எள் சேல்வடார் தேசத்தில் இயேசுவை கணப்படுத்தும்படி  அவருடைய சிலையை  அந்த தேசத்தின் தலை நகரத்தின் நடுவே நிறுவப்பட்டுள்ளது. அது நகரத்தின் மத்தியில் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும் இடத்தில இருந்ததாலும் அங்குள்ள அனைவரும் பார்க்கும்படியாக உயரமாக இருக்கிறது. “உலக இரட்சகர்” என்று எழுதப்பட்டிருப்பதை அங்குள்ள அனைவரும் பார்க்கும்படி அவருடைய தெய்வத்துவம் வெளிப்பட்டதுகிறது.  

அவரே உலக இரட்சகர் என்று 1 யோவான்  4:14 கூறியிருப்பதை அந்த வார்த்தைகள் உறுதிப்படுத்துகிறது. அவர் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கலாச்சாரமோ, வயதோ, படிப்போ, செல்வமோ தேவையில்லை. தம்மை பக்தியுடன் ஆர்வமாய் தேடுபவர்களை ஏற்றுக்கொள்கிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் அக்காலத்திலே பல தேசங்களிலே சுற்றி திரிந்து இயேசுவின் வாழ்க்கையையும், அவர் மரணத்தையும், உயிர்தெழுதலையும் பிரசங்கித்து வந்தார். இந்த நற்செய்தியை அவர் எல்லாருக்கும் பிரசங்கித்தார் மதத் தலைவர்களுக்கும், காவலாளிகளுக்கும், யூதர்களுக்கும், புறஜாதியருக்கும், ஆண்கள்  பெண்கள்  குழந்தைகள் என்று எல்லாவித மக்களுக்கும் அறிவித்தார். ஒரு மனிதன் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று விசுவாசத்தால் அவரோடு புது ஐக்கியத்துக்குள் வரலாம் என்று பவுல் கூறுகிறார் (ரோம. 10:9). அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார். (வச.11, 13).

இயேசு தூரமாக வைக்கப்பட்டு வழிபடபடுபவர் அல்ல. விசுவாசத்தினால் இணைந்து அவரோடு உறவு கொள்ளும் படி அழைக்கிறார். அவர் நமக்கு தரும் இரட்சிப்பை உணர்ந்துகொண்டு பரிசுத்த உறவுக்குள்ளாக இன்றைக்கே செல்வோம்.