Archives: நவம்பர் 2020

நம்மால் முடியுமா?

ரெஜியின் வீட்டு தோட்டத்தில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அது அவர்களுக்கு வெயில் காலத்தில் நிழலாகவும் தங்கள் வீட்டுக்கு அடைக்களமாகவும் இருந்ததால் குடும்பத்தார் அனைவருக்கும்  மிகவும் பிடித்த மரம் அது. ஒரு முறை அங்கு வந்த பெரும் புயலால் அங்கும் இங்கும் அசைந்து வேரோடே விழும் நிலையில் இருந்தது. புயலையும் பாராமல் ரெஜியும் தன் மகனும் மரத்தை காப்பாற்றும்படி விரைந்து சென்று, நாற்பது கிலோ எடை  கொண்ட ஒரு இரும்பை வைத்து அதை தாங்கி பிடிக்க செய்தார்கள் அது மட்டும் அல்லாமல் தங்கள் பெலன் கொண்டும் அதை விழாதபடி தாங்கி பிடித்தார்கள். ஆனால் அந்த புயல் அவர்களை விட மிகவும் பலமாய் இருந்தது.

தாவீதுக்கு இதே போன்ற  ஒரு புயல் வந்த போது  தேவனே அவருடைய பெலனாயிருந்தார்  (வ. 2). தாவீது இந்த சங்கீதத்தை தன் வாழ்க்கை உடைந்து போகும் நிலையில் எழுதினார் என்று நம்பப்படுகிறது. தன்னுடைய சொந்த மகனே சிங்காசனத்திற்காக அவரை  எதிர்த்து நின்ற பொது அந்த மரத்தை போல அவரும் மிகவும் பெலவீன நிலையில் காணப்பட்டார் (2 சாமுவேல் 15). தேவன் அமைதியாய் இருந்ததால் மரித்து விடுவோமோ என்ற பயம் அவருக்குள் இருந்தது (சங். 28:1). "என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும் (வச. 2)". தன் மகனோடு தாவீது ஒப்புரவாகவில்லை, ஆனாலும் தேவன் தாவீதின் பெலனாய் இருந்தார்.

நமக்கு மோசமான சம்பவங்கள் நடந்து விட கூடாதென்று நாம் எவ்வளவு பிரயாசப்பட்டாலும், ஒரு கட்டத்தில் நாம் தவறிவிடுகிறோம். நம் கன்மலையான கர்த்தரை நாம் எப்போதும் நோக்கி கூப்பிடலாம் என்று வசனம் நம்மை ஊக்குவிக்கிறது. நாம் பெலவீனர்களாய் இருக்கு பொது அவர் நம் மேய்ப்பராயிருந்து நம்மை உயர்த்துவார் (வச. 8-9).

கொடுக்கப்பட்ட காலணி

ஒரு இளம் பள்ளி மாணவன் தனது ஓட்ட பந்தயத்திற்கு தன்னை தயார் படுத்தி கொண்டிருக்கும் வேளையில். அவனது வீடு தீவிபத்தினால் நாசமானது. அதினிமித்தம் அவனால் அந்த பந்தயத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அவன் இந்த பந்தயத்தில் பங்கு பெறாததினால் அவனுடைய நாலு வருடபயிற்சி வீணாக போய்விட்டது. அதுமட்டுமல்ல இதில் பங்கு பெறவில்லையென்றால் அடுத்த கட்டமான மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்குபெற முடியாது.

மாவட்ட உடற்பயிற்சி கழகம் அந்த மாணவனின் நிலைமையை கேள்விப்பட்டு, ஆலோசனை செய்து அவனுக்கென்று தனியாக ஒரு தேர்ச்சி ஒட்டப்பந்தயத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் இந்த தேர்ச்சியானது சற்று கடினமான மைதானத்தில் ஓடவேண்டியதாய் இருந்தது. அதுமாத்திரமல்ல தன்னுடைய ஓட்டப்பந்தய காலணி தீயில் அழிந்துபோனதால் சாதாரண காலணிகளை கொண்டு ஓடவேண்டியதாய் இருந்தது. ஆச்சரியப்படும் விதமாய் பந்தயநாளிலே அவனோடுகூட ஓடும் நபர்கள் ஒரு புதிய  ஓட்டப்பந்தய காலணிகளை அவங்கென்று கொடுத்தார்கள்.

