அக்கினியினால் தூண்டப்படுதல்
சோர்வுற்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள், காலை உணவிற்காக ஒரு உணவகத்தில் நிறுத்தப்பட்டபோது, பணியாளர் இவர்கள் செய்திகளில் தோன்றினவர் என்று அடையாளம் கண்டு, அவர்கள் ஒரு கிடங்கின் தீயை எதிர்த்துப் ஒரு இரவு முழுவதும் போராடினார்கள் என்பதை உணர்ந்தார். தனது பாராட்டுக்களைக் காட்ட , அவர் அவர்களின் ரசீதில் ஒரு குறிப்பை எழுதினார், “உங்கள் காலை உணவு இன்று என்னிடம் உள்ளது. நன்றி . . . மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காகவும், எல்லோரும் விட்டு ஓடும் இடங்களுக்கு ஓடியதற்காகவும் . . . . நெருப்பால் தூண்டப்பட்டு, தைரியத்தால் இயக்கப்பட்டீர்கள், நீங்கள் எவ்வளவு சிறந்த ஒரு உதாரணம்."
பழைய ஏற்பாட்டில், மூன்று இளைஞர்களின் செயல்களில் தைரியத்தின் ஒரு உதாரணத்தைக் காண்கிறோம்: சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபெத்நேகோ (தானியேல் 3). பாபிலோனிய ராஜாவின் சிலையை வணங்குவதற்கான கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, இந்த இளைஞர்கள் தைரியமாக அதை மறுத்ததன் மூலம் தேவன் மீதுள்ள அன்பைக் வெளிப்படுத்தினர். அவர்களின் தண்டனை அக்கினிச்சூளைக்குள் வீசப்பட வேண்டும் என்பதே. ஆனாலும் அந்த இளைஞர்கள் பின்வாங்கவில்லை: “நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார், அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை,…பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை. (வச. 17-18).
தேவன் அவர்களை மீட்டார், அவர்களுடன் நெருப்பிலேயும் கூட உலாவினார் (வச. 25-27). இன்று நம்முடைய தீக்கனையான சோதனைகளிலும், தொல்லைகளிலும், தேவன் நம்முடன் இருக்கிறார் என்ற உறுதி நமக்கும் இருக்கிறது. அவரால் முடியும்.
இயேசுவின் பிரபலமாகாத யோசனைகள்
பதினைந்து ஆண்டுகளாக, மைக் பர்டன் தனது சிறிய நகரத்தில் நடத்திக்கொண்டிருந்த நினைவைவிட்டு நீங்காத கடையில் வெறுப்பு நிறைந்த கூட்டங்களை நடத்தினார். ஆனால் 2012-ல் அவரது ஈடுபாட்டை அவரது மனைவி கேள்வி கேட்கத் தொடங்கியபோது, அவரது இதயம் மென்மையாக்கப்பட்டது. தனது இனவெறி கருத்துக்கள் எவ்வளவு தவறானவை என்பதை அவர் உணர்ந்தார், இனி ஒருபோதும் அப்படிப்பட்ட நபராக அவர் இருக்க விரும்பவில்லை. தங்கள் உறுப்பினர்களில் ஒருவரது குடியிருப்பில் அவர்கள் வாடகைக்கு வாழ்ந்துக் கொண்டிருந்தனர் அந்த குடியிருப்பில் இருந்த்து அவர்கள் குடும்பத்தினரை உதைத்து போராளி குழு பதிலடி கொடுத்தது.
உதவிக்காக அவர் எங்கே போனார்? ஆச்சரியப்படும் விதமாக, எற்கெனவே சண்டையிட்ட ஒரு உள்ளூர் கருப்பின போதகரிடம் சென்றார். போதகரும் அவரது சபை மக்களும் மைக்கின் குடும்பத்திற்கு சில காலம் தங்கும் வசதி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். அவர் ஏன் உதவ ஒப்புக்கொண்டார் என்று கேட்டபோது, பாஸ்டர் கென்னடி விளக்கினார், “இயேசு கிறிஸ்து மிகவும் பிரபலமற்ற சில காரியங்களைச் செய்தார். உதவி செய்ய வேண்டிய நேரம் வரும்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்யுங்கள். ” பின்னர் மைக் ஒரு முறை கென்னடியின் தேவாலயத்தில் பேசினார் அப்போது தான் வெறுப்பை பரப்பினதர்காக கறுப்பின சமூகத்திடம் மன்னிப்பு கோரினார்.
மலைப்பிரசங்கத்தில் செல்வாக்கற்ற சில யோசனைகளை இயேசு கற்பித்தார்: “உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு . . . . உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைத் துன்பபடுத்துகிரவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (மத்தேயு 5:42, 44). தேவனின் அழைப்பைப் பின்பற்றுவதற்கான தலைகீழ் வழி அது. இது பலவீனம் போல் தோன்றினாலும், அது உண்மையில் தேவனின் பலத்தை கொண்டு செயல்படுவது.
நமக்கு கற்பித்தவரே அவர் எதிர்பார்க்கும் விதத்தில் இந்த தலைகீழான வாழ்க்கையை வாழ்வதற்கான பெலனை கொடுப்பவர்.
எதை பார்க்க முடியாது?
