எப்போதும் நன்றி சொல்லவேண்டும்
பதினேழாம் நூற்றாண்டில் மார்ட்டின் ரிங்கிட், ஜெர்மனியிலுள்ள சாக்சனி மாநிலத்தில் போதகராய் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக பணியாற்றி வந்தார். அப்போது ஜெர்மனி முழுவதும் போர் நடந்து வந்தது, அதோடு கூட கொள்ளை நோயும் பரவி கொண்டு வந்தது. அந்த வருடமே அவர் மனைவி அடக்க ஆராதனையை சேர்த்து கிட்டத்தட்ட நான்காயிரம் ஆராதனைகளை நடத்திவைத்தார். பஞ்சத்தின் மிகுதியால் அவர் குடும்பத்திற்கு ஆகாரமும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் அவர் விசுவாசத்தில் உறுதியாய் தரித்திருந்து தேவனுக்கு விடாமல் நன்றி கூறி பிரபல ஆங்கில பாடலான "Now thank we all our God" இயற்றினார்.
தேவனுடைய பிள்ளைகள் எப்போதும் துதி செலுத்தி சோர்வான நேரத்திலோ, எதிராளி அவர்களை கொடுக்கும் போது, எப்போதும் நன்றி செலுத்த வேண்டும் என்று ஏசாயா கூறியதற்கு ரின்கார்ட் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தேவ நாமத்தை துதித்து அவர் நாமத்தை பிரஸ்தாபம் பண்ணினார்கள் (வச. 4).
நம்மை சுற்றி நன்மைகள் நடக்கும் போது, நமக்கு உண்ண உணவு இருக்கும் போது தேவனுக்கு நன்றி சொல்வது கடினம் அல்ல. ஆனால் நம் நெருங்கிய உறவு நம்மை விட்டு பிரிந்திருக்கும் போதும் நமக்கு உண்ண உணவு இல்லாமல் இருக்கும் போதும் தேவனுக்கு நன்றி செலுத்த முடியுமா?
நாமும் போதகர் ரின்கார்டுடன் சேர்ந்து நம் இருதயத்தை ஒன்றிணைத்து தேவனுக்கு துதிகள் செலுத்தி அவரை கீர்த்தனம் பண்ணுவோம். பூமியெங்கும் அவர் நாமம் அறியப்படக்கடவது (வச. 5).
யாவருக்கும், அனைவருக்கும்
எள் சேல்வடார் தேசத்தில் இயேசுவை கணப்படுத்தும்படி அவருடைய சிலையை அந்த தேசத்தின் தலை நகரத்தின் நடுவே நிறுவப்பட்டுள்ளது. அது நகரத்தின் மத்தியில் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும் இடத்தில இருந்ததாலும் அங்குள்ள அனைவரும் பார்க்கும்படியாக உயரமாக இருக்கிறது. "உலக இரட்சகர்" என்று எழுதப்பட்டிருப்பதை அங்குள்ள அனைவரும் பார்க்கும்படி அவருடைய தெய்வத்துவம் வெளிப்பட்டதுகிறது.
அவரே உலக இரட்சகர் என்று 1 யோவான் 4:14 கூறியிருப்பதை அந்த வார்த்தைகள் உறுதிப்படுத்துகிறது. அவர் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கலாச்சாரமோ, வயதோ, படிப்போ, செல்வமோ தேவையில்லை. தம்மை பக்தியுடன் ஆர்வமாய் தேடுபவர்களை ஏற்றுக்கொள்கிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் அக்காலத்திலே பல தேசங்களிலே சுற்றி திரிந்து இயேசுவின் வாழ்க்கையையும், அவர் மரணத்தையும், உயிர்தெழுதலையும் பிரசங்கித்து வந்தார். இந்த நற்செய்தியை அவர் எல்லாருக்கும் பிரசங்கித்தார் மதத் தலைவர்களுக்கும், காவலாளிகளுக்கும், யூதர்களுக்கும், புறஜாதியருக்கும், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று எல்லாவித மக்களுக்கும் அறிவித்தார். ஒரு மனிதன் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று விசுவாசத்தால் அவரோடு புது ஐக்கியத்துக்குள் வரலாம் என்று பவுல் கூறுகிறார் (ரோம. 10:9). அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார். (வச.11, 13).
