கடினமான வார்த்தைகள் நம்மை புண்படுத்தும். விருதுகள் பெற்ற நூலாசிரியாகிய என்னுடைய நண்பர் ஒருவர் விமர்சனங்களுக்கு எப்படி பதில் அளிப்பது  என்று போராடிக் கொண்டிருந்தார் . அவருடைய புதிய நூல் ஐந்து நட்சத்திர மதிப்பெண்கள் பெற்று அவருக்கு புதியதொரு விருது பெற்றிருந்தது. ஆனால் மிகவும்  மதிக்கப்படும் பத்திரிகை ஒன்று அந்த நூல் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது என்று புகழ்ந்தாலும் அதை  கடினமாக விமர்சித்தது. அவர் மற்ற நண்பர்களிடம் “எப்படி இதற்கு பதில் அளிப்பது?” என்று கேட்டார்.

ஒருத்தர் கூறினார்  “விட்டுவிடு”. நானும் என்னுடைய பத்திரிக்கை  எழுதும் அனுபவங்களிலிருந்து இப்படியான குறை கூறும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து எழுத வேண்டும்மென்று சில அறிவுரைகளைச் கூறினேன்.

இறுதியில், மிக சிறந்த அறிவுரைகளை கொடுக்க கூடிய வேதாகமம், கடுமையான  விமர்சனங்களுக்கு எப்படி பதில் அளிப்பது என்பதை பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்க முனைந்தேன். யாக்கோபின் புத்தகம்  இவ்வாறு அறிவுரைக்கிறது ,” யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்” (1:19). அப்போஸ்தலர் பவுல் “ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்” (ரோம. 12:16) என்று ஆலோசனை தருகிறார் 

நீதிமொழிகள் புத்தகத்தில் ஒரு முழு அதிகாரமே சச்சரவுகளுக்கு எப்படி பதில் அளிப்பதென்று கூடுதல் ஞானத்தை வழங்குகிறது : “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்”(15:1). “நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். (15:18). “கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்” (15:32). இவ்வித ஞானத்தை மனதில் கொண்டு,  என் நண்பனைபோல, தேவனுடைய ஒத்தாசையால் நம் நாவுகளை அடக்குவோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஞானம் அறிவுறுத்துவது  “கர்த்தருக்குப் பயப்படு” ஏனென்றால் “மேன்மைக்கு முன்னானது தாழ்மை” (15:33).