ஜூலை 16, 1945 இல் நியூ மெக்ஸிகோவின் தொலைதூர பாலைவனத்தில் முதல் அணு ஆயுதம் வெடித்தபோது, அணு வயது தொடங்கியது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் கிரேக்க தத்துவஞானி டெமோக்ரிட்டஸ் (சி. 460–370 கி.மு ) பிரபஞ்சத்தின் இந்த சிறிய கட்டுமானத் தொகுதிகளைக் கூட காணக்கூடிய எதையும் கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அணுவின் இருப்பு மற்றும் சக்தியை ஆராய்ந்து கொண்டிருந்தார். டெமோகிரிட்டஸ் அவர் பார்க்க முடிந்ததை விட அதிகமாக புரிந்து கொண்டார் மற்றும் அதன் விளைவு அணுக் கோட்பாடாகும்.
விசுவாசத்தின் சாராம்சம் காண முடியாததைத் தழுவுகிறது என்று வேதம் சொல்கிறது. எபிரெயர் 11: 1 "இப்போது விசுவாசம் என்பது நம்பபடுகிறதின் உறுதி, காணப்படாதவைகளின் நிச்சயம்." என்றும் உறுதிப்படுத்துகிறது, இந்த உத்தரவாதம் விருப்பத்தினால் அல்லது நேர்மறையான சிந்தனையின் விளைவாகவும் அல்ல. யாருடைய இருப்பு பிரபஞ்சத்தில் உண்மையான உண்மையோ அந்த காண முடியாத தேவன் மீதான நமது நம்பிக்கை. அவருடைய யதார்த்தம் அவருடைய படைப்பின் கிரியையில் காட்டப்பட்டுள்ளது (சங்கீதம் 19: 1) மற்றும் பிதாவின் அன்பை நமக்குக் காட்ட வந்த அவருடைய குமாரனாகிய இயேசுவில் அவருடைய கண்ணுக்குத் தெரியாத தன்மையையும் வழிகளையும் வெளிப்படுத்துவதன் மூலம் விளங்கபன்னினார் (யோவான் 1:18).
அப்போஸ்தலன் பவுல் (அப்போஸ்தலர் 17:28) கூறியது போல் இந்த தேவனுக்குள் “நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்”. ஆகவே, “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” (2 கொரிந்தியர் 5: 6). எனினும் நாம் தனியாக நடக்கவில்லை. கண்ணுக்குத் தெரியாத தேவன் ஒவ்வொரு அடியிலும் நம்முடன் நடக்கிறார்.
எங்கள் இதயங்களில் வசிப்பது
சில சமயங்களில் குழந்தைகளின் வார்த்தைகள் தேவனின் சத்தியத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு நம்மைத் தூண்டக்கூடும். என் மகள் இளமையாக இருந்தபோது ஒரு நாள் மாலையில், கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு உன்னத இரகசயத்தை பற்றி அவளிடம் சொன்னேன் - தேவன் தம்முடைய குமாரன் மற்றும் ஆவியின் மூலமாக அவருடைய பிள்ளைகளுள் வாசம்செய்கிறார். நான் அவளை படுக்கையில் கட்டிக்கொண்டபோது, இயேசு அவளுடனும் அவளுக்குள்ளும் இருப்பதாக சொன்னேன். "அவர் என் வயிற்றில் இருக்கிறாரா?" என்று அவள் கேட்டாள். "உன்மையில், நீ அவரை விழுங்கவில்லை," என்று நான் பதிலளித்தேன். "ஆனால் அவர் உன்னுடன் இருக்கிறார்."
இயேசுவை “அவள் வயிற்றில்” வைத்திருப்பதாக என் மகள் நேரடியாக அர்தம் கொண்டபோது என்னை நிதானித்தேன், இயேசுவை என் இரட்சகராகக் வரும்படி கேட்டபோது, அவர் வந்து எனக்குள் எப்படி வாசம்பன்னினார் என்பதைக் கருத்தில் கொண்டேன்.
பரிசுத்த ஆவியானவர் எபேசுவில் உள்ள விசுவாசிகளை பலப்படுத்துவார் என்று பிரார்த்தனை செய்தபோது அப்போஸ்தலன் பவுல் இந்த இரகசியத்தை குறிப்பிட்டார், இதனால் கிறிஸ்து “விசுவாசத்தினாலே [அவர்களுடைய இருதயங்களில்] வாசம்பன்னுவார்” (எபேசியர் 3:17). இயேசு உள்ளே வாசம்பன்னுவதால், அவர் அவர்களை எவ்வளவு ஆழமாக நேசித்தார் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த அன்பினால் தூண்டப்பட்டு, அவர்கள் தங்கள் விசுவாசத்தில் முதிர்ச்சியடைவார்கள், அன்பின் உண்மையை பேசும்போது மற்றவர்களை மனத்தாழ்மையுடனும் மென்மையுடனும் நேசிப்பார்கள் (4: 2, 25).
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குள் வாசம்பன்னுவது என்றால், அவருடைய அன்பு அவரை வரவேற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் விட்டு விலகாது. அவருடைய அன்பு அறிவுக்கு எட்டாதது (3:19) நம்மை அவரிடம் வேரூன்ற செய்து, அவர் நம்மை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
குழந்தைகளுக்காக எழுதப்பட்ட வார்த்தைகள் இதைச் சிறப்பாகச் எடுத்துரைக்கும்: “ஆம், இயேசு என்னை நேசிக்கிறார்!”