Archives: அக்டோபர் 2020

நட்சத்திரங்களுக்கு அப்பால் கேட்பது

கைப்பேசி, அருகலை (Wi-Fi), தடங்காட்டி (GPS), ஊடலை (Bluetooth) சாதனங்கள், மற்றும் நுண்ணலைஅடுப்பு (microwave) இல்லாத வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் உள்ள Green Bank என்னும்  ஊரில் இவைகள் எல்லாமே கிடையாது. அமெரிக்காவிலேயே மிக நிசப்தமான ஊர் என்று சொல்லப்படுகிறது. இங்கே தான் உலகத்திலேயே மிகப்பெரிய ‘திசைமாற்றக் கூடிய வானொலி தொலைநோக்கி’ கொண்ட Green Bank Observatory இருக்கிறது. இந்த தொலைநோக்கிக்கு அமைதி முக்கியம்; அப்பொழுதுதான்  விண் வெளியில் காணும் pulsars மற்றும்  galaxies  உமிழும் இயற்கையான வானொலி அலைகளை உணர முடியும்.. அந்த தொலைநோக்கியினுடைய பரப்பு கால்பந்து மைதானத்தை விட அதிகம்.. அது மின்னணுக்கள் அதன் துல்லிய உணர்திறனில் குறுக்கிடாத ஒரு இடத்தில், 13,000 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட ’தேசிய வானொலி அமைதி மண்டலத்தில்’ இருக்கிறது.  

இவ்விதமான அமைதியில் தான் விஞ்ஞானிகள் கோட்களின் இசையை கேட்க முடியும்.  இந்த பிரபஞ்சத்தை உண்டாக்கின சிருஷ்டிகரின் சத்தத்தை கேட்க வேண்டும் என்றால் நாமும் நம்மை இவ்விதமாக அமைதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.. வழிதவறிய, எளிதாக கவனம் சிதற கூடிய  மக்களுக்கு இறைவன் ஏசாயா மூலமாக இவ்விதம் பேசினார்: “உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்... உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.( ஏசா. 55: 3) அவரை நாடி அவருடைய மன்னிப்பை தேடுகிறவர்களிடத்தில் நிச்சயமாக அன்பு கூறுவார்.

வேத வாசிப்பின் மூலமாகவும் ஜெபத்தின் மூலமாகவும் நாம் கருத்தாக இறைவனை  நோக்கலாம். அவர் தூரத்தில் அல்ல. நாம் அவரை இம்மையிலும் மறுமையிலும் முதன்மையாக வைத்து, அன்றாடம் அவருக்கு நேரம் ஒதுக்கவேண்டுமென்று  அவர் விரும்புகிறார்.

ஒரு பாடகரின் இதயம்

சனிக்கிழமை காலை 6:33 மணிக்கு அந்த துதி பாடலின் சத்தம் மேல் மாடியில் இருந்து தவழ்ந்து வந்தது. வேறு யாரும் அந்த வேளையில் முழித்து இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய இளைய மகளுடைய கீச்சென்ற குரல் என்னுடைய எண்ணம் தவறு என்று காட்டியது. தான் நன்றாக முழிக்கும் முன்னரே பாட்டு பாட ஆரம்பித்து விட்டாள். 

என்னுடைய இளைய மகள் ஒரு பாடகி. அவளாலே பாடாமல் இருக்கவே முடியாது. முழிக்கும்போது பாடுவாள். பள்ளி செல்லும்போது பாடுவாள். படுக்கப் போகும்போது பாடுவாள். தன்னுடைய இதயத்தில் ஒரு பாடலோடு பிறந்தவள் அவள். அவளுடைய பாடல்கள் அநேகமாக எல்லாமே இயேசுவைப் பற்றியதாய் இருக்கும். தேவனை அவள் எந்நேரமும், எங்குமே துடித்துக் கொண்டிருப்பாள்.

என் மகளுடைய எளிமை, பக்தி, ஆர்வமான குரல் எனக்கு மிகவும் பிரியம். அவள் தானாக  பாடும் மகிழ்ச்சி பாடல்கள், வேதத்தில் தேவனைத் துதிக்க நம்மை ஏவும் வேதவாக்யங்களை பிரதிபலிக்கும். “கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்” என்று சங்கீதம் 95ல் வாசிக்கிறோம். இன்னும் பார்க்கும்போது இந்த துதி அவர்  யார், நாம் யாருடையவர்கள்  என்ற உணர்விலிருந்து உதிப்பதாக அறிகிறோம்: “கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார் (வச. 3), அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே (வச. 7).

