பெஞ்சமின் தன்னுடைய   சக ஊழியர்கள் ஒவ்வொருவராக பதவி உயர்வு அடைந்ததை பார்க்கும்போது தன்னை அறியாமல் பொறாமை அடைவதை உணர்ந்தார். சில சமயங்களில் அவர் நண்பர்களே அவரிடம் வந்து “நீ தான் அந்த உயர்வை பெற்றிருக்க வேண்டும், நீ தான் அதற்க்கு தகுதியானவன், ஏன் இன்னும் உனக்கு கிடைக்கவில்லை” என்று கேட்பதுண்டு. பெஞ்சமினோ தன் வேலைக்குறித்த கவலைகளை தேவனிடம் விட்டுவிட்டு, “தேவன் சித்தம் இதுவானால் அவர் எனக்கு தந்த வேலையை தொடர்ந்து செய்வேன்” என்று முடிவெடுத்தான்.  

பல வருடத்திற்கு பிறகு பெஞ்சமினுக்கு பதவி முன்னேற்றம் கிடைத்தது. அவருக்கு பல வருடம் அனுபவம் இருந்ததால் அவரது புதிய பொறுப்புகளை நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்ள முடிந்தது. அவர் கூட வேலை செய்பவர்களிடம் தனது மரியாதையை காப்பாற்றவும் முடிந்தது. இதற்கிடையில் குறைந்த வருட அனுபவத்துடன் பதவி உயர்வை பெற்றவர்கள் அவர்களின் பொறுப்புகளை தக்கவைத்துக்கொள்ள மிகவும் பிரயாசப்பட்டார்கள். பெஞ்சமினோ, தேவன் தன்னை  இந்த பதவிக்கு ஆயத்தம்பண்ணும்படி தேவன் அவனை இஸ்ரவேல் மக்களை போல் நீண்ட தூர பயணித்தில் எடுத்து சென்றார் என்று புரிந்து கொண்டார்.

தேவன் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து நடத்தி சென்றபோது (யாத். 13:17-18) அவர் நீண்ட தூர பிரயாணத்தை தெரிந்துகொண்டார். ஏனெனில் கானானுக்கு செல்லும் குறுக்குவழி அபாயம் நிறைந்ததாக காணப்பட்டது. வரப்போகும் போராட்டத்திற்கு அந்த நீண்ட தூர பிரயாணமே அவர்களின் சரீரத்தையும், மனதையும் அவர்களின் ஆவியையும் பலப்படுத்தினது.

எப்போதும் குறுக்கு வழிகள் சிறந்தது அல்ல. சில சமயங்களில் தேவன் நம் வாழ்வின் வேலையிலோ, நாம் எடுக்கும் முயற்சிகளிலோ நீண்ட தூர பயணத்தை எடுக்கும்படி வழி செய்வார். ஏனெனில் அதுவே நம் முன் இருக்கும் பாதைக்கு நம்மை தகுதி படுத்துகிறது. நாம் நினைக்கும் காரியங்கள் உடனடியாக நிறைவேறவில்லை என்றால், நம்மை பொறுப்பெடுத்து வழி நடத்தும் தேவன் மேல் நம்பிக்கை வைப்போம்.