Archives: ஆகஸ்ட் 2020

நேசிக்கப்படுகின்றாய், அழகானவன், திறமைசாலி

டீன் ஏஜ் மோகன் தன்னம்பிக்கை உள்ளவனாகக் காணப்பட்டான். ஆனால் இந்த தன்னம்பிக்கை, வெறும் முகமூடியாகத்தான் காணப்பட்டது. உண்மையில், குழப்பமான ஒரு வீடு, அவனை பயமுள்ளவனாகவும், தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கத்தையும், அவனுடைய  குடும்பத்தின்  பிரச்சனைகளுக்கு அவன்தான் காரணம் என்ற தவறான உணர்வையும் அவனுக்குள் ஏற்படுத்தி இருந்தது. அவனுக்கு  நினைவு தெரிந்த மட்டும்,   “ஒவ்வொரு நாள் காலையும் நான் குளியல் அறைக்குள் சென்று, கண்ணாடியைப் பார்த்தவனாக, ‘நீ ஒரு முட்டாள், நீ பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கின்றாய், அதற்கெல்லாம் காரணம் நீ தான்’ என்பேன்”.

இவ்வாறு, மோகன் தன்னைத்தானே வெறுக்கும் காரியம், அவனுடைய இருபத்திஒன்றாம் வயது வரை நடைபெற்றது. அப்பொழுது அவனுக்கு இயேசு கிறிஸ்துவோடுள்ள உறவைக்குறித்து ஒரு தெய்வீக வெளிப்பாடு கிடைத்தது. “தேவன் என்னை நிபந்தனையற்ற அன்போடு நேசிக்கின்றார், இதனை எந்த வகையிலும் மாற்றமுடியாது என்பதை உணர்ந்தேன்”, மேலும் “நான் தேவனை ஒரு போதும் துக்கப்படுத்தக் கூடாது, அவர் என்னை ஒரு போதும் தள்ள மாட்டார்” என்றும் நினைவுகூர்ந்தான். இப்பொழுது மோகன் கண்ணாடியில் பார்த்து, தனக்குள்ளாக வேறு வகையாகப் பேசுகின்றான், “நீ நேசிக்கப் படுகின்றாய், நீ விசேஷமானவன், நீ திறமைசாலி” என்றான், “இது உன்னுடைய தவறல்ல” என்றும் கூறிக்கொள்வான்.

இயேசுவை விசுவாசிப்பவர்களிடம் தேவனுடைய ஆவியானவர்  என்ன செய்கின்றார் என்பதை மோகனின் மாற்றம் விளக்குகிறது. அநுபவித்தான். அவர் நம்மை மிகவும் நேசித்து, பயத்திலிருந்து விடுவிக்கின்றார் (ரோம.8:15,38-39), நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை உறுதிபடுத்துகின்றார், இந்த உரிமையினால் வரும் அனைத்து நன்மைகளையும் கொடுக்கின்றார் (8:16-17, 12:6-8). அதன் பயனாக நம் எண்ணம் புதிதாவதால், நம்மைக் குறித்து சரியாக பார்க்க முடிகிறது, நம்முடைய சிந்தனையும் புதியதாகின்றது (12:2-3).

பல ஆண்டுகளுக்குப் பின்பு, மோகன் இன்னமும் ஒவ்வொரு நாளும், தேவன் அவனைக் குறித்து என்ன கூறுகின்றாரோ அந்த வார்த்தைகளை கூறிக்கொண்டேயிருக்கிறான். பரமத் தந்தையின் கண்களில், அவன் நேசிக்கப்படுகின்றான், அவன் அழகானவன், திறமைசாலி. நாமும் கூட அப்படியே!

செயல்படும் தேவ இரக்கம்

ஒரு பெண் என்னைத் தவறாக நடத்தியதோடு, என்னைக் குற்றப்படுத்தி, என்னைக் குறித்து தவறாகப் பிறரிடமும் கூறிய போது, என்னுடைய கோபம் அதிகரித்தது. நான், அவள் செய்த காரியத்தை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பினேன். அவள் நடந்து கொண்ட விதத்தால், நான் கஷ்டப்படுதைப் போன்று, அவளும் கஷ்டம் அநுபவிக்கட்டும் என்று எனக்குத் தலைவலி தோன்றும் வரை, என்னுடைய கோபத்தால் கொப்பளித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய தலைவலி நீங்குமாறு ஜெபித்த போது, பரிசுத்த ஆவியானவர் என்னுடைய குற்றத்தை உணர்த்தினார். நான் பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு, எப்படி தேவனிடம் விடுதலை தரும்படி கெஞ்ச முடியும்?  அவர் என்னைப் பாதுகாத்துக் கொள்வார் என்று நான் நம்பும் போது, இந்த சூழ்நிலையையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று நான் ஏன் நம்பக் கூடாது? காயப்படுத்துகின்ற மக்கள், பிறரை அடிக்கடி மற்றவரை காயப்படுத்திக் கொண்டேதான் இருப்பர் என்பதை அறிந்திருந்த நான் அந்த பெண்ணை மன்னிப்பதற்கு தேவனிடம் உதவி கேட்டதோடு, மனம் பொருந்தவும் முயற்சித்தேன்.