என் மகளுக்கு இந்த உண்மைகளே  காலையில்  தோன்றும் முதல்  சிந்தனைகள்.  தேவகிருபையால், இந்த குட்டி ஆராதனைவீராங்கனை,  தேவனை  துதிப்பதில் காணும் மகிழ்ச்சியை நமக்கு ஆழமாக  நினைப்பூட்டுகிறாள்.

மெதுவாக ஆனால் உறுதியாக

என் நண்பன் ஒருவனை எதேர்ச்சியாக சந்தித்தபோது, அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை பற்றி அவன் கூறியது சற்றும் நம்பும்படியாகவே இல்லை. ஆனால்  இந்த உரையாடல் நடந்து ஒரு சில மாதங்களுக்குள் அந்த நண்பனின் இசைக் குழு மிக பிரசித்தம் பெற்றது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அவனுடைய புகழ் பிரம்மாண்டம் அடைந்தது.

நாமும் கூட  பெரிய, வியத்தகு, குறுகிய நேரத்தில் பிரம்மாண்டமாக இருக்கும்  முக்கியத்துவத்தையும்  வெற்றியையும் குறி வைக்கலாம். ஆனால், கடுகையும் புளித்த மாவையும்  பற்றிய உவமைகள், ராஜ்ஜியத்தின்வழியை (பூமியில் தேவனுடைய ஆளுகை) ஒரு சிறிய மறைந்திருக்கும் முக்கியமற்று மெதுவாய் படிப்படியாய் வளரும் பொருட்களுடன் ஒப்பிடுகிறது.

ராஜ்ஜியம் அதன் அரசனை போன்றது. கிறிஸ்துவின் பணி  பூமிக்குள் புதைக்கப்படும்  ஒரு விதை போன்று அவ்ருடைய வாழ்க்கையில் உச்சநிலையை அடைந்தது;  ஒளிந்திருக்கும் புள்ளிப்புத் தன்மையை போன்று. ஆனாலும் அவர் எழுந்தார். புழுதியை உடைத்துக்கொண்டு எழும்பும் ஒரு  மரத்தை போல, சூடு அதிகமாகும்போது  மாவு எழுப்புவதை போல. அவர் எழுந்தார்.

நாமும் அவரைப் போல தொடர்ந்து ஊடுருவும் வாழ்வை  வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். முடிவெடுக்கும் காரியங்களை நம் கைகளிலேயே எடுத்துக் கொள்ளவும், அதிகாரத்தை பிடித்துக்கொள்ளவும், உலகத்தில்  நாம் செய்யும் செயல்களின் பலன்களை நியாயப்படுத்துவதற்கும் எலும்பும் சோதனைகளை எதிர்ப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். அதன் பலன் “ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாவதும்” (மத்தேயு 13:32), புளித்த மாவு ரொட்டி ஆகி அனேகரை போஷிப்பதும், கிறிஸ்துவின் வேலை; நமதல்ல.

உபதேசிப்பதா அல்லது உழுவதா?

குடும்ப புராணத்தின் படி, இரண்டு சகோதரர்கள் - ஒருவன் பெயர் பில்லி அடுத்தவன் மெல்வின் - சிறுவர்களாக இருந்தபோது ஒரு சமயம் தங்கள் குடும்பத்தை சார்ந்த பால்பண்ணையில் நின்று கொண்டிருந்தபோது  ஆகாயத்தில் ஒரு விமானம்‌ சில எழுத்துக்களை வரைவதை பார்த்தார்கள்;  GP  என்று அந்த   எழுத்துக்களை  படித்தனர்.

அந்த எழுத்துக்கள் தங்களுக்கு சொந்த கருத்து ஒன்றை தெரிவிக்கிறது என்று சகோதரர்கள் தீர்மானம் செய்துகொண்டார்கள். ஒருவன் தனக்கு தென்பட்டது GO PREACH – அதாவது “போய் உபதேசம் செய்” என்று புரிந்துக்கொண்டான்.  மற்றொருவன் அந்த எழுத்துக்கள் GO PLOW அதாவது “போய் உழவுத் தொழில் செய்” என்று புரிந்துக்கொண்டான்.  பில்லி கிரஹாம் தன்‌ வாழ்க்கையை உபதேசத்திற்காக அர்ப்பணித்து மிகப்பெரிய சுவிசேஷகராக மாறினார். அவருடைய சகோதரன் மெல்வின், தன்னுடைய குடும்ப பண்ணையை வெகு  ஆண்டுகளாக உண்மையாக நடத்தினார்.

