ராஜன், போதைப்பொருள்கள் மற்றும் பாலியல் பாவத்துடன் போராடியதால், வாழ்க்கையில் நம்பிக்கையில்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். தன் நெருங்கிய உறவுகளும் சீர்குலைந்ததால் அவர் மனசாட்சி அவரை கஷ்டப்படுத்திக்கொண்டே இருந்தது. இப்படிப்பட்ட கஷ்டங்கள் மத்தியில் தன்னை அறியாமலே ஒரு போதகரிடம் இவைகளை குறித்து பகிர்ந்தார். அது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. தேவ இரக்கத்தையும், மன்னிப்பையும் அந்த போதகர் சொல்ல கேட்கும்போது அவர் துயரமெல்லாம் நீங்கிற்று.

தாவீது தன் மோசமான தந்திரத்தின் மூலமாக ஒரு பெண்ணின் கணவனை கொன்று தன்  பாவத்தை அதிகரித்தான் (2 சாமு. 11-12). அதை உணர்ந்தபோது சங்கீதம் 32 எழுதினான் என்று நம்பப்படுகிறது. இந்த சம்பவங்களினால் அவனுடைய பாவங்கள் அவன் மனசாட்சியை வருத்தியது (சங். 32:3,4). அவன் செய்த பாவத்தின் அசிங்கத்தையும் அதினால் அவன் அனுபவித்த ஆழ்ந்த போராட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் மூடப்பட்ட பாவத்தினால் நமக்கு விடுதலை இல்லை என்பதே. மெய்யான விடுதலை தேவனிடம் அறிக்கையிட்டு அவர்  மன்னிப்பை ஏற்றுக்கொள்வது (வச. 5)

நம் மற்றவர்களுக்கோ, அல்லது நமக்கோ பாவம் செய்வோமானால் தேவனுடைய இரக்கமே நம் விடுதலைக்கு ஆரம்பம். நம் பாவ உணர்ச்சி நமக்கு அவர் மூலமாய் நிரந்தரமல்ல. அதனால் நாமும் சங்கீதக்காரனோடு இப்பாடலை சேர்ந்து பாடுவோம் “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்” (வச. 1)  நம் பாவத்தை உணர்ந்தவுடன் அரவணைக்கும் கரங்களுடன் நம்மை எதிர்பார்க்கும் தேவனிடம் செல்வோம்.