ஸ்பெயினில் ஒருமுறை ஏற்பட்ட காட்டுத்தீயானது ஐம்பதாயிரம் ஏக்கர் சுற்றுப்புறத்திலுள்ள மரங்களை பட்சித்து போட்டது. எனினும் அவைகளின் நடுவே நின்றுகொண்டிருந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட சைப்ரஸ் மரமோ தனது பிரகாசிப்பிக்கும் பச்சை நிறத்துடன் அழியாமல் நின்றுகொண்டிருந்தது. தண்ணீரை தனக்குள் தக்கவைத்துக்கொள்ளும் திறன் அந்த மரத்திற்கு இருந்ததால் அப்பேற்பட்ட தீயையும் தாங்கமுடிந்தது.

இதைபோல் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனை அரசாண்ட காலத்தில், ராஜாவின் கோபத்தினால்  மூன்று நண்பர்கள் நெருப்புக்குள் போடப்பட்டும் உயிர் பிழைத்தார்கள். ராஜா உருவாக்கின சிலையை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வணங்க மறுத்து அவரை பார்த்து “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்”(வச . 17) என்று கூறினார்கள். இதைக்  கேட்ட ராஜா மிகவும் கோபத்துடன் அந்த அக்கினிச்சூளையின் சூட்டை ஏழு மடங்கு அதிகப்படுத்தக் கட்டளையிட்டார். 

ராஜாவினுடைய கட்டளையின்படி அந்த மூன்று நண்பர்களையும் அக்கினியில் போட சென்ற காவலாளிகள் அந்தநெருப்பின் அனலில் கொல்லப்பட்டார்கள். அவ்வளவாக நெருப்பின் அனல் அதிகரிக்கப்பட்டது. ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவோ நெருப்புக்குள்ளாக கட்டவிழ்க்கப்பட்டு எந்த பாதிப்புமில்லாமல் நடந்துகொண்டிருப்பதை அங்குள்ள அனைவரும் பார்த்தார்கள். அவர்களோடு நாலாவதாக ஒருவர் இருப்பதையும் கண்டார்கள். அவர் தேவபுத்திரனின் சாயலை உடையவராய் இருப்பதுபோல் கண்டார்கள் (வச. 25). இன்று பல வேதவல்லுநர்கள் அது இயேசுவின் முன் அவதாரம் என்று நம்புகிறார்கள்.  

இதைபோல் அச்சுறுத்தல்களும்  சோதனைகளும் நமக்கு வரும்போது இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார். நம்மை அழுத்தமூட்டும் சூழ்நிலைகள் நமக்கு நேரிட்டால் நாம் பயப்படவேண்டாம். தேவன் நம்மை எப்போது, எப்படி காப்பர் என்று நமக்கு தெரியவில்லை என்றாலும், அவர் நம் கூடவே எப்போதும் இருக்கிறார் என்பது நிச்சயம். நாம் கடந்துவரும் எல்லா நெருப்புகளிலும் அவரில் விசுவாசமாய் இருக்க நமக்கு அவர் பெலன் தருவார்.