ஆராதிக்கிற வாழ்க்கைமுறை
ஒருமுறை ஒரு கிறிஸ்துவ மாநாட்டிற்கு சென்றிருந்தபோது ஒரு பெண் என்னிடம் வந்து “நான் உங்களை எங்கேயோ பார்த்து இருக்கிறேன்” என்று கூறினாள். ஆனால் எங்கே என்று தெரியவில்லை. அந்த பெண்ணை இதற்கு முன்பு பார்த்ததாக எனக்கும் ஞாபகமில்லை.
சிறிது நேரத்துக்கு பிறகு என்னிடம் வந்து “ நீ வெள்ளை நிற கார் வைத்திருக்கிறீர்களா?” என்று அந்த அந்த பெண் என்னை கேட்டார். “ஆம் சில வருடங்களுக்கு முன்பு வைத்திருந்தேன்” வைத்து இருந்தேன் என்று கூறினேன்.
அந்தப் பெண் சிரித்துக்கொண்டே” நான் பள்ளிக்கு செல்லும் வழியில் தினமும் அங்கு இருந்த போக்குவரத்து விளக்கண்டையில் (traffic light) உங்களை பார்ப்பேன். நீங்கள் எப்பொழுதும் சந்தோஷத்துடன் கைகளை உயர்த்தி பாடிக் கொண்டு இருப்பீர்கள். நீங்கள் தேவனை துதித்து பாடுகிறீர்கள் என்று எண்ணிக் கொள்வேன். சில கஷ்டமான நாட்களில் அது என்னை உற்சாகப்படுத்தியது” என்று கூறினார்.
நாங்கள் இருவரும் தேவனுக்கு நன்றி செலுத்தி சந்தோஷத்துடன் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
யாரும் நம்மை பார்க்கவில்லை என்று நாம் நினைத்துக் கொண்டாலும் மற்றவர்கள் இயேசுவை பின்பற்றுகிறவர்களை கவனிக்கிறார்கள் என்பதை என்னுடைய புதிய நண்பர் எனக்கு ஊர்ஜிதப் படுத்தினார். முழு மனதுடன் ஆராதிக்கிற வாழ்க்கை முறையை நாம் பின்பற்றும் போது நம் சிருஷ்டிகர் முன் நாம் எங்கேயும் எப்பொழுதும் வரலாம். அவருடைய மாறாத அன்பையும் விசுவாசத்தையும் நினைவுகூர்ந்து அவருடன் ஐக்கியத்தையும் அவருடைய பராமரிப்புக்காகவும் நாம் நன்றி செலுத்தலாம். நம் வாகனங்களில் செல்லும்போது துதிகளை செலுத்தி பொது இடங்களில் ஜெபித்தும் சிறிய அன்பின் காரியங்களால் தேவனுடைய அன்பை பரப்பி மற்றவர்களை தேவனுடைய நாமத்தை துதிக்க உற்சாகப்படுத்தலாம் (வச 4). ஞாயிறு காலை மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல.
இயேசுவின் வேகத்தில் நகர்வது
சமீபத்தில் எனது நான்கு சக்கர வாகனம் பழுதாகி விட்டது. வாகனம் பழுது பார்க்கும் இடம் ஒரு மைல் தூரத்தில் இருந்தது. நடந்து செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். ஒன்றை கவனித்தேன். அனைவரும் என்னை விட மிகவும் வேகமாக சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இது ஒன்றும் பெரிய ஏவுகணை அறிவியல் இல்லை நடந்து செல்பவர்களை விட ஊர்திகளில் செல்பவர்கள் வேகமாக செல்வார்கள். அப்பொழுது தான் ஒன்றை நான் உணர்ந்தேன்: நாம் எப்போதும் மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். மற்றொன்றையும் உணர்ந்தேன்: தேவனையும் என்னுடைய கால அட்டவணைக்கு ஏற்ப வேகமாக நகர வேண்டும் என்று விரும்புகிறேன்.
இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்த போது அவருடைய மெதுவான வேகம் அவர் நண்பர்களை சில நேரங்களில் விரக்தி அடைய செய்தது. நாம் யோவான் 11ல் வாசிப்பது போன்று மார்த்தாள் மரியாள் தங்கள் சகோதரனாகிய லாசருவை குணப்படுத்த வல்லவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து அவரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். ஆனால் அவரோ லாசரு மரித்து 4 நாட்களுக்கு பிறகு வந்தார் (வச. 17). மார்த்தாள் இயேசுவைப் பார்த்து “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்” என்று கூறினாள். அதாவது இயேசு வேகமாக செயல்படவில்லை என்று அர்த்தம். ஆனால் இயேசுவோ லாசருவை உயிரோடு எழுப்பும்படி பெரிய திட்டத்தை வைத்திருந்தார் (வச. 38-44).
உங்களால் மார்த்தாவின் விரக்தியை உணர முடிகிறதா? என்னால் முடிகிறது. சில சமயங்களில் நம் ஜெபங்களுக்கு சீக்கிரமாக பதிலளிக்கும்படி இயேசுவை எதிர்பார்க்கிறவர்களாக நாம் இருக்கிறோம். சிலவேளைகளில் அவர் தாமதிப்பது போல் காணப்படலாம். ஆனால் அவருடைய சர்வவல்ல திட்டம் நம் திட்டத்திற்கு எதிர்மாறானது. அவருடைய திட்டத்தில் உள்ள வேலைகளை அவர் சரியாக செய்து முடிக்க வல்லவர். இதிலிருந்து அவருடைய மகிமையும் நன்மையும் நம் திட்டங்களுக்கு அப்பாற்பட்டவை என்று அறியலாம்.
வெள்ளம் வந்த போது
அமெரிக்காவில் மேற்கத்திய மாநிலமான நான் வசிக்கும் கொலராடோ பாறைகளால் ஆன மலைகளுக்கும் வருடாந்திர பனிப்பொழிவுக்கும் பிரசித்தி பெற்றது. எனினும் எங்கள் மாநிலத்தில் ஏற்படும் மோசமான இயற்கை பேரழிவு பணியினால் அல்ல, மழையினால் ஏற்படுவது. ஜூலை31, 1976ல் அன்று உல்லாசபோக்கிடமான எஸ்டஸ் பார்க்கில் பெரிய தோம்ப்ஸன் (Big Thompson) என்ற வெள்ளம் வந்தது. கால்நடைகளை சேர்க்காமல் 144 உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தது. இந்த பேரழிவை தொடர்ந்து சாலைகளும் நெடுஞ்சாலைகளின் அடித்தளங்களை பற்றிய ஆய்வுகள் நடைபெற்றன. பாதிக்கப்படாத இடங்களின் சுவர்கள் கான்கிரீட்டினால் கட்டப்பட்டிருந்தது. அதாவது உறுதியான வலிமையான அடித்தளம் இருந்தது.
நம் வாழ்வின் முக்கியமான கேள்வி வெள்ளம் வருமா என்பதல்ல, எப்பொழுது வரும் என்பது தான். சிலசமயங்களில் நாம்முன்னெச்சரிக்கை பண்ணபடுகிறோம். ஆனால் அநேக நேரத்தில் நாம் அறியாமல் இருக்கும்போது நாம் தாக்கப்படுகிறோம். இயேசு இதை குறித்து ஒருவன் தன் வார்த்தைகளை கேட்பதினால் மாத்திரமல்ல சுவிசேஷத்தின்படி வாழ்வதினாலும் நம் அடித்தளமானது உறுதியாக்கப்படுகிறது (லூக்கா 6:47). அந்த பயிற்சி முறையானது ஒரு விதத்தில் கான்க்ரீடை நம் வாழ்வில் ஊற்றுவதை போன்றது. நாம் உறுதியாக கட்டப்பட்டிருப்பதால் வெள்ளம் வரும்போது நாம் அசைக்கப்படுவதில்லை. இந்த பயிற்சி இல்லை என்றால் நம் வாழ்க்கை சரிவுக்கும் அழிவுக்கும் சுலபமாக பாதிக்கக் கூடியதாக மாறிவிடும். முட்டாளாக செயல்படுவதற்கும் ஞானமாக செயல்படுவதற்கும் இதுவே வித்தியாசம். அவ்வப்போது நம்மை நாம் நிதானித்து அஸ்திபாரத்தை ஸ்திரப்படுத்துவது நல்லது. இயேசு நம் பலவீனமான பகுதிகளை ஸ்திரப்படுத்தி நம்மை வெள்ளம் மேற்கொள்ளாத படி நம்மை பலப்படுத்துவாராக.