அந்த போட்டியாளர்களுக்கு காலணிகளை எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அவனுக்கு காலனி இல்லாததை அவர்களுக்கு ஆதாயமாக எடுத்திறுக்கலாம். ஆனால் அவர்களோ அன்போடு உதவிசெய்தார்கள். பவுல் நம்மையும் அதைபோல் தயவென்னும் நற்குணம் உடையவர்களாய் "அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்" (கலா 5:13) என்று வலியுறுத்துகிறார். நாம் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல் இருக்கும்படி பரிசுத்த ஆவியை சார்ந்திருப்போமானால் நம்மை சுற்றியிருப்பவர்களிடம் அன்பாய் இருக்கலாம்.

கடக்க முடியாத தடை எதுவுமில்லை

ஆசிரியராகிய நான் எனது மாணவர்களை கள பயணதிற்காக ஒரு தடை பயிற்சிக்காக ஏற்பாடு செய்திருந்தேன். அங்குள்ள பல விளையாட்டுகளில் ஒன்றாக சுவர் ஏறுவதும் இருந்தது. அணைத்து மாணவர்களும் அதிலே பங்குபெறும்படியாக உற்சாகத்துடன் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு  ஏறினார்கள். அந்த எட்டு அடி சுவரை ஏறி சென்ற ஒவ்வொரு மாணவர்களும் பின் வரும் மாணவர்களை பின்னிட்டு பார்க்காதபடிக்கு அந்த கயிற்றின்மேல் முழு நம்பிக்கை வைத்து ஏற ஊக்குவித்தார்கள். ஆனால் அதிலே ஒரு மாணவிக்கு மட்டும் அந்த கயிற்றின்மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் மேலும் நமிக்கையில்லாமல் இருந்தது. "என்னாலே இதை செய்யமுடியாது என்று" நம்பிக்கையில்லாமல் பயத்துடன் கூறினாள். ஆனால் மற்ற மாணவர்கள் அவளை உற்சாகப்படுத்தி ஊக்குவித்ததினால் அவள் அந்த கையிற்றின்மேல் நம்பிக்கை வைத்து வெற்றிகரமாய் ஏறினாள்.

நாம் கடக்க முடியாது என்று நாம் நினைக்கும் பிரச்சினைகள் நமக்கு முன் வரும் போது, அதின் கூடவே சந்தேகங்களை ஏற்படுத்தும் பயமும் பாதுகாப்பற்ற சிந்தனைகளும் வரும். ஆனால் இவைகளின் நடுவே நம்மை திடப்படுத்தும் தேவனுடைய மகிமையும், நன்மையையும், சத்தியமும் பலமான காப்புகவசமாக விசுவாசத்தில் அடங்கும். இந்த நம்பிக்கையின் உறுதி நம் பழைய ஏற்பாட்டின் முன்னோர்களுக்கு தைரியத்தை உண்டாக்கியது. இப்பேர்ப்பட்ட நம்பிக்கை நாம் சிறிய நுணுக்கமான காரியங்கள் மேல் கவனம் செலுத்தாமல் தேவனுடைய நித்திய திட்டத்தைப்பற்றி சிந்திக்க கற்பிக்கிறது (எபி 11:1-13, 39). வரும் காலங்களில் நாம் பிரச்சனைகளை சந்திக்கும் விதத்தை மாற்றிக்கொண்டு, நமக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட மேலான நித்திய கண்ணோட்டத்தில் காண்போம்

(வச. 13-16). அடிக்கடி நாம் இதைப் போன்ற சூழ்நிலைகளை தனியாக சந்திக்கும்போது முழு நம்பிக்கையோடு ஆர்வத்துடன் அவரை தேடுவோம்.

வாழ்வின் கடினமான பாதைகளையும், செங்குத்தான படிகளை கடக்கும்போது தேவன் நம்மை விடுவிப்பார் என்கிற நம்பிக்கை நமக்கு அற்றுப்போகலாம். ஆனால் அவரோ எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்கிற நிச்சயத்தோடு, விசுவாசமாகிய பலத்த கயிற்றை  பிடித்துக்கொள்வோம். கடக்க முடியாதென்று நினைத்த பிரெச்சனைகளை கடக்கலாம்.

நெருப்பின் மத்தியில்

ஸ்பெயினில் ஒருமுறை ஏற்பட்ட காட்டுத்தீயானது ஐம்பதாயிரம் ஏக்கர் சுற்றுப்புறத்திலுள்ள மரங்களை பட்சித்து போட்டது. எனினும் அவைகளின் நடுவே நின்றுகொண்டிருந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட சைப்ரஸ் மரமோ தனது பிரகாசிப்பிக்கும் பச்சை நிறத்துடன் அழியாமல் நின்றுகொண்டிருந்தது. தண்ணீரை தனக்குள் தக்கவைத்துக்கொள்ளும் திறன் அந்த மரத்திற்கு இருந்ததால் அப்பேற்பட்ட தீயையும் தாங்கமுடிந்தது.

