“அதோ அந்த மனிதர்! அதோ அந்த மனிதர்!” பானு, உணவகத்தில் வெலை செய்யும் சக ஊழியர்களிடம் கூச்சலிட்டார். வெவ்வேறு சூழ்நிலைகளில் அவளை சந்தித்த மெல்வின் என்பவரைப் பற்றி குறிப்பிட்டாள். அவர் தன்னுடைய தேவாலயத்தின் புல்வெளியை பராமரித்துக்கொண்டிருக்கும்போது, விபச்சாரி போல் காணப்பட்ட ஒரு பெண்ணிடம் உரையாடலை துடங்கும்படியாக பரிசுத்த ஆவியானவர் ஏவினார். அவர் அந்தப் பெண்ணை ஆலயத்திற்கு வர அழைத்தப்போது அவளிடமிருந்து வந்த பதில் “நான் என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரியுமா ?. நான் அங்கு வருவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.” என்பதே.  மேல்வின் இயேசுவின் அன்பைப் பற்றியும் அவளுடைய வாழ்க்கையை தேவன் மாற்ற வல்லமையுள்ளவர் என்றும் கூறியபோது அவள் கண்களில் இருந்து கண்ணீர் முகத்தில் வடிந்தது. இப்போது, அநேக வாரங்களுக்குப் பிறகு, பானு ஒரு புதிய சூழலில், இயேசு வாழ்க்கையையே மாற்ற வல்லவர் என்ற உயிருள்ள ஆதாரமாக வேலைப்பார்த்துக்கொணடிருக்கிறாள்.

விசுவாசிகளை ஜெபம் செய்ய ஊக்குவிக்கும்படி பரிசுத்த பவுல் இருமடங்கு வேண்டுகோள் வடுத்திருக்கிறார்

“கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக் குறித்துப் பேச வேண்டியபிரகாரமாய்ப் பேசி, இதை வெளிப்படுத்துவதற்கு,  திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்”. (கொலோசெயர் 4:3,4).

இயேசுவுக்காக தைரியமாகவும், தெளிவாகவும் பேசுவதற்கான வாய்ப்புகளுக்காக நீங்கள் ஜெபித்திருக்கிறீர்களா ? என்ன ஒரு பொருத்தமான பிரார்த்தனை. ! இப்படிப்பட்ட ஜெபம் மெல்வினைப் போன்ற அவரது சீஷர்களை எதிர்பாராத இடங்களில் மற்றும் எதிர்பாராத நபர்களிடம் பேச வழிவகுக்கும். இயேசுவுக்காக பேசுவது சங்கடமாக இருக்கும் ஆனால் அதன் வெகுமதிகள் – மாற்றப்பட்ட வாழ்க்கை – நம் வாழ்க்கை நலக்குறைவுகளை ஈடுசெய்ய ஒரு வழியாகிறது.