ஆகாயத்தில் எழுதின எழுத்துக்கள் இருக்கட்டும், பில்லியை ஆண்டவர் உபதேசத்திற்கும் மெல்வினை விவசாயத்திற்கும்  அழைத்திருந்தால், அவர்கள் இருவருமே தேவனை தங்கள் தொழில்களின் மூலமாக கனப்படுத்தினார்கள். பில்லி நெடுநாள் பிரசத்தி பெற்ற பிரசங்கியாக இருந்தாலும், அதனால் அவருடைய  சகோதரன் உழுவதற்கு பெற்ற அழைப்பை கீழ்படிந்தது அதைவிட முக்கியத்துவம் குறைந்ததல்ல.

தேவன் சிலரை நாம்கூறுவதுபோல  முழு நேர ஊழியத்திற்கு அழைப்பதினால்(எபே. 4:11-12) மற்ற வேலைகளிலும் பாத்திரங்களிலும் ஈடுபட்டிருக்கிறவர்கள்குறைந்த  முக்கியத்துவம் குறைந்தவேலை செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. இரண்டில் எப்படி இருந்தாலும் “ஒவ்வொரு அவயவமும் தன்தன் கிரியையை செய்யவேண்டும்” என்று  பவுல் கூறுகிறார் (எபேசியர் 4:16). அப்படி என்றால் நாம் ஒவ்வொருவரும் நமக்கு கொடுக்கப்பட்ட ஈவுகளால் இயேசுவை மேன்மைப்படுத்த வேண்டும்.  அப்படி செய்கிறவர்களாயிருந்தால்  நாம் உபதேசிக்கிறோமோ  அல்லது உழுகிறோமோ, எப்படி இருந்தாலும் இயேசுவுக்காக ஒருவித்தியாசத்தைஉண்டாக்கலாம்.

ஒன்றாக செழித்து வளருதல்

எதிர்அணியின்நபர்ஒருவர் பந்தைகாற்றில்அடித்தபொழுது என் கணவர் ஆலன் அந்த மைதானத்திற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்த பெரிய கோபுர விளக்கின் கீழ் நின்று கொண்டிருந்தார. அந்த பந்தின் மீதே தன்  கண்களை வைத்துக்கொண்டு, வேகமாக அந்த மைதானத்தின் மிகுந்த இருட்டான பகுதியை நோக்கி ஓடி அங்கிருந்த சங்கிலி வேலியில் மோதிக்கொண்டார்.

அன்று இரவு அவருக்கு ஒத்தடம் கொடுக்கும்போது “எப்படி இருக்கிறீர்கள்” என்று கேட்டேன். “என்னுடைய அணியில் யாராவது என்னை அந்த வேலியைப்பற்றி எச்சரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றார் அவர்.

அணிகள் சிறந்த முறையில்  இயங்க வேண்டுமென்றால் அவைகள் ஒன்றாக செயல்பட வேண்டும். அணியில் யாராவது ஒருவர் சத்தமிட்டு எச்சரித்திருந்தால் ஆலன் காயப்படுவதை தவிர்த்திருக்கலாம். 

திருச்சபையின் உறுப்பினர்களும் ஒன்றாக செயல்பட்டு ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ளும் வண்ணமாகவே  வடிவமைக்கக்கப்பட்டுள்ளது என்று வேதாகமம் நம்மை நினைவூட்டுகிறது.

இதைப்பற்றி பவுல் கூறுவது தேவன் நாம் ஒருவருக்கொருவர் எப்படி துணையாக நிற்க்கிறோம் என்று கவனிக்கிறார் ஏனென்றால் ஒருவர் செய்யும் காரியம் விசுவாசிகளின் சமுகம் முழுவதுமையே பாதிக்கக்கூடும் (கொலோ. 3:13-14). நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சேவை செய்ய சந்தர்ப்பங்களை முழு அர்பணிப்போடும் சமாதானத்தோடும்   பயன்படுத்தும்போது சபை செழித்து வளரும்.

பவுல் தம்முடைய வாசகர்களுக்கு “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொள்ளுங்கள்” (கொலோசெயர் 3:16) என்கிறார். இவ்விதமாக ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி அன்பும் உண்மையுமான உறவுகளை வளர்க்கலாம். ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து அவரைத் துதித்து ஒன்றாக செழித்து வளரலாம்.