இதைபோல் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனை அரசாண்ட காலத்தில், ராஜாவின் கோபத்தினால்  மூன்று நண்பர்கள் நெருப்புக்குள் போடப்பட்டும் உயிர் பிழைத்தார்கள். ராஜா உருவாக்கின சிலையை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வணங்க மறுத்து அவரை பார்த்து "நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்"(வச . 17) என்று கூறினார்கள். இதைக்  கேட்ட ராஜா மிகவும் கோபத்துடன் அந்த அக்கினிச்சூளையின் சூட்டை ஏழு மடங்கு அதிகப்படுத்தக் கட்டளையிட்டார். 

ராஜாவினுடைய கட்டளையின்படி அந்த மூன்று நண்பர்களையும் அக்கினியில் போட சென்ற காவலாளிகள் அந்தநெருப்பின் அனலில் கொல்லப்பட்டார்கள். அவ்வளவாக நெருப்பின் அனல் அதிகரிக்கப்பட்டது. ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவோ நெருப்புக்குள்ளாக கட்டவிழ்க்கப்பட்டு எந்த பாதிப்புமில்லாமல் நடந்துகொண்டிருப்பதை அங்குள்ள அனைவரும் பார்த்தார்கள். அவர்களோடு நாலாவதாக ஒருவர் இருப்பதையும் கண்டார்கள். அவர் தேவபுத்திரனின் சாயலை உடையவராய் இருப்பதுபோல் கண்டார்கள் (வச. 25). இன்று பல வேதவல்லுநர்கள் அது இயேசுவின் முன் அவதாரம் என்று நம்புகிறார்கள்.  

இதைபோல் அச்சுறுத்தல்களும்  சோதனைகளும் நமக்கு வரும்போது இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார். நம்மை அழுத்தமூட்டும் சூழ்நிலைகள் நமக்கு நேரிட்டால் நாம் பயப்படவேண்டாம். தேவன் நம்மை எப்போது, எப்படி காப்பர் என்று நமக்கு தெரியவில்லை என்றாலும், அவர் நம் கூடவே எப்போதும் இருக்கிறார் என்பது நிச்சயம். நாம் கடந்துவரும் எல்லா நெருப்புகளிலும் அவரில் விசுவாசமாய் இருக்க நமக்கு அவர் பெலன் தருவார்.

தேவன் பேசும்போது

வேதாகமத்தை மொழிபெயர்பவர் லில்லி . ஒரு முறை தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு தனது தேசத்திற்கு திரும்பியபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தினார்கள். தனது கைபேசியில் உள்ள புதிய ஏற்பாட்டின் ஆடியோ பதிவை கண்டதால் அதையும் பறிமுதல் செய்து அடுத்த இரண்டு மணிநேரமாக கேள்விமேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த ஆடியோவை சோதனை செய்யும்படியாக அதை கேட்கத் தொடங்கினார்கள், அப்பொழுது பதிவில் மத்தேயு 7:1-2 வாசிக்க கேட்டார்கள் " நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்." இந்த வார்த்தைகளை தனது சொந்த மொழியில் கேட்டபோது அங்குள்ள அதிகாரிகளில் ஒருவருக்கு வியர்க்கத் தொடங்கியது. இறுதியில் லில்லி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அந்த அதிகாரி தன் மனதில் என்ன நினைத்தார்  என்று நமக்கு தெரியாது. ஆனால் ஒன்றை நாம் அறிவோம், அவர் (தேவன்) வாயிலிருந்து புறப்படும் வசனம் அவர் விரும்பியதை நிச்சயமாக நிறைவேற்றுகிறது (ஏசா. 55:11). ஏசாயா இந்த நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை தேவ மக்களுக்கு அவர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கும்போது வாக்குத்தத்தமாக உரைத்தார். அவர்களுக்கு நம்பிக்கை தரும் படி அவர் வாயிலிருந்து புறப்படும் எந்த வார்த்தையும் முளைக்கச்செய்கிற  உறைந்த மழையைப்போல் - அவர் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருக்கிறது.

தேவன் மேல்  உள்ள நம்பிக்கையை மேம்படுத்தும்படி இந்த வசனங்களை வாசிக்கலாம். லில்லியுடைய சூழ்நிலையைப்போல் நாமும் கடந்து செய்வோமானால், கிரியை செய்கிற தேவன் நமக்கு உண்டென்று நிச்சயித்து அவர்மேல் நம்பிக்கை வைப்போம்.