Archives: ஏப்ரல் 2021

அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது

பெரும்பாலான சமோவா இளைஞர்கள் (ஒரு ஆஸ்திரேலிய கடலோர தீவு) அவர்களின் மக்களுக்கும் மற்றும் அவர்களது தலைமைக்கும் தங்கள் செய்ய வேண்டிய பொறுப்பை அடையாளங்களாக பச்சையாககுத்தியிறுப்பார்கள். இயற்கையாகவே, இந்த அடையாளங்கள் சமோவான் ஆண்கள் ரக்பி அணி உறுப்பினர்களின் கைகளில் இடம்பெற்றிருக்கும். பச்சை குத்தல்கள் என்றாலே எதிர்மறையான அர்த்தங்களைக் கொடுக்கும் நாடான ஜப்பானுக்குப் பயணம் செய்தபோது, ​​குழு உறுப்பினர்கள் தங்கள் பச்சை குத்தல்கள்  தங்களை அழைத்தவர்களுக்கு ஒரு சிக்கலை வழங்கியதை உணர்ந்தனர். நட்பின் வெளிப்பாடாக, சமோவான் அணியினர் தங்கள் பச்சை குத்தியதை மறைக்க வடிவமைப்புகளை உள்ளடக்கிய தோல் நிற உறைகளை அணிந்தனர். "ஜப்பானியரின் எண்ணங்களுக்கு நாங்கள் மரியாதைக்குரியவர்களாகவும் மற்றும் கவனத்துடனும் இருக்கிறோம்....ஜப்பானிய வழியில்” என்று அணியின் தலைவர் விளக்கினார். "நாங்கள் பச்சையை காண்பிப்பது சரி என்ற நிலையை நாங்கள் உறுதி செய்வோம்."

தனிமனித கருத்துக்களை முக்கியப்படுத்தும் ஒரு யுகத்தில், சுய வரம்பை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது—ரோமருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் கூறிய கருத்து. சில சமயங்களில் அன்பினால் மற்றவர்களுக்காக நம் உரிமைகளை விட்டுக்கொடுப்பது அவசியமாகிறது என்று அவர் எங்களிடம் கூறினார். நம்முடைய சுதந்திரத்தை எல்லைக்கே தள்ளுவதற்குப் பதிலாக, சில சமயங்களில் அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது. பவுல் அப்போஸ்தலன் தேவாலயத்தில் சிலர் “எந்த பதார்த்தத்தையும் சாப்பிட” சுதந்திரம் இருப்பதாக நம்பினார்கள், ஆனால் மற்றவர்கள் “மரக்கறிகளை மட்டுமே” சாப்பிட்டார்கள் (ரோமர் 14: 2) என்பதை விளக்கினார்.  இது ஒரு சிறிய பிரச்சினை போல் தோன்றினாலும், முதல் நூற்றாண்டில், பழைய ஏற்பாட்டின் உணவுமுறை சட்டங்களை பின்பற்றுவது சர்ச்சைக்குரியதாக இருந்தது. சுதந்திரமாக சாப்பிட்டவர்களை குறிப்பிட்ட வார்த்தைகளால் தீர்மானிப்பதற்கு முன், "நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக" என்று பவுல் அனைவருக்கும் அறிவுறுத்தினார் (வச. 13). "மாம்சம் புசிக்கிறதும் மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்." (வச. 21).

சில நேரங்களில், இன்னொருவரை நேசிப்பது என்பது நமது சொந்த சுதந்திரங்களை கட்டுப்படுத்துவதாகும். நமக்கு முழு சுதந்திரம் உள்ளதாலேயே அனைத்தையும் எப்போதும் செய்யலாம் என்றில்லை. சில நேரங்களில் அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது.