அநியாயமாக நாம் நடத்தப் படும் போது, தேவன் மீது நம்பிக்கையோடு இருப்பதின் கஷ்டத்தை சங்கீதக்காரனான தாவீது அறிந்திருந்தார். ஓர் அன்பான பணிவிடைக் காரனாக இருக்க தாவீது எவ்வளவோ முயற்சித்த போதும், பொறாமை கொண்ட சவுல் அரசன், தாவீதை கொல்ல விரும்பினான் (1 சாமு.24:1-2). தேவன் தன்னுடைய திட்டத்தை செயல் படுத்தி, அவனை அரசனாக்கும்படி தயாரித்துக் கொண்டிருந்த போது, அவன் கஷ்டங்களைச் சகித்தான். ஆனாலும் அவன், பழிவாங்குவதையல்ல, தேவனை மகிமைப் படுத்துவதையே தெரிந்து கொண்டான் (வ.3-7). அவன் சவுலோடு மனம் பொருந்தும்படி, காரியங்களைச் செய்தான், அதன் பலனை தேவனுடைய கரத்தில் கொடுத்து விட்டான் ( வ.8-22).

தவறு செய்கின்றவர்கள் தண்டிக்கப்படாமல் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கின்றோம். அநியாயத்தின்  நிமித்தம் நாம் கஷ்டங்களைச் சகிக்கின்றோம். தேவனுடைய இரக்கம் நம்முடைய இருதயங்களிலும், மற்றவர்களின் இருதயங்களிலும் கிரியை செய்யும் போது, அவர் நம்மை மன்னித்தது போல நாமும் பிறரை மன்னிக்க முடியும், அவர் நமக்கு ஆயத்தம் பண்ணிவைத்துள்ள ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

உண்மையாகவே போர் முடிந்து விட்டது

இரண்டாம் உலகப் போர் முடிந்து, இருபத்தொன்பது ஆண்டுகள்   கடந்த பின்னரும், ஒரு ஜப்பானிய போர் வீரர் ஹீரூ ஒனோடா காடுகளுக்குள் தன்னை ஒளித்துக் கொண்டிருந்தார், தன்னுடைய நாடு சரணடைந்து விட்டது என்பதை நம்ப மறுத்தார். ஜப்பானிய இராணுவ தலைவர்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகளை இரகசியமாக வேவு பார்க்க, அவனை ஒரு தனிமையான தீவுக்கு அனுப்பியிருந்தனர். சமாதான பேச்சு வார்த்தை கையெழுத்தான பின்பும், பகைமை ஓய்ந்த பின்பும் அவன் அந்த காடுகளிலேயே   இருந்தான். 1974 ஆம் ஆண்டு, அவனுடைய இராணுவ அதிகாரி    அந்த தீவுக்குச் சென்று, அவனைக் கண்டு பிடித்து, யுத்தம் முடிந்து விட்டது என்பதை நம்பும்படிச் செய்தார்.

30 ஆண்டுகளாக இந்த மனிதன், ஒரு தனிமையான தீவில்      வாழ்ந்தான், ஏனெனில், அவன் சரணடைய மறுத்தான், போர் முடிந்து விட்டது என்பதை நம்ப மறுத்தான். நாமும் இத்தகைய தவறுகளைச் செய்ய நேரலாம். “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ் நானம் பெற்றோம்” (ரோம.6:3) என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு அதிர்ச்சியைத்தரும் உண்மையை தெரியப்படுத்துகின்றார். ஒரு வல்லமையான, வினோதமான வழியில், சாத்தானின் பொய்யையும், சாவின் பயங்கரத்தையும், பாவத்தின் வல்ல பிடியையும், இயேசு சிலுவையில் கொன்று விட்டார். எனவே நாம் “பாவத்திற்கு மரித்தவர்களாயும்”, “தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும்” (வ.11) இருக்கின்றோம். நாம் இன்னமும் அடிக்கடி, பிசாசு நம்மேல் ஆதிக்கத்தை வைத்திருப்பதாக எண்ணுகின்றோம். நாம் சோதனைகளுக்கு இடம் கொடுக்கின்றோம், பாவத்தின் மாயைக்கு அடிமையாகின்றோம், பொய்க்குச் செவி சாய்க்கின்றோம், இயேசுவை விசுவாசிக்க தவறுகின்றோம். ஆனால், நாம் இவற்றிற்கெல்லாம் செவிசாய்க்கத் தேவையில்லை. தவறாக கூறப்படும் கரியங்களின் படி நாம் நடக்கத் தேவையில்லை. தேவனுடைய கிருபையால், கிறிஸ்து வெற்றிச் சிறந்த உண்மை கதையை நாம் பற்றிக் கொள்வோம்.

