விக்கியூடைய இருசக்கர  வாகனம் சரிபார்க்க முடியாத அளவிற்கு பழுதாகிவிட்டது. அவள் தன்னுடைய புது வாகனத்திற்கு சிறுக சிறுக சேமிக்க தொடங்கினாள். விக்கி வேலை பார்க்கும் உணவகத்திற்கு அடிக்கடி கிறிஸ் வருவது உண்டு. ஒரு நாள் அவள் வாகனம் வாங்கும்படி பணம் சேமித்து கொண்டிருந்ததை கேள்வி பட்டார் கிறிஸ். ஏதாவது அவளுக்கு உதவ வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.  அதே சமயத்தில் அவருடைய மகன் தனது வாகனத்தை விற்கும்படி முடிவெடுத்தான். உடனே கிறிஸ் அதை விலைக்கு வாங்கி, அதை பழுது பார்த்து, சாவியை விக்கி கையில் கொடுத்தார். அது அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. “யார் இப்படிப்பட்ட காரியங்கள் செய்யக்கூடும் ” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

தேவை உள்ளவர்களுக்கு இலவசமாய் கொடுக்க வேண்டும் என்று வசனம் நம்மை அழைக்கிறது. பவுல் தீமோத்தேயுக்கு சொன்னது போல் “நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,” (I தீமோத்தேயு 6:18). பேச்சுக்காக நன்மை செய்கிறவர்களாய் காணப்படுவதற்கு அல்ல, சந்தோஷத்துடன் கொடுக்கும் ஆவியுள்ளவர்களாய்இருக்க  நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். தாராள மனதுள்ளவர்களாய் நம் இருதயம் காணப்பட வேண்டும் – “கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,”

(வசா. 18)

திறந்த இருதயம் கொண்டு, தாராளமாய் கொடுப்பதினால் நமக்கு தேவையானது இல்லாமல் போய்விடுமோ என்கிற கவலை நமக்கு வேண்டாம். நாம் அன்போடு தாராள மனதுள்ளவர்களாய் இருப்பதினால், நித்திய ஜீவனை பற்றிக்கொள்கிறோம்  என்று வேதம் கூறுகிறது. தேவனுக்குள் உண்மையாய் வாழ்வதின் அர்த்தம், நமக்கு இருக்கும் காரியத்தை சார்ந்து இருக்காமல் தேவை உள்ளவர்களுக்கு இலவசமாய் கொடுப்பதே.