ஆதரவின் வழியாக

ஜனவரி 28, 1986 அன்று, அமெரிக்க விண்வெளி விண்கலம் சேலஞ்சர்  புறப்பட்ட எழுபத்து மூன்று வினாடிகளில் உடைந்துபோனது. தேசத்திற்கு ஆறுதல் அளிக்கும் உரையில், ஜனாதிபதி ரீகன் "ஹை பிளைட்" என்ற கவிதையில் இருந்து, அதில் இரண்டாம் உலகப் போரின் விமானியான ஜான் கில்லெஸ்பி மாகி எழுதியுள்ள " விண்வெளியின் மிகைப்படுத்தப்படாத புனிதத்தன்மை" மற்றும் தனது கையை நீட்டி "தேவனின் முகத்தை" தொடும் உணர்வு பற்றி மேற்கோள் காட்டினார்.

தேவனின் முகத்தை நாம் உண்மையில் தொட முடியாது என்றாலும், சில சமயங்களில் நாம் அனுபவிக்கிற பிரம்மிக்கத்தக்க சூரிய அஸ்தமனம் அல்லது இயற்கையின் அமைதியான சூழல் அவர் அருகில் உள்ளார் என்ற சிறந்த உணர்வை நமக்கு அளிக்கிறது. சிலர் இந்த தருணங்களை “மெல்லிய இடங்கள்” என்று அழைக்கிறார்கள். வானத்தையும் பூமியையும் பிரிக்கும் இடைவெளி கொஞ்சம் மெல்லியதாக காணப்படுகிறது. தேவனை கொஞ்சம் நெருக்கமாக உணர்கிறோம்.

இஸ்ரவேலர்கள் பாலைவன வனாந்தரத்தில் தேவனின் அருகாமையை உணர்ந்ததால் ஒரு "மெல்லிய இடத்தை" அனுபவித்திருக்கலாம். தேவன் பாலைவனத்தின் வழியாக அவர்களை வழிநடத்த பகலில் மேக ஸ்தம்பத்தையும் இரவில் அக்கினி ஸ்தம்பத்தையும் வழங்கினார் (யாத்திராகமம் 40: 34-38). அவர்கள் பாளையத்திலே தங்கினபோது, "கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று" (வச. 35). அவர்களின் எல்லா பிரயாணங்களிலும், தேவன் அவர்களுடன் இருந்ததை அவர்கள் அறிந்தார்கள்.

தேவனின் படைப்பின் நம்பமுடியாத அழகை நாம் ரசிக்கும்போது, ​​அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது நமக்கு நனவாகிறது. நாம் ஜெபத்திலே அவருடன் பேசும்போது, ​​அவரது வார்த்தைகளை கேட்கும்போது, வேதவசனங்களைப் படிக்கும்போது, ​​எந்த நேரத்திலும் மற்றும் எங்கும் அவரோடு உள்ள ஐக்கியத்தில் மகிழலாம்.

கிறிஸ்துவில் தோழர்கள்

வயதுவந்தோருக்கான வளர்ச்சி பற்றிய ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஆய்வு என்பது பல பத்தாண்டுகள் நீடித்த திட்டமாகும், இதன் விளைவாக ஆரோக்கியமான உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அதிகம் புரிந்துகொள்ள முடிந்தது. 2-ஆம் ஆண்டு படிக்கும் 268 பேர் கொண்ட மாணவர்களின் குழுவுடன் 1930-களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய ஆராய்ச்சி பின்னர் மேலும் 456 மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களுடன் நேர்காணல்களை நடத்தி, சில வருடங்களுக்கு ஒருமுறை அவர்களின் மருத்துவ பதிவுகளை அலசி ஆராய்ந்தனர். அவர்களின் நெருங்கிய உறவுகளே அவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை யூகிப்பதில் மிகப்பெரிய காரணி என்பதை அவர்கள் கண்டறிந்தனர். சரியான நபர்களால் நாம் சூழப்பட்டிருந்தால், ஆழ்ந்த மகிழ்ச்சியின் உணர்வை நாம் அனுபவிப்போம்.

