நீண்ட தூர பயணம்
பெஞ்சமின் தன்னுடைய சக ஊழியர்கள் ஒவ்வொருவராக பதவி உயர்வு அடைந்ததை பார்க்கும்போது தன்னை அறியாமல் பொறாமை அடைவதை உணர்ந்தார். சில சமயங்களில் அவர் நண்பர்களே அவரிடம் வந்து "நீ தான் அந்த உயர்வை பெற்றிருக்க வேண்டும், நீ தான் அதற்க்கு தகுதியானவன், ஏன் இன்னும் உனக்கு கிடைக்கவில்லை" என்று கேட்பதுண்டு. பெஞ்சமினோ தன் வேலைக்குறித்த கவலைகளை தேவனிடம் விட்டுவிட்டு, "தேவன் சித்தம் இதுவானால் அவர் எனக்கு தந்த வேலையை தொடர்ந்து செய்வேன்" என்று முடிவெடுத்தான்.
பல வருடத்திற்கு பிறகு பெஞ்சமினுக்கு பதவி முன்னேற்றம் கிடைத்தது. அவருக்கு பல வருடம் அனுபவம் இருந்ததால் அவரது புதிய பொறுப்புகளை நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்ள முடிந்தது. அவர் கூட வேலை செய்பவர்களிடம் தனது மரியாதையை காப்பாற்றவும் முடிந்தது. இதற்கிடையில் குறைந்த வருட அனுபவத்துடன் பதவி உயர்வை பெற்றவர்கள் அவர்களின் பொறுப்புகளை தக்கவைத்துக்கொள்ள மிகவும் பிரயாசப்பட்டார்கள். பெஞ்சமினோ, தேவன் தன்னை இந்த பதவிக்கு ஆயத்தம்பண்ணும்படி தேவன் அவனை இஸ்ரவேல் மக்களை போல் நீண்ட தூர பயணித்தில் எடுத்து சென்றார் என்று புரிந்து கொண்டார்.
தேவன் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து நடத்தி சென்றபோது (யாத். 13:17-18) அவர் நீண்ட தூர பிரயாணத்தை தெரிந்துகொண்டார். ஏனெனில் கானானுக்கு செல்லும் குறுக்குவழி அபாயம் நிறைந்ததாக காணப்பட்டது. வரப்போகும் போராட்டத்திற்கு அந்த நீண்ட தூர பிரயாணமே அவர்களின் சரீரத்தையும், மனதையும் அவர்களின் ஆவியையும் பலப்படுத்தினது.
எப்போதும் குறுக்கு வழிகள் சிறந்தது அல்ல. சில சமயங்களில் தேவன் நம் வாழ்வின் வேலையிலோ, நாம் எடுக்கும் முயற்சிகளிலோ நீண்ட தூர பயணத்தை எடுக்கும்படி வழி செய்வார். ஏனெனில் அதுவே நம் முன் இருக்கும் பாதைக்கு நம்மை தகுதி படுத்துகிறது. நாம் நினைக்கும் காரியங்கள் உடனடியாக நிறைவேறவில்லை என்றால், நம்மை பொறுப்பெடுத்து வழி நடத்தும் தேவன் மேல் நம்பிக்கை வைப்போம்.
வீட்டிற்கு திரும்புவோம்
ராணுவ வீரரான வால்டர் டிக்சன் தன் திருமணம் முடிந்து ஐந்து நாளில் போருக்கு திரும்ப சென்றுவிட்டார். சில மாதங்களில் தன் மனைவியின் கடிதங்கள் நிறைந்த அவரது மேலுறையை போர்க்களத்தில் கண்டுபிடித்தார்கள். இதனிமித்தமாக ராணுவ அதிகாரிகள் அவர் உயிரிழந்துவிட்டதாக அவரின் மனைவியிடம் தகவல் தெரிவித்தார்கள். ஆனால் இரண்டரை வருடங்களாக அவர் போர்கைதியாக சிறைபிடிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு நிமிடமும் தப்பிப்பதைகுறித்து சிந்தித்துகொண்டிருப்பார். ஐந்து முறை தப்பிக்க முயற்சி செய்த போதும் மறுபடியும் பிடிக்கப்பட்டார். இறுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் வீடு திரும்பும்போது அனைவருடைய அதிர்ச்சியை நினைத்து பாருங்கள்.
சிறைபிடிக்கப்பட்டு, வீட்டிலிருந்து தூரதேசத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதின் கஷ்டம் தேவ பிள்ளைகளுக்கு தெரியும். அவர்கள் தேவனுக்கு எதிர்த்து நின்றது நிமித்தம் நாடுகடத்தப்பட்டார்கள். அனுதினமும் காலையில் எழுந்து வீடுதிரும்ப வேண்டும் என்று ஏங்கினார்கள், ஆனால் அவர்கள் தப்பிப்போகும்படி அவர்களுக்கு ஒரு வழியும் கிடைக்கவில்லை. ஆனால் தேவனோ அவர்களை மறக்கவில்லை என்று அவர்களுக்கு வாக்குத்தத்தம் கூறினார் "அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்"(சகரியா 10: 6). அவர்களின் வீடாமுயற்சியினால் அல்ல, கர்த்தரே அவருடைய இரகத்தினால் அவர்களுடைய தேவையை சந்தித்தார் "நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்.....தங்கள் பிள்ளைகளோடுங்கூடப் பிழைத்துத் திரும்புவார்கள்" (வச. 8,9).
