முதலாம் உலக போர் வெடித்தபோது,பிரிட்டிஷ் ஆட்சி நிபுணர் சர். எட்வர்ட் க்ரெய் கூறியது என்னவென்றால் “யுரோப்பிலே  உள்ள விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டன, இனி அவை பிரகாசிப்பதில்லை”. க்ரெய் சொன்னது சரிதான். கடைசி போர் முடிந்த பிறகு சுமார் இரண்டு கோடி உயிர்கள் பறிக்கப்பட்டது, அதில் ஒரு கோடி மக்கள் பொது ஜனங்கள். மீதி இருக்கும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் காயத்துடன் உயிர் பிழைத்தார்கள்.

நம் வாழ்க்கையிலும் பேரழிவுகள் ஏற்படலாம். நம் வீடு, வேலை ஸ்தலம், சபை, நம் வசிக்கும் பகுதிகள் இதைபோல் இருள் நிறைந்து மூடப்படலாம். இதற்காகவே தேவன் உங்களையும் என்னையும் அதன் நடுவில் வைத்து மாற்றம் உண்டு பண்ணும்படி அழைக்கிறார். அவர் தரும் ஞானமானது அந்த மாற்றத்தை ஏற்படுத்த மிகவும் அவசியமானது. இதைக்குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமும் உள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது”

“நீதி” என்கிற வார்த்தைக்கு அர்த்தம் “நேராக நடப்பது” அல்லது “உறவுகளை சரியாக கைக்கொள்ளுவது”. சமாதானம் பண்ணுகிறவர்கள் தனித்துவமானவர்கள். அவர்களுடைய அறுவடையான கனியும் சமாதானமாய் இருக்கிறது. சமாதானம் பண்ணுகிறவர்கள் உடைக்கப்பட்ட உறவுகளை மீட்டுக்  கொள்ளுகிறார்கள். இயேசு சொன்னது போல் ” சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத் 5:9)”. அவர் ஞானத்தில் சார்ந்திருக்கும் அவர் பிள்ளைகள், அவருடைய சமாதான கருவியாக தேவைப்படும் இடத்தில் வைக்கப்படுகிறார்கள்.