அறியப்படாத நீரோட்டம்
நள்ளிரவு மணி சரியாக 12 அடிக்கும்போது, நியூயார்க் நகரத்தின் டைம் ஸ்குவேர்-ல் மக்கள் கூடியிருப்பார்கள். லண்டனின் பிக்பென் மணிக்கூண்டில் மணியடிக்கும் போது கூடியிருக்கும் மக்களும் அதனோடு சேர்ந்து பின்னோக்கி எண்ணுவார்கள் (கவுண்ட் டவுன் ) சிட்னி துறைமுகம் வாணவேடிக்கைகளால் அலங்கரிக்கப்படும். ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு விதத்தில் புதிய ஆண்டையும் அதனோடு சேர்ந்து வரும் ஊதிய துவக்கத்தையும் வரவேற்கிறது. புதிய நட்புகளும் புதிய வாய்ப்புகளும் கண்டுபிடிக்கும்படியாக புத்தாண்டின் முதல் நாளில் நாம் புதிய நீரோட்டத்திற்குள் கடந்து செல்கிறோம்.
புத்தாண்டு எவ்வளவு விசேஷமாக இருந்தாலும் நமக்கு வரும் நாட்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எப்படிப்பட்ட புயல்களை நாம்கடந்து போக போகிறோம் என்று நமக்கு தெரியாது. வாணவேடிக்கைகள் சீனாவில் அசுத்த ஆவிகளை துரத்தி அந்த காலத்தை செழிப்பாக மாற்றுவதற்கு கண்டுபிடிக்கப்பட்டவை என்பது புத்தாண்டுகளை பற்றிய ஒரு சீன மரபு.
பாபிலோனில் பழங்காலத்து பழக்கவழக்கமாக புத்தாண்டு பிறக்கும்போது தங்கள் தேவர்களுடன் சமாதானம் படுத்துவதற்கு புது தீர்மானங்கள் எடுக்கப்படும். இப்படியாக தங்கள் முன் வரும் எதிராக்காலத்தை பாதுகாக்க முடிவுகள் எடுக்கப்பட்டன.
தங்கள் தேவர்களுக்கு சத்தியங்கள் செய்யாத நேரத்தில் பாபிலோனியர்கள் இஸ்ரவேலர் முதற்கொண்டு மற்ற தேசங்களையும் கைப்பற்றிக்கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் தேவனுடைய வார்த்தை அடிமைப்படுத்தப்பட்ட யூத மக்களுக்கு வந்தது: “பயப்படாதே… நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்” (ஏசாயா 43:1-2). இதே போன்றுதான் புயலில் மாட்டிக்கொண்ட சீஷர்களை பார்த்து “ஏன் பயப்படுகிறீர்கள்” என்றார் இயேசு (மத்தேயு 8:23-27).
இதே போன்று இன்றும் அறியப்படாத நீரோட்டத்திற்குள்ளாக தள்ளப்படலாம்.ஆனால் எப்பேர்ப்பட்ட அலைகளையும் அமர்த்த அதிகாரம் கொண்ட தேவன் எப்பொழுதும் நம் பக்கத்தில் இருக்கிறார்.