நல்ல புத்தகத்துடன் நெருங்கு
ஐஸ்லாந்து என்று சிறிய நாடு வாசிப்பவர்களின் நாடு. உண்மையில் இந்த நாட்டில், ஒரு நபருக்கு, ஒவ்வொரு வருடமும், மற்றெந்த நாடுகளையும் விட அதிகமான புத்தகங்கள் வெளியிடப்பட்டு வாசிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் ஈவ் அன்று ஐஸ்லாந்து மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் புத்தகங்களைக் கொடுப்பதும் பிறகு இரவு முழுவதும் நீண்ட நேரம் வாசிப்பதும் ஒரு பாரம்பரியம். இந்தப் பாரம்பரியம் இரண்டாம் உலகப் போருக்கு முந்தையது, இறக்குமதிகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் காகிதம் மலிவாயிருந்தது. இலையுதிர் பிந்தய காலத்தில் ஐஸ்லாந்து வெளியீட்டாளர்கள் புதிய தலைப்புகளுடன் சந்தையை புத்தகங்களினால் நிரப்பினர். இப்போது நாட்டினி புதிய வெளியீடுகளின் பட்டியல் நவம்பர் நடுப்பகுதியில் ஒவ்வொரு ஐஸ்லாந்திய வீட்டிற்கும் அனுப்பப்படுகிறது. இந்தப் பாரம்பரியம் கிறிஸ்மஸ் புத்தக வெள்ளம் என்று அழைக்கப்படுகிறது.
ஓரு நல்ல கதையை உருவாக்கும் திறனையும் அதனை கற்பிக்கவும், அவர்களுடைய வார்த்தைகளின் மூலம் மற்றவர்களை ஊக்குவிக்கவும் தேவன் அனேகரை ஆசீர்வாதமாக வைத்திருப்பகற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க முடியும். ஒரு நல்ல புத்தகம் போல் எதுவும் இல்லை! எல்லாவற்றிலும் அதிகம் விற்பனையாகும் புத்தகம், பைபிள், பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட, கவிதை மற்றும் உரைநடை, சில மாபெரும் கதைகள்-சில அவ்வாறு இல்லை, ஆனால் அவையனைத்தும் ஊக்கமளித்தன. அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டியது போல 'வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துக்கொள்ளுகலுக்கும், சீர்த்திருத்தலுக்கும், நீதியை படிப்பிக்கிறதற்கும், பிரயோஜனமுள்ளவைகளாய் இருக்கிறது" (2 தீமோ. 3:16-17). வேத வாசிப்பு நம்மைக் கண்டித்து உணர்த்துகிறது, ஊக்குவிக்கிறது, அவருக்காக வாழ உதவி செய்கிறது மற்றும் சத்தியத்திற்குள்ளாக நம்மை வழிநடத்துகிறது (2:15).
நம்முடைய வாசிப்பில், எல்லாவற்றிலும் மகத்தான புத்தகமான பைபிளை வாசிக்க நேரத்தை கடைப்பிடிக்க மறந்துவிடக்கூடாது.
குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்
மரியாள் சுமந்துக்கொண்டிருக்கும் குழந்தையின் வரவை எதிர்நோக்கியிருக்கும்போது யோசேப்பிடம் இது ஒரு தேவைப்படாத உரையாடலாயிருந்தது: 'யோசேப்பு, நாம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?" பிரசவத்திற்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்களைப் போல அல்லாமல், இந்தக் குழந்தையை அவர்கள் என்னவென்று அழைப்பார்கள் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.
மரியாளையும் யோசேப்பையும் சந்தித்த தேவதூதர்கள் குழந்தையின் பெயர் இயேசு என்பதை அவ்விருவருக்கும் அறிவித்தனர் (மத். 1:20-21, லூக். 1:30-31). யோசேப்புக்குத் தோன்றின தூதன் இயேசு என்ற பெயருக்கு 'அவர் தம்முடைய ஜனங்களை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று அர்த்தம்" எனக் கூறினார்.
