Archives: ஜனவரி 2021

மன்னிப்புடன் ஒரு எதிர்காலம்

1994-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா தேசத்தின் அரசு நிறவெறி அமைப்பிலிருந்து ஒரு புதிய ஜனநாயக திட்டத்தை அமல்படுத்தியது. இனப் பிரிவினையில் இருந்து (கருப்பினத்தவர் மற்றும் வெள்ளை இனத்தவர் பிரிந்து வாழ்ந்தது) ஒன்றிணைந்த மக்களாட்சிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த வருடங்களில் இனப்பிரிவினால் நடந்த குற்றங்களை எப்படி கையாள்வது என்பதை புதிய அரசாங்கத்தால் முடிவு எடுக்க முடியவில்லை.. இருப்பினும் தேச தலைவர்களால் கடந்த கால குற்றங்களை விட்டு விடவும் முடியவில்லை ஆனால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை கொடுப்பது அந்த தேசத்தின் காயங்களை ஆழமாகிவிடும். தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயரான டெஸ்மன்ட் டுட்டு தனது “No Future Without Forgiveness” (மன்னிப்பு இல்லாமல் எதிர்காலம் இல்லை ) என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார் “நமக்கு சுலபமாக கிடைத்திருக்கலாம், பழிவாங்கும் நீதி கூட கிடைத்திருக்கும் ஆனா தென் ஆபிரிக்க முழுவதுமாக அழிந்திருக்கும்” என்று.

அந்த புதிய ஜனநாயக அரசு அமைத்த “உண்மை மற்றும் வேற்றுமையை அகற்றும்” குழு ஒன்றை அமைத்து உண்மை, நீதி, இரக்கத்தின் கடினமான பாதையை தேர்ந்தெடுத்தது. தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்பினவர்களுக்கு மறுசீரமைப்பிற்கான வழி வழங்கப்பட்டது. தைரியமாக உண்மையின் எதிர்கொண்டதால் அந்த தேசத்தால் குணமடைய முடிந்தது.

ஒருவிதத்தில், தென் ஆப்பிரிக்காவின் சங்கடங்கள் நமது போராட்டங்களையும் பிரதிபலிக்கலாம். நீதியையும் இரக்கத்தையும் பின்தொடர நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் (மீகா6:8), ஆனால் அநேக நேரங்களில் இரக்கம் என்பது பொறுப்பில்லாத தன்மையாகவும், நீதிக்காக பின்தொடர்வது பழி வாங்குவதாகவும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

தீமையை வெறுக்கும் அன்பை உடையவர்களாய் மாத்திரம் இல்லாமல் (ரோ 12:9) நம்மோடு இருப்பவர்களின் மறுரூபமாகுதலையும் விரும்புபவராக இருக்க வேண்டும் (ரோ 13:10). இயேசுவின் ஆவியானவரின் வல்லமையால் தீமையை நன்மையால் மேற்கொள்வது என்ன என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம் (12:21).

தைரியத்தை உடுத்திக்கொள்

சுவிசேஷம் தடை செய்யப்பட்ட தேசத்தில் ஆண்ட்ரூ வாழ்ந்து வந்தார். உங்கள் விசுவாசத்தை எப்படி ரகசியமாக காத்து வருகிறீர்கள் என்று நான் கேட்டபோது, அவர் அதை ரகசியமாக வைப்பதில்லை என்று கூறினார். அவர் சபையின் முத்திரையை எப்போதும் தனது சட்டையின்மேல் அணிந்து தான் வெளியே செல்லுவார். அவர் கைது செய்யப்படும் நேரங்களில் கூட காவலர்களிடம் “அவர்களுக்கும் இயேசு தேவை” துன்று கூறுவார். அவர் பக்கத்தில் யார் இருக்கிறார் என்று ஆண்ட்ரு அறிந்திருந்ததால் அவர் தைரியமாக இருந்தார்.

தன்னை கைது செய்யும்படி 50 காவலர்களை இஸ்ரவேலின் ராஜா அனுப்பின போதும் எலியா அச்சுறத்தப்படவில்லை (2 இரா 1:9). தேவன் யார் பக்கம் இருக்கிறார் என்று அவர் அறிந்து அந்த 50 காவலாளிகளை பட்சிக்கும்படி வானத்திலிருந்து அக்கினியை வரப்பண்ணினார். ராஜா மறுபடியும் அதிக காவலாளிகளை அனுப்பினான், எலியா மறுபடியும் அதையே செய்தார். மூன்றாவது முறையாக வந்த காவலாளிகள் தலைவன் தங்களை விட்டுவிடும்படி எலியாவை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான். எலியா அவர்களை பார்த்து பயந்ததை விட அவர்கள் எலியாவை பார்த்து பயந்தது தான் அதிகம் எனவே தேவதூதன் எலியாவை அவர்களுடன் போவது பாதுகாப்பானது என்று கூறினான். (வச 13-15)

நமது எதிராளிகள் மீது அக்கினியை வரவழைக்க இயேசு விரும்புவதில்லை. அவரது சீஷர்கள் ஒரு சமாரிய கிராமத்தின் மேல் தாங்கள் அக்கினி வரவழைக்கிறோம் என்று கேட்டபோது, இயேசு அவர்களை அதட்டினார் (லூக்கா 9:51-55). நாம் வேறு ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். இருப்பினும் எலியாவை போன்று தைரியம் உள்ளவர்களாய் - எல்லா மக்களுக்காக மரித்த இரட்சகரை பற்றி கூற தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அது ஒரு தனி நபராக நாம் 50 பேருக்கு சமமாக நிற்பது போன்று இருக்கும் ஆனால் உண்மையில் அது ஒருவரான தேவனே நிற்பது. மற்றவர்களிடம் தைரியமாக அன்பு காட்ட இயேசு தருகிறார்.

