சமீபத்திய நடவடிக்கைக்குப்பிறகு, மாதுரியின் ஏழு வயது மகன் ரோஹித், தனது புதிய பள்ளியில் கூடுதல் வகுப்புகளில் கலந்துக்கொள்ளத் தயாரானப்போது வம்பு செய்தார்.

மாற்றம் கடினமானது என்று அவள் புரிந்துக்கொண்டதை சொல்லி அவனை மாதுரி ஊக்குவித்தாள். ஆனால் ஒரு காலையில் ரோஹித்தின் அவனை மீறிய நடத்தை எரிச்சலூட்டுவதாக இருந்தது. மாதுரி இரக்கத்துடன் “எது உன்னை தொந்தரவு செய்கிறது மகனே? என்று கேட்டாள்.

ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு “எனக்கு தெரியவில்லை அம்மா. எனக்கு பல உணர்வுகள் உள்ளன” என்று ரோஹித் கூறினான்.

அவனை ஆறுதல் படுத்தும்போது மாதுரியின் இருதயம் கனத்தது. அவனுக்கு உதவ வேண்டி இந்த காரியம் அவருக்கும் கடினமானதாக இருக்கிறது என்பதை பகிர்ந்துக்கொண்டார். அவர்களுடைய விரக்தியை புரிந்துக்கொள்ளவோ, குரல் கொடுக்கவோ முடியாத நேரத்திலும், எல்லாவற்றிலும் தேவன் அருகிலிருப்பார் என்று உறுதியளித்தார். “பள்ளி ஆரம்பிக்கும் முன் உன் தோழர்களைப் சந்திப்போம்” என்று கூறினாள். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு அதிகமான உணர்வுகள் இருந்தாலும் தேவன் அதைப் புரிந்துக்கொள்ளுகிறார் என்ற நன்றியறிதலோடு அவர்கள் திட்டமிட்டார்கள்.

சங்கீதம் 147ஐ எழுதினவர் தன்னுடைய விசுவாச பயணம் முழுவதும் பெரும் உணர்ச்சிகளை அனுபவித்தார். எல்லாம் அறிந்தவர், எல்லோரையும் பராமரிப்பவர், உடல் மற்றும் உணர்ச்சிகளால் ஏற்பட்ட காயத்ததை ஆற்றுகிறவர் – இவரைப் துதிப்பதால் வரும் நன்மைகளை அறிந்துக்கொண்டார். (வச. 1-6). அவர்களுக்கு தேவன் வழங்கும் வழிகளுக்காகவும், தமக்கு பயந்து தமது கிருபைக்கு காத்திருக்கிறவர்கள் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார் (வ 11) என்றும் அவரைத் துதித்தார்

எப்போதும் மாறும் நம்முடைய உணர்ச்சிகளை புரிந்துக்கொள்ள நாம் போராடும்போது, நாம் தனிமையாக அல்லது ஊக்கமில்லாமல் இருப்பதாக உணர வேண்டியதில்லை. என்றும் மாறாத தேவனின் நிபந்தனையற்ற அன்பிலும், வரம்பற்ற புரிதலிலும் நாம் சார்ந்துக்கொள்ளலாம்.