அவர் இம்மானுவேல் என்றும் அழைக்கப்படுவார் (ஏசா. 7:14), அதற்கு 'தேவன் நம்மோடிருக்கிறார்" என்று அர்த்தம். ஏனென்றால் மனித உருவில் தேவன் - துணிகளில் சுற்றப்பட்டிருக்கும் தெய்வம். 'ஆலோசனைக் கர்த்தா",; 'வல்லமையுள்ள தேவன்", 'நித்தியப் பிதா" (9:6) என்னும் அனேக பெயர்களையும் ஏசாயா தீர்க்கதரிசி சூட்டியுள்ளார். ஏனென்றால் அவர் அவை அனைத்திற்கும் உரியவர்.
புதிய குழந்தைக்கு பெயரிடுவது எப்போதுமே உற்சாகமாக இருக்கும். ஆனால் 'மேசியா என்று அழைக்கப்படும் இயேசு" (மத். 1:16) போன்ற வல்லமையுள்ள, ஆச்சரியமான, உலகத்தையே மாற்றக் கூடிய பெயர் வேறு எந்த குழந்தைக்கும் இருந்ததில்லை. 'நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக்" கூப்பிடுவது நமக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. அவராலேயன்றி வேரொருவராலும் இரட்சிப்பு இல்லை (அப். 4:12).
இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் அவரைத் துதித்து, அவர் நமக்கு எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
பசுமையைத் தேடுங்கள்
கடுமையாக குரல் கொடுக்கும் கேப்டன் மற்றொரு தாமதத்தை அறிவித்தார். ஏற்கனவே இரண்டு மணி நேரம் அசையாமல் அமர்ந்திருந்த விமானத்தில், நெரிசலான என் ஜன்னல் இருக்கையில் விரக்தியுடன் துடித்தேன். நீண்ட வேலை வாரத்திற்குப் பிறகு வீட்டில் கிடைக்கும் ஆறுதலுக்கும் ஓய்வுக்கும் நான் ஏங்கினேன். இன்னும் எவ்வளவு காலம்? மழைத்துளி மூடிய ஜன்னலுக்கு வெளியே நான் பார்த்தப்போது, ஓடுபாதைகள் சந்தித்த சிமென்ட் இடைவெளியில் பச்சைப் புல் ஒரு தனிமையான முக்கோணமாக வளர்வதை நான் கவனித்தேன். அத்தனை கான்கிரீட்டுக்கும் நடுவில் ஒரு விசித்திரமான காட்சி.
அனுபவம் மிக்க மேய்ப்பரான தாவீது தன் ஆடுகளுக்கு பசுமையான மேய்ச்சலை கட்டும் தேவையை நன்கு அறிந்திருந்தார். சங்கீதம் 23ல், தான் இஸ்ரவேலின் ராஜாவாக இருக்கும்போது சோர்வுற்ற நேரங்களில் அவரை முன்னோக்கிக் கொண்டுச் செல்லும் ஒரு முக்கியமான பாடத்தை அவர் எழுதினார். 'கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து ... நீதியின் பாதைகளில் நடத்துகிறார்" (வச. 1-3).
ஒரு விமான நிலையத்தின் தார்ச் சாலையின் கான்கிரீட் காட்டில், எனது இலக்கிலிருந்து தாமதமாகி, ஆறுதலும் ஓய்வும் இல்லததை உணர்ந்தப்போது, என்னுடைய நல்ல மேய்ப்யரான தேவன், ஒரு பச்சையான ஒட்டுக்கு நேராய் என் கண்களைத் திருப்பினார். அவருடனான உறவில், அவர் கொடுக்கும் ஓய்வை, நான் எங்கிருந்தாலும், அதை கவனித்து நுழைந்தால் அதைப் கண்டுக்கொள்ள முடியும்.