இயேசு தூரமாக வைக்கப்பட்டு வழிபடபடுபவர் அல்ல. விசுவாசத்தினால் இணைந்து அவரோடு உறவு கொள்ளும் படி அழைக்கிறார். அவர் நமக்கு தரும் இரட்சிப்பை உணர்ந்துகொண்டு பரிசுத்த உறவுக்குள்ளாக இன்றைக்கே செல்வோம்.
வான்கோழிகளிடம் கற்றுக்கொண்டது
கூட்டமாக சுற்றும் வான்கோழிகளை என்னவென்று அழைப்பார்கள் தெரியுமா? அவைகள் "ராஃப்ட்டர்" என்று அழைக்கப்படும்.
ஏன் வான்கோழிகளை குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா ? கடந்த வாரம் எனது விடுமுறையை ஒரு மலை கிராமத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டில் களித்தேன். அந்த வீட்டின் முற்றத்தில் அனுதினமும் உலாவி கொண்டிருந்த வான்கோழிகளை கண்டுகளித்து வந்தேன்.
இதற்கு முன்பதாக வான்கோழிகளை நான் கவனித்தது இல்லை. அவைகள் அந்த முற்றத்தில் கூட்டமாக உலவிக் கொண்டிருக்கும் போது, தங்கள் கால்களால் வேகமாய் மண்ணை தோண்டி அதை கொத்தி கொண்டிருந்தது. அந்த புற்களை பார்க்கும்போது அதில் உணவு ஏதும் இருந்தது போல் தெரியவில்லை. இருப்பினும் அவைகள் மிகவும் ஆர்வமாய் கொத்திக் கொண்டிருந்தன. அந்த கோழிகளை பார்க்கும்போதும் மிகவும் ஆரோக்கியமாகவும் புஷ்டியாகவும் காணப்பட்டது.
அந்த போஷாக்கு நிறைந்த கோழிகளை பார்க்கும்போது இயேசு சொன்ன வார்த்தை ஒன்று எனது நியாபகத்திற்கு வந்தது "ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? " (மத். 6:26). தேவன் அந்த பறவைகளைக் கொண்டு அவர் நமக்கு வைத்திருக்கும் அன்பை நினைவுபடுத்துகிறார். அந்த பறவைகளின் வாழ்க்கை தமக்கு முக்கியமென்றால் நம் வாழ்க்கை அவருக்கு எவ்வளவு முக்கியமாக இருக்கும்?. அதினால் நமது அனுதின தேவைகளை குறித்து நாம் கவலைப்படாமல் அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் முதலாவது தேடும்படி அழைக்கிறார் (வச. 33). இதன் மூலமாக அவர் நமக்காக வைத்திருக்கும் காரியங்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். அந்த சிறிய வான்கோழிகளை அவர் பார்த்துக் கொள்வார் என்றால், நம்மை நிச்சயமாக பார்த்துக்கொள்வார்.
உமக்குள்ளாக எனக்கு இடம்
முதிர்வயதுள்ள ராணுவ வீரர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் கடின இருதயமுள்ளவர். ஒரு நாள் அவர் நண்பர் அவர் மேல் அக்கறை கொண்டு அவருடைய ஆவிக்குரிய நம்பிக்கையை குறித்து விசாரித்தார். வெறுப்புடன் "அந்த தேவனுக்கு என்னை போல் ஒருவனுக்கு இடம் இருக்காது" என்று சலிப்புடன் கூறினார்.
