ராணுவ வீரரான வால்டர் டிக்சன் தன் திருமணம் முடிந்து ஐந்து நாளில் போருக்கு திரும்ப சென்றுவிட்டார். சில மாதங்களில் தன் மனைவியின் கடிதங்கள் நிறைந்த அவரது மேலுறையை போர்க்களத்தில் கண்டுபிடித்தார்கள். இதனிமித்தமாக ராணுவ அதிகாரிகள் அவர் உயிரிழந்துவிட்டதாக அவரின் மனைவியிடம் தகவல் தெரிவித்தார்கள். ஆனால் இரண்டரை வருடங்களாக அவர் போர்கைதியாக சிறைபிடிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு நிமிடமும் தப்பிப்பதைகுறித்து சிந்தித்துகொண்டிருப்பார். ஐந்து முறை தப்பிக்க முயற்சி செய்த போதும் மறுபடியும் பிடிக்கப்பட்டார். இறுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் வீடு திரும்பும்போது அனைவருடைய அதிர்ச்சியை நினைத்து பாருங்கள்.

சிறைபிடிக்கப்பட்டு, வீட்டிலிருந்து தூரதேசத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதின் கஷ்டம் தேவ பிள்ளைகளுக்கு தெரியும். அவர்கள் தேவனுக்கு எதிர்த்து நின்றது நிமித்தம் நாடுகடத்தப்பட்டார்கள். அனுதினமும் காலையில் எழுந்து வீடுதிரும்ப வேண்டும் என்று ஏங்கினார்கள், ஆனால் அவர்கள் தப்பிப்போகும்படி அவர்களுக்கு ஒரு வழியும் கிடைக்கவில்லை. ஆனால் தேவனோ அவர்களை மறக்கவில்லை என்று அவர்களுக்கு வாக்குத்தத்தம் கூறினார் “அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்”(சகரியா 10: 6). அவர்களின் வீடாமுயற்சியினால் அல்ல, கர்த்தரே  அவருடைய இரகத்தினால் அவர்களுடைய தேவையை சந்தித்தார் “நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்…..தங்கள் பிள்ளைகளோடுங்கூடப் பிழைத்துத் திரும்புவார்கள்” (வச. 8,9).

சில சமயங்களில் நம் பாவத்தினாலேயோ அல்லது கடினமான சூழ்நிலைகளில் நாம் தேவனிடமிருந்து மிகவும் தூரம் சென்றது போல் தோன்றினாலும் அவர் நம்மை மறப்பதில்லை என்பது நிச்சயம். நம் வாஞ்சைகளை அவர் அறிவார், அதை அறிந்து நம்மை அழைப்பார். அதற்கு நாம் செவிகொடுப்போமானால் அவர் இருக்கும் இடமாகிய நம் வீட்டிற்க்கு திரும்புவோம்.