பசுமையானதைத் தேடுங்கள் - பாடம் பல ஆண்டுகளாக நிடித்தது. அது அங்கு இருக்கிறது. தேவன் நம் வாழ்க்கையில் இருக்கும்போது நாம் குறைவுபடுவதில்லை. அவர் நம்மைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து நம்முடைய ஆத்துமாவைத் தேற்றுகிறார்.
நீங்கள் யாரை அணிந்துக்கொண்டிருக்கிறீர்கள்
அர்ஜென்டினாவின் பெண்கள் கூடைப்பந்து அணியினர் தவறான சீருடைகளை அணிந்துக்கொண்டு போட்டிக்கு வந்தனர். அவர்களின் அடர்நீல நிற ஜெர்சிகள் கொலம்பியாவின் அடர் நீல நிற ஜெர்சிகளுக்கு மிகவும் ஒத்திருந்தன. அதுமல்லாமல் அவர்கள் வருகை தந்த அணியாயிருந்ததினால் அவர்கள் வெள்ளை நிற ஜெர்சியை அணிந்திருக்க வேண்டும். மாற்று சீருடைகளை பெற்றுக்கொள்ளவும் மற்றும் அதனை மாற்றிக்கொள்ளவும் நேரமில்லாததால் அவர்கள் விளையாட்டை இழக்க நேரிட்டது. எதிர்காலத்தில் அர்ஜென்டினா நிச்சயம் அவர்கள் அணிந்திருப்பதை இருமுறை சரிபார்க்கும்.
சகரியா தீர்க்கதரிசியின் காலத்தில், தேவன் அவருக்கு ஒரு தரிசனத்தைக் காட்டினார். அதில் பிரதான ஆசாரியனான யோசுவா அழுக்கு உடைகளைத் தரித்துக்கொண்டு தேவனுக்கு முன்பாக வந்தார். சாத்தான் பரிகாசம் செய்து சுட்டிக்காட்டினான். அவர் தகுதியற்றவர்! விளையாட்டு முடிந்தது! ஆனால் உடையை மாற்றிக்கொள்ள நேரமிருந்தது. தேவன் சாத்தானைக் கடிந்துக்கொண்டார். யோசுவாவின் அழுக்கு வஸ்திரங்களை அகற்றும்டபடி தம்முடைய தூதருக்கு கட்டளையிட்டார். தேவன் யோசுவாவை நோக்கி 'பார். நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து உனக்கு சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்" என்றார் (சக. 3:3).
ஆதாமின் பாவத்தின் துர்நாற்றத்தை அணிந்துக்கொண்டு இவ்வுலகத்தில் வந்தோம். நம்முடைய சொந்த பாவத்தையும் இதோடு அடுக்கிக்கொண்டோம். நாம் நம்முடைய அழுக்கு வஸ்திரத்தோடு இருந்தால் நம்முடைய வாழ்க்கை விளையாட்டை இழந்து விடுவோம். நம்முடைய பாவத்தால் நாம் வெறுப்படைந்து தேவனிடம் திரும்பினால் அவர் நம்மை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலும் தம்மை மற்றும் தம்முடைய நீதியினால் நம்மை அணிவிப்பார். நாம் யாரை அணிந்துக் கொண்டிருக்கிடிறோம் என்று சரிபார்க்க வேண்டிய நேரம் இது. 'தி சாலிட் ராக்" என்ற ஆங்கிலப் பாடலின் இறுதி சரணம் நாம் எவ்வாறு வென்றோம் என்று விளக்குகிறது. 'அவர் எக்காள சத்தத்தோடு வரும்போது... ஓ! நான் அவரிடத்தில் காணப்படுவேன், ஃ அவருடைய நீதியின் ஆடை மட்டுமே அணிந்து, ஃ குற்றமில்லாமல் சிங்காசனத்திற்கு முன் நிற்பேன்".