ஆனால் தேவனோ கடின இருதயம் உள்ளவர்களுக்கும், குற்ற இருதயம் உள்ளவர்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும் இடம் ஒதுக்கி அவர் சமூகத்துக்குள் வந்து சேர்ந்து செழிக்கும் படி அழைக்கிறார். இயேசு தம் சீடர்களை தேர்ந்தெடுக்கும் போது இதை நாம் பார்க்கிறோம். எருசலேம் மக்களால் ஒதுக்கப்பட்ட கலிலேய மீனவர்களை தெரிந்தெடுத்தார், ஏழைகளிடம் இருந்து வரி வசூலித்த மத்தேயுவை தெரிந்தெடுத்தார். ரோம அரசாங்கத்தை எதிர்த்து அமைக்கப்பட்ட ஒரு இயக்கத்தில் இருந்த சீமோனை தெரிந்தெடுத்தார்.
சீமோனை நாம் தனிப்பட்ட முறையில் அறியவில்லை என்றாலும், ரோமருக்கு எதிரான இயக்கத்தில் இருந்தபடியால், இஸ்ரவேலராய் இருந்தும் ரோமர்களுடன் ஆலோசனை செய்து தம் சொந்த மக்களிடமே வரி வசூலித்து வந்த மத்தேயு போன்ற தேசத்துரோகிகளை அவர்கள் பகைத்தார்கள். . இருப்பினும் இயேசு சீமோனையும், மத்தேயுவையும் அழைத்து அவர்களை தம்மோடு சேர்த்துக் கொண்டார்.
நாம் யாரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கக்கூடாது. இயேசு அவர் வார்த்தைகளில் "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்" (லுக் 5:32). நம்மைப்போல் கடின இருதயமுள்ளவர்களுக்கு அவரிடம் அதிகமாகவே இடம் இருக்கிறது.
தாராளமாய் கொடுக்கும் இருதயம்
விக்கியூடைய இருசக்கர வாகனம் சரிபார்க்க முடியாத அளவிற்கு பழுதாகிவிட்டது. அவள் தன்னுடைய புது வாகனத்திற்கு சிறுக சிறுக சேமிக்க தொடங்கினாள். விக்கி வேலை பார்க்கும் உணவகத்திற்கு அடிக்கடி கிறிஸ் வருவது உண்டு. ஒரு நாள் அவள் வாகனம் வாங்கும்படி பணம் சேமித்து கொண்டிருந்ததை கேள்வி பட்டார் கிறிஸ். ஏதாவது அவளுக்கு உதவ வேண்டும் என்று அவர் உணர்ந்தார். அதே சமயத்தில் அவருடைய மகன் தனது வாகனத்தை விற்கும்படி முடிவெடுத்தான். உடனே கிறிஸ் அதை விலைக்கு வாங்கி, அதை பழுது பார்த்து, சாவியை விக்கி கையில் கொடுத்தார். அது அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. "யார் இப்படிப்பட்ட காரியங்கள் செய்யக்கூடும் " என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
தேவை உள்ளவர்களுக்கு இலவசமாய் கொடுக்க வேண்டும் என்று வசனம் நம்மை அழைக்கிறது. பவுல் தீமோத்தேயுக்கு சொன்னது போல் "நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்," (I தீமோத்தேயு 6:18). பேச்சுக்காக நன்மை செய்கிறவர்களாய் காணப்படுவதற்கு அல்ல, சந்தோஷத்துடன் கொடுக்கும் ஆவியுள்ளவர்களாய்இருக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். தாராள மனதுள்ளவர்களாய் நம் இருதயம் காணப்பட வேண்டும் - "கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,"
(வசா. 18)
திறந்த இருதயம் கொண்டு, தாராளமாய் கொடுப்பதினால் நமக்கு தேவையானது இல்லாமல் போய்விடுமோ என்கிற கவலை நமக்கு வேண்டாம். நாம் அன்போடு தாராள மனதுள்ளவர்களாய் இருப்பதினால், நித்திய ஜீவனை பற்றிக்கொள்கிறோம் என்று வேதம் கூறுகிறது. தேவனுக்குள் உண்மையாய் வாழ்வதின் அர்த்தம், நமக்கு இருக்கும் காரியத்தை சார்ந்து இருக்காமல் தேவை உள்ளவர்களுக்கு இலவசமாய் கொடுப்பதே.