மூச்சுத் திணறல்

எனது வீட்டின் அருகே உள்ள வீட்டு மேம்பாட்டு கடையில் ஒரு பெரிய பச்சை நிற பொத்தான் ஒன்று உண்டு. வாடிக்கையாளர்கள் ஏதேனும் உதவி வேண்டுமானால் அதை அழுத்தவும் அழுத்திய ஒரு நிமிடத்துக்குள் உதவுவதற்கு யாரும் வரவில்லையென்றால் வாங்கும் பொருட்களில் ஒரு தள்ளுபடி கிடைக்கும்.

இதை போன்ற சூழ்நிலையில் வேகமாக கவனிக்கப்படும் வாடிக்கையாளராக இருக்க நமக்கு பிடிக்கும். ஆனால் சேவை செய்ய வேண்டியது நாமாக இருந்தால் அது நமக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும். நம்மில் அநேகர் நம் வேலைகளை மிகவும் விரைந்து அதிக மணி நேரம் வேலை செய்து மிகவும் சுருக்கமான நேரத்திற்குள் அதிக வேலையை முடிக்கும் கட்டாயத்திற்குள்ளாக அழுதப்படுகிறோம். ஒரு அவசரமான வாழ்க்கை முறைக்குள்ளாக அது செல்கிறது.

தேவன் இஸ்ரவேலருக்கு ஓய்வு நாளை கடைபிடிக்க கட்டளையிட்ட போது ஒரு முக்கிய காரணத்தை அறிவித்தார். “எகிப்தில் அடிமையாய் இருந்ததை மறந்து விடாதீர்கள்” (யாத் 5:15). அடிமைகளாக பார்வோன் நியமித்த குறுகிய காலத்துக்குள் வேலைகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது விடுதலை பெற்றதால், தாங்களும் தாங்கள் சேவை செய்தவர்களும் ஓய்வு எடுக்க ஒரு முழுநாளை ஆண்டவர் கட்டளையிட்டார். தேவனுடைய ஆட்சியில் சோர்வடைந்து வேலையினால் மூச்சுத்திணறும் யாரும் இருக்க கூடாது.

எந்நேரங்களில் சோர்வடையும் வரை அல்லது உங்களை காத்திருக்க செய்யும் மக்களிடம் எப்பொழுதெல்லாம் வேலை செய்து இருக்கிறீர்கள் ? நமக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வேலை இடைவெளி கொடுப்போம். விரைந்து வேலை செய்யும் கலாச்சாரம் பார்வோனுடையது, நம் தேவனுடையது அல்ல.

வல்லமையான ஓடை

வாஷிங்டன் டி சி நகரில் உள்ள ஆபிரிக்க-அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் அடிமைத்தனத்தையும் அதன் பின்விளைவுகளையும் கண்டு ஆராய்ந்துக் கொண்டிருக்கும்போது அங்குள்ள ஒரு அமைதியான அறையில் ஒளி வரக்கூடிய வெண்கல கண்ணாடிகளால்
ஆன சுவர்களில் தண்ணீர் மேலிருந்து மழைபோல ஊற்றி ஒரு சிறிய குளம் போன்று இருக்கும்.
அந்த அறையில் முனைவர் மார்ட்டின் லூத்தர் கிங் கூறிய சொற்கள் எழுதப்பட்டிருந்தன “நீதி மழையை போல பெய்யும் வரை, நேர்மை ஒரு வல்லமையான ஓடையை போல புரண்டு ஓடும் வரை நாம் போராடுவோம் என்று நாம் தீர்மானித்திருக்கிறேன்”.. இந்த வல்லமையுள்ள வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் ஆமோஸின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

மத வழிபாடுகளிலும்,பண்டிகைகள் கொண்டாடுவதிலும், பலிகள் செலுத்துவதிலும் அதிகம் நாட்டம் கொண்டு ஆனா உள்ளத்தில் தேவனை விட்டு வெகு தூரத்தில் இருந்த மக்களின் மத்தியில் தான் ஆமோஸ் தீர்க்கதரிசியாக வாழ்ந்து வந்தார். அவர்களுடைய செயல்கள் தேவனுடைய கட்டளைகளையும், தேவையுள்ளவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் ஒதுக்கினதால் தேவன் அவர்கள் செயல்களை நிராகரித்தார்.

அணைத்து மக்களின் நலனுக்காக உண்மையான அக்கறை தம் மக்கள் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை ஆமோஸ் தன புத்தகத்தில் எழுதியுள்ளார். இப்பேற்பட்ட வாழ்வுமுறை மற்ற உயிரை வலிமையாக்கும் நதியாக இருக்கும்.

தேவனின் இணைந்து இருக்கிறோம் என்பதற்கு சான்றாக நம்மை சுற்றி இருப்பவர்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பது வெளிப்படுத்தும் என்று இயேசு கற்றுக்கொடுக்கிறார் (மத் 22:37-39). தேவனை நேசிக்க நம் இதயங்கள் நாடுவது நீதியை நேசிக்கும் இடத்தில் இருந்தும் வருவதாக.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.

 

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.