சில சமயங்களில் நம் பாவத்தினாலேயோ அல்லது கடினமான சூழ்நிலைகளில் நாம் தேவனிடமிருந்து மிகவும் தூரம் சென்றது போல் தோன்றினாலும் அவர் நம்மை மறப்பதில்லை என்பது நிச்சயம். நம் வாஞ்சைகளை அவர் அறிவார், அதை அறிந்து நம்மை அழைப்பார். அதற்கு நாம் செவிகொடுப்போமானால் அவர் இருக்கும் இடமாகிய நம் வீட்டிற்க்கு திரும்புவோம்.
மன்னிப்பதில் வெற்றி காண்பது
ராஜன், போதைப்பொருள்கள் மற்றும் பாலியல் பாவத்துடன் போராடியதால், வாழ்க்கையில் நம்பிக்கையில்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். தன் நெருங்கிய உறவுகளும் சீர்குலைந்ததால் அவர் மனசாட்சி அவரை கஷ்டப்படுத்திக்கொண்டே இருந்தது. இப்படிப்பட்ட கஷ்டங்கள் மத்தியில் தன்னை அறியாமலே ஒரு போதகரிடம் இவைகளை குறித்து பகிர்ந்தார். அது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. தேவ இரக்கத்தையும், மன்னிப்பையும் அந்த போதகர் சொல்ல கேட்கும்போது அவர் துயரமெல்லாம் நீங்கிற்று.
தாவீது தன் மோசமான தந்திரத்தின் மூலமாக ஒரு பெண்ணின் கணவனை கொன்று தன் பாவத்தை அதிகரித்தான் (2 சாமு. 11-12). அதை உணர்ந்தபோது சங்கீதம் 32 எழுதினான் என்று நம்பப்படுகிறது. இந்த சம்பவங்களினால் அவனுடைய பாவங்கள் அவன் மனசாட்சியை வருத்தியது (சங். 32:3,4). அவன் செய்த பாவத்தின் அசிங்கத்தையும் அதினால் அவன் அனுபவித்த ஆழ்ந்த போராட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் மூடப்பட்ட பாவத்தினால் நமக்கு விடுதலை இல்லை என்பதே. மெய்யான விடுதலை தேவனிடம் அறிக்கையிட்டு அவர் மன்னிப்பை ஏற்றுக்கொள்வது (வச. 5)
நம் மற்றவர்களுக்கோ, அல்லது நமக்கோ பாவம் செய்வோமானால் தேவனுடைய இரக்கமே நம் விடுதலைக்கு ஆரம்பம். நம் பாவ உணர்ச்சி நமக்கு அவர் மூலமாய் நிரந்தரமல்ல. அதனால் நாமும் சங்கீதக்காரனோடு இப்பாடலை சேர்ந்து பாடுவோம் "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்" (வச. 1) நம் பாவத்தை உணர்ந்தவுடன் அரவணைக்கும் கரங்களுடன் நம்மை எதிர்பார்க்கும் தேவனிடம் செல்வோம்.
நம் பங்கை செய்வது
என்னுடைய பேத்திகள் இருவரும் தங்கள் பள்ளியில் "ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்" என்கிற நாடகத்தில் நடிப்பதின் நிமித்தம் மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்டார்கள். இருவரின் நோக்கமெல்லாம் அதின் கதாநாயகியான ஆலிஸாக நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால் நாடகத்தில் ஓரமாக பூக்களாக நிற்கும்படியாக அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இருப்பினும் இருவரும் தங்கள் தோழிக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர்களுடைய நண்பர்களுக்காக சந்தோஷப்படுவதிலும் அதில் மற்றவர்களிடம் பகிருவதிலும் மிகவும் ஆனந்தமடைந்தார்கள்.
சபையான சரீரத்தில் நாம் மற்றவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. ஒவ்வொரு சபையிலும் முக்கிய அங்கத்தினராக நியமிக்கப்பட்ட சிலர் உண்டு. ஆனால் அந்த சபைக்கும் பூக்களாய் சிறிய மற்றும் முக்கியமான பங்கை செய்பவர்கள் மிகவும் அவசியமாக தேவை. நமக்கு பிடித்த பங்கு மற்றவர்களுக்கு கிடைத்தால் அவர்களை ஊக்குவித்து, நமக்கு தேவன் தந்த பங்கை ஆர்வத்துடன் நிறைவேற்றுவோம்.
மற்றவர்களை ஊக்குவித்து உதவிசெய்வதும் தேவன் மேல் அன்பு செலுத்தும் ஒரு வழி. எபிரெயர் 6:10ல் சொல்வது போல் "உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே". தேவன் தந்த எந்த பரிசும் மிகவும் முக்கியமானது: "அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்" (1 பேது. 4:10).
சபையாக மற்றவர்களை ஊக்குவிப்பதிலும், தேவன் அருளிய வரத்தின்படி அவரவர் தன் வேலையை விடாமுயற்சியுடன் செய்யும் ஒரு சபையை சற்று நினைத்துப் பாருங்கள். அதுவே மிகவும் சந்தோஷம் நிறைந்ததாகவும், உற்சாகமூட்டும் சபையாக இருக்கும்.