பிலிப்பியர் 1-ல் அப்போஸ்தனாகிய பவுல் விவரிக்கிறதை இது பிரதிபலிக்கிறது. சிறையிலிருந்து அவர் எழுதுகையில், பவுலால் உதவ முடியாது எனினும் ஒவ்வொரு முறையும் அவர் அவர்களை நினைக்கிற பொழுதெல்லாம் அவர்களுக்காக தேவனை ஸ்தோத்தரித்து, "சந்தோஷத்தோடே" விண்ணப்பம்பண்ணுகிறார் என்று அவரது நண்பர்களிடம் கூறுகிறார் (வச. 4). ஆனால் இவர்கள் சாதாரண நண்பர்கள் அல்ல; இவர்கள் இயேசுவினுள் சகோதர சகோதரிகள், அவர்கள் “தேவனின் கிருபையில் பங்குள்ளவர்கள்”, பவுலுடன் சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள் (வச. 7). அவர்களின் உறவு பகிர்வினாலும் மற்றும் பரஸ்பரத்தினாலும் உருவான ஒன்று – தேவனின் அன்பினாலும் மற்றும் சுவிசேஷத்தினாலும் வடிவமைக்கப்பட்ட ஒரு உண்மையான ஐக்கியம்.

ஆம், நண்பர்கள் முக்கியம் தான், எனினும் கிறிஸ்துவுக்குள் உள்ள சகதோழர்கள் ஒரு உண்மையான மற்றும் ஆழ்ந்த மகிழ்ச்சியின் வினையூக்கிகள். வேறு எதை விடவும் தேவனின் கிருபையே நம்மை ஒன்றாக பிணைக்க முடியும், மேலும் வாழ்க்கையின் எந்த இருள் சூழ்ந்த காலங்களிலும் கூட இந்த பிணைப்பினால் வரும் மகிழ்ச்சி நீடிக்கும்.

சத்தியத்தில் நங்கூரமிட்டது

என் குடும்பம் கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான, அற்புதமாக கடினமான அரைசாந்து பூசப்பட்ட சுவர்கள் உட்பட நிறைய பண்புக்கூறுகளைக் கொண்ட வீட்டில் வசிக்கிறது. இந்த சுவர்களில், ஒரு படத்தைத் தொங்கவிட, நான் ஒரு மர ஆதரவுக்குள் ஆணியைத் துளைக்க வேண்டும் அல்லது ஆதரவுக்காக ஒரு அரைசாந்து நங்கூரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடு கட்டுபவர் எனக்கு எச்சரித்தார். இல்லையெனில், ஒரு அசிங்கமான துளையை ஏற்படுத்தி, படம் தரையில் விழக்கூடிய அபாயத்தை நான் கொண்டிருக்கிறேன்.

ஏசாயா தீர்க்கதரிசி எலியாக்கிம் என்ற சிறிய வேதாகம கதாபாத்திரத்தை விவரிக்க ஒரு சுவரில் உறுதியாக அறையப்பட்ட ஆணியின் உருவத்தை பயன்படுத்தினார். ஊழல் அதிகாரியான செப்னாவைப் (ஏசாயா 22: 15–19) போலவும், தங்களைத் தாங்களே பலப்படுத்திக்கொள்ளப் பார்த்த இஸ்ரவேல் மக்களை போலவுமல்லாமல் (வச. 8–11) - எலியாக்கிம் தேவன்மீது நம்பிக்கை வைத்திருந்தார். எசேக்கியா ராஜாவுக்கு அரண்மனை நிர்வாகியாக எலியாக்கிமின் பதவி உயர்வு குறித்து தீர்க்கதரிசனம் கூறி, எலியாக்கிம் ஒரு “உறுதியான இடத்தில் ஆணியாக கடாவப்படுவார்” என்று ஏசாயா தீர்க்கதரிசனமாக எழுதினார் (வச. 23). தேவனின் சத்தியத்திலும் கிருபையிலும் பாதுகாப்பாக நங்கூரமிட்டிருப்பது எலியாக்கிம் தனது குடும்பத்திற்கும் அவரது மக்களுக்கும் ஒரு ஆதரவாக இருக்க அனுமதிக்கும் (வச. 22-24).

