மூன்று மாத காலத்தில் என் பெற்றோர்கள் இறந்த பிறகு, அவர்கள் என்னை மறந்து விடுவார்கள் என்ற உணர்வு எனக்குள் இருந்தது. நிச்சயமாக அவர்கள் இந்த பூமியில் இல்லை என்பது எனக்கு நிச்சயமற்ற உணர்வைத் தந்தது. இளமையான, திருமணமாகாத வயதுவந்த நான் அவர்களில்லாமல் எப்படி வாழ்வது என்று யோசித்தேன். உண்மையில் நான் ஒருவனாய் தனியாக உணர்ந்த போது தேவனைத் தேடினேன்.

ஒரு காலை வேளையில் நான் என்னுடைய பகுத்தறிவற்ற பயத்தை குறித்து தேவனிடம் (அதை அவர் அறிந்திருந்த போதும்) கூறினேன். அன்றைய தினத்தின் தியானத்திற்கு கொடுக்கப்பட்ட வேதபகுதி ஏசாயா 49. “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ ?. அவள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை. (வச. 15). ஏசாயா மூலமாக தேவன் தம்முடைய ஜனங்களை மறந்துவிடவில்லை என்றும் தன்னுடைய குமாரன் இயேசுவை அனுப்பி அவர்களை தம்மிடத்தில் மீட்டுக்கொள்வார் என்று உறுதியளித்தார். அந்த வார்த்தைகள் என்னுடைய இருதயத்திலும் கிரியை செய்தது. ஒரு தாயோ அல்லது தகப்பனோ தன்னுடைய பிள்ளையை மறப்பது என்பது அரிதானதாயிருந்தாலும் அது நடக்கக்கூடியதே. ஆனால் தேவன்?. மறப்பதே இல்லை. “என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” என்கிறார்.

தேவன் பதிலளித்திருந்தால் எனக்கு இன்னும் பயத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவர் என்னை நினைத்து எனக்கு அளித்த சமாதானமே எனக்கு தேவைப்பட்டது. பெற்றோர்களைப் பார்க்கிலும் தேவன் மிக அருகில் இருக்கிறார் என்றும், நம்முடைய பகுத்தறிவற்ற பயத்தில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் நமக்கு உதவி செய்ய அறிந்திருக்கிறார் என்பது என் கண்டுபிடிப்பின் தொடக்கமாகும்.