திவ்யா வீதியில் நடக்கும்போதெல்லாம் எதிர்படுபவர்களை எல்லாம் புன்முறுவலோடு எதிர்கொள்வது வழக்கம். சிநேகிக்கும் முகங்களை பார்க்க விரும்புபவர்களை அவள் வரவேற்கும் விதம் அப்படியாக இருந்தது. பல வேளைகளில் பெரும்பாலானோரின் உண்மையான புன்னகை அவளுக்கு பதிலாக கிடைக்கும். முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டபின், அவளுடைய முகத்தை யாரும் பார்க்க முடியாததால், அவள் சிரிப்பையும் யாரும் பார்க்கமுடியாது என்பதை அவள் உணர்ந்தாள். அது கடினம் என்றாலும் “நான் அதை நிறுத்தப்போவதில்லை, நான் சிரிப்பதை மற்றவர்கள் என் கண்களின் மூலமாய் பார்க்கட்டும்” என்று தீர்மானித்தாள். 

இந்த தீர்மானத்திற்கு பின் ஒரு சிறிய அறிவியல் பூர்வமான காரியம் உண்டு. வாயின் இருபுறமுள்ள  தசைகளும் கண்களை சுறுக்கச்செய்யும் தசையும் இணைந்தே செயல்படும். இதனை “டுசென்னே” புன்னகை என்று அழைப்பர். அதற்கு, “கண்களால் சிரிப்பது” என்றும் அர்த்தம் உண்டு. 

நீதிமொழிகள், “கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கட்டும்” என்றும் “மனமகிழ்ச்சி நல்ல ஓளஷதம்” (15:30; 17:22) என்றும் குறிப்பிடுகிறது. பெரும்பாலான நேரத்தில் தேவ பிள்ளைகளாகிய நம்மிடத்திலிருந்து வெளிப்படுகிற புன்னகை நாம் பெற்றிருக்கிற உன்னதமான மகிழ்ச்சியிலிருந்து வெளிப்படுகிறது. அது, அதிகமான பாரத்தை சுமக்கிற மக்களை உற்சாகப்படுத்தவும், வாழ்க்கையில் கேள்வியோடு பயணிக்கிறவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் நம் வாழ்க்கையிலிருந்து வழிந்தோடும் தேவனுடைய வரமாய் இருக்கிறது. நாம் உபத்திரவத்தைச் சந்திக்கும்போது என் மகிழ்ச்சி புன்னகையில் பிரதிபலிக்கும்.