ரெஜியின் வீட்டு தோட்டத்தில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அது அவர்களுக்கு வெயில் காலத்தில் நிழலாகவும் தங்கள் வீட்டுக்கு அடைக்களமாகவும் இருந்ததால் குடும்பத்தார் அனைவருக்கும்  மிகவும் பிடித்த மரம் அது. ஒரு முறை அங்கு வந்த பெரும் புயலால் அங்கும் இங்கும் அசைந்து வேரோடே விழும் நிலையில் இருந்தது. புயலையும் பாராமல் ரெஜியும் தன் மகனும் மரத்தை காப்பாற்றும்படி விரைந்து சென்று, நாற்பது கிலோ எடை  கொண்ட ஒரு இரும்பை வைத்து அதை தாங்கி பிடிக்க செய்தார்கள் அது மட்டும் அல்லாமல் தங்கள் பெலன் கொண்டும் அதை விழாதபடி தாங்கி பிடித்தார்கள். ஆனால் அந்த புயல் அவர்களை விட மிகவும் பலமாய் இருந்தது.

தாவீதுக்கு இதே போன்ற  ஒரு புயல் வந்த போது  தேவனே அவருடைய பெலனாயிருந்தார்  (வ. 2). தாவீது இந்த சங்கீதத்தை தன் வாழ்க்கை உடைந்து போகும் நிலையில் எழுதினார் என்று நம்பப்படுகிறது. தன்னுடைய சொந்த மகனே சிங்காசனத்திற்காக அவரை  எதிர்த்து நின்ற பொது அந்த மரத்தை போல அவரும் மிகவும் பெலவீன நிலையில் காணப்பட்டார் (2 சாமுவேல் 15). தேவன் அமைதியாய் இருந்ததால் மரித்து விடுவோமோ என்ற பயம் அவருக்குள் இருந்தது (சங். 28:1). “என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும் (வச. 2)”. தன் மகனோடு தாவீது ஒப்புரவாகவில்லை, ஆனாலும் தேவன் தாவீதின் பெலனாய் இருந்தார்.

நமக்கு மோசமான சம்பவங்கள் நடந்து விட கூடாதென்று நாம் எவ்வளவு பிரயாசப்பட்டாலும், ஒரு கட்டத்தில் நாம் தவறிவிடுகிறோம். நம் கன்மலையான கர்த்தரை நாம் எப்போதும் நோக்கி கூப்பிடலாம் என்று வசனம் நம்மை ஊக்குவிக்கிறது. நாம் பெலவீனர்களாய் இருக்கு பொது அவர் நம் மேய்ப்பராயிருந்து நம்மை உயர்த்துவார் (வச. 8-9).