ஆயினும், ஏசாயா இந்த தீர்க்கதரிசனத்தை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு எந்தவொரு நபரும் உயர் நிலையான பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை ஒரு தெளிவான நினைவூட்டலுடன் முடித்தார் - நாம் அனைவரும் தோல்வியடைகிறோம் (வச. 25). நம்முடைய வாழ்க்கையில் முற்றிலும் நம்பகமான நங்கூரம் இயேசு மட்டுமே (சங்கீதம் 62: 5–6; மத்தேயு 7:24). நாம் மற்றவர்களைக் கவனித்து, அவர்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, ஒருபோதும் தோல்வியடையாத நங்கூரமான அவரிடமும் அவர்களை சுட்டிக்காட்டுவோம்.

தோட்டத்தில்

என் அப்பா பழைய பாமாலைகளைப் பாடுவதை விரும்பினார். அவருக்கு மிகவும் பிடித்தவற்றுள் ஒன்று "இன் த கார்டன் (தோட்டத்தில்)". சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது அடக்கத்தில் நாங்கள் அதைப் பாடினோம். அனுபல்லவி எளிதானது: "அவர் என்னுடன் நடக்கிறார், அவர் என்னுடன் பேசுகிறார், நான் அவருடையவன் என்று அவர் என்னிடம் கூறுகிறார், நாங்கள் அங்கே தங்கியிருக்கும்போது நாங்கள் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி வேறு யாரும் அறிந்திருக்கவில்லை."அந்த பாடல் என் அப்பாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது – அது எனக்கு கொடுத்தது போலவே.

யோவானின் நற்செய்தியின் 20 ஆம் அதிகாரத்தைப் படித்த பிறகு 1912-ன் வசந்த காலத்தில் இந்த பாமாலையை எழுதியதாக ஸ்தோத்திரப் பாடல் எழுத்தாளர் சி. ஆஸ்டின் மைல்ஸ் கூறுகிறார்.“அன்று நான் அதைப் படிக்கும்போது, நானும் அந்த காட்சியின் ஒரு பகுதியாகத் தெரிந்தேன். மரியாளின் வாழ்க்கையில் அந்த வியத்தகு தருணத்திற்கு அவள் தனது இறைவனுக்கு முன்பாக மண்டியிட்டு, ‘ரபூனி  [போதகர்]’ என்று அழுத அந்த காட்சியின் மெளன சாட்சியாக மாறினேன்.

யோவான் 20-ல், மகதலேனா மரியாள் இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு அருகில் அழுதுகொண்டிருப்பதைக் காண்கிறோம். அவள் ஏன் அழுகிறாள் என்று கேட்ட ஒரு மனிதனை அங்கே சந்தித்தாள். அது தோட்டக்காரர் என்று நினைத்து, உயிர்த்தெழுந்த மீட்பருடன் பேசினார் - இயேசுவே! அவளுடைய துக்கம் மகிழ்ச்சியாக மாறியது, சீடர்களிடம், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று சொல்ல ஓடினாள். (வச. 18).

இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற உறுதி நமக்கும் இருக்கிறது! அவர் இப்போது பிதாவுடன் பரலோகத்தில் இருக்கிறார், ஆனால் அவர் நம்மை தனியாக விட்டுவிடவில்லை. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு அவருடைய ஆவியானவர் அவர்களுக்குள் இருக்கிறார், அவர் மூலமாக அவர் நம்முடன் இருப்பதையும் நாம் “அவருடையவர்கள்” என்பதை அறிந்து கொள்வதிலும் நமக்கு உறுதியும் மகிழ்ச்சியும் இருக்கிறது,