இரண்டு வயது சிறுவன் கென்னத் காணாமல் போய்விட்டான். அனால் அவனது தாயார் அவசர உதவி எண்ணை அழைத்த மூன்று நிமிடங்களில் ஒரு அவசர உதவியாளர்  அவனை இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த ஒரு கண்காட்சியில் கண்டுபிடித்தார்.. பின்னர் அங்கே அவனுடைய தாத்தாவோடு போகலாம் என்று அவனுடைய அம்மா கூறி இருந்தார். ஆனால் அவன் தன்னுடைய விளையாட்டு வாகனத்திலே, தானே அங்கு போய் தனக்கு பிரியமான ஒரு இராட்டினத்திற்க்கு அருகே நிறுத்தியிருந்தான். அந்த சிறுவன் வீடு வந்தவுடன் அவனுடைய அப்பா ஞானமாக அந்த சின்ன வாகனத்தின் மின்கலத்தை எடுத்து அப்புறப்படுத்தி விட்டார்.

கென்னத் புத்திசாலித்தனமாக அவன் விரும்பிய இடத்துக்குப் போயிருந்தாலும், அனால் இரண்டு வயது சிறுவர்களுக்கு இல்லாத ஒரு தன்மை : ஞானம்.   சில நேரங்களில் பெரியவர்களாகிய நமக்குக்  கூட அது காணப்படுவதில்லை. தன் தகப்பன் தாவீதினால் ராஜாவாக நியமிக்கப்பட்ட (1 இரா. 2) சாலமோன் கூட தான் ஒரு சிறு பிள்ளை போல என்று உணர்ந்தார் . தேவன்  அவருடைய  கனவிலே வந்து “நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்” (3:5) என்று  கூறினார். அவர் அதற்கு  “நான் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்” (3:7-9) என்றார். தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார் (4:29).

நமக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கும்? “கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்றான் சாலமோன் கூறியிருக்கிறார் (நீதிமொழிகள் 9:10). ஆகவே நாமும் அவரைப் பற்றி நமக்கு கற்றுக்கொடுக்க தேவனை வேண்டிக்கொண்டு நம்முடைய ஞானத்துக்கு மேலானதை  அவரிடத்தில் இருந்து பெற்றுக் கொள்வோம்.