதனை செய்வார்கள் என்றும் வேதம் சொல்லுகிறது (வெளி. 5:9). பிரிந்திருக்கிற அனைத்து தேவ ஜனங்களின் ஒற்றுமையை இந்த சித்திரம் பிரதிபலிக்கிறது. 

நம்முடைய பாவத்தினால் தேவனிடத்திலிருந்து நாம் பிரிக்கப்பட்டிருந்தாலும், கிறிஸ்துவோடுள்ள தனிப்பட்ட உறவின் மூலம், இந்த குறுகலான ஒப்புரவாகுதலின் பாதை வழியாய் பரலோகத்தின் நித்தியத்திற்குள் பிரவேசிக்க, தேவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் வரவேற்கப்படுகிறான். இயேசுவின் சிலுவை தியாகம், உயித்தெழுதல் மற்றும் பகிரவேண்டிய செல்லுதல் இன்றும் என்றும் எல்லோருக்கும் பகிரவேண்டிய நற்செய்தி சத்தியங்கள் ஆகும்.