நீங்கள் வலுசர்ப்பத்துடன் சண்டை போட்டதுண்டா?  இல்லை என்று சொன்னால் நூலாசிரியர் யூஜீன் பீட்டர்சன் உங்களுடன் ஒற்றுக்கொள்ள  மாட்டார். அவருடைய “ஒரே திசையில் நீடிய கீழ்ப்படிதல் ” என்ற புத்தகத்தில் அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார்  “இந்த வலுசர்ப்பங்கள் நம்முடைய பயங்களே, நமக்கு வேதனை தரக்கூடியவற்றின் பயங்கரமான கட்டமைப்புக்களே.  ஒரு சாதாரண மனிதனை எதிர்கொள்ளும் அசாதரணமான வலுசர்ப்பம் நிச்சயமாக அவனை மேற்கொள்ளும்”. அனால் பீட்டர்சன்-ன்  கருது? வாழ்க்கை இவ்விதமான வலுசர்ப்பங்களால் நிறைந்திருக்கிறது: சுகவீனம், வேலையின்மை, உடைந்த திருமணம், தூரம் போன பிள்ளை.  இந்த வலுசர்ப்பங்கள் நம்மால் தனித்து  சண்டை போட முடியாத அளவு பூதாகரமாக  இருக்கும் வாழ்க்கையின்  ஆபத்துகளும் ,பெலவீனங்களும்.

ஆனால் இந்த போர்க்களங்களில் நமக்கு ஒரு வீரர் இருக்கிறார். அவர் ஏதோ ஒரு கதை வீரன் அல்ல. கட்டுக்கதையில் வரும் வீரன் அல்ல – நம் சார்பில் சண்டையிட்டு நம்மை அழிக்க நினைத்த வலுசர்ப்பங்களை வென்ற நிகரற்ற வீரர். நம்முடைய சொந்த தோல்விகளின் வலுசர்ப்பமோ அல்லது நமது அழிவை விரும்பும் ஆவிக்குரிய எதிரியா, அவை எல்லாவற்றையும் விட நம்ம வீரர் பெரியவர், அதனால் பவுல் இயேசுவை பற்றி இவ்வாறு   எழுதுகிறார்  “துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்” (கொலோசெயர் 2:15). இந்த உடைந்த உலகத்தின்  எதிர்ப்புகள் அவருக்கு நிகர் அல்ல!

நம்முடைய வாழ்க்கையின் வலுசர்ப்பங்கள் மிகவும் பெரியவை  என்று நாம் உணரும்போது நாம் கிறிஸ்துவின் இளைப்பாற ஆரம்பிக்கலாம் . நாம் நம்பிக்கையுடன்     “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”(1 கொரி. 15:57) என்று கூறலாம்.