நாம் இன்னும் பாவத்தோடு போராடிக் கொண்டிருந்தால், இயேசு யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டார் என்ற செய்தியைப் பற்றிக் கொள்வோம், நாம் விடுதலை பெறுவோம். தேவனுடைய வல்லமையால், அவருடைய உண்மையை வாழ்ந்து காட்டுவோம்.

அன்போடு திருத்துதல்

ஆரம்ப கோடைகால வெப்ப நிலை, புத்துணர்ச்சி தருவதாக      இருந்தது. பிரயாணத்தில் என்னோடு துணையாக வந்த என்னுடைய மனைவிக்கு இதைவிட நல்ல சூழ் நிலை இருக்க முடியாது. அந்த இனிய கணங்கள் சீக்கிரத்தில், சோகமாக மாறியிருக்கும், ஆனால் அதற்குள், நான் தவறான திசையில் செல்கிறேன் என்று எச்சரிக்கும் ஒரு சிவப்பு வெள்ளை எச்சரிப்புப் பலகையைப் பார்த்து விட்டேன். நான் சரியாக அனைத்துப்பக்கமும் திரும்பி பார்க்காததால், ஒரு கணம் என் முன்னே தோன்றிய “ நுழையாதே” என்ற அடையாளம், என்னுடைய முகத்திற்கு முன்பாக வந்து நின்றது. நான் உடனடியாக என்னுடைய தவறை சரிசெய்து கொண்டேன். நான் சரியான பாதையில் செல்லவில்லை என்ற எச்சரிக்கையை கவனிக்காமல் இருந்திருந்தால், நான் என்னுடைய மனைவிக்கும், எனக்கும் மற்றும் என்னோடு சேர்ந்தவர்களுக்கும் ஆபத்தை வருவித்திருப்பேன் என்பதை நினைத்து நடுங்கினேன்.

யாக்கோபின் முடிவு வார்த்தைகள், திருத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.   நாம் சென்று கொண்டிருக்கும் பாதை அல்லது செயல், தீர்மானம் அல்லது முடிவு தீமையை விளைவிக்கலாம் என்பதை, நம்மீது அக்கரை கொண்டவர்கள் அறிந்து, “மீண்டும் நல்வழி”க்கு கொண்டுவர நம்மில் யாருக்கு தேவையில்லாதிருக்கின்றது? யாரோ ஒருவர் சரியான நேரத்தில், தைரியமாக நம் காரியங்களில் குறுக்கிடவில்லை யெனின், நமக்கும் மற்றவருக்கும் என்னென்ன தீமை நடந்திருக்கும் என்பதை யார் அறிந்திருக்கக் கூடும்?

அன்போடு கூடிய திருத்துதலை யாக்கோபு வலியுறுத்துகின்றார், “தப்பிப் போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன், ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்” (5:20) என்கின்ற வார்த்தைகளால் விளக்குகின்றார். திருத்துதல் என்பது தேவனுடைய கிருபையின் வெளிப்பாடு. நாம் மற்றவர்கள் நலனின் மீது கொண்டுள்ள அன்பும் கரிசனையும், அவர்களோடு பேசவும், அவர்களின் பாதையில் குறுக்கிடவும் நம்மைத் தூண்டுவதன் மூலம், “அவர்களை மீண்டும் திருப்பி கொண்டு வருவதற்கு” தேவன் நம்மைப் பயன் படுத்துவாராக (வ.19).

இருவர் பாடிய தெய்வீகப் பாடல்

குழந்தைகளின் இசை நிகழ்ச்சியொன்றில், ஓர் ஆசிரியரும், ஒரு மாணவனும் ஒரு பியானோவின் முன்னால் அமர்ந்திருந்தனர்.      இருவரும் சேர்ந்து இசைக்கும் பாடலைத் தொடங்குவதற்கு முன்பு, அந்த ஆசிரியர் குனிந்து, அந்த மாணவனிடம், சில கடைசி நேர ஆலோசனைகளைக் கூறினார். அந்த இசைக் கருவியிலிருந்து இசை கொட்டிய போது, அந்த மாணவன் ஒரு எளிய ராகத்தை வாசித்தான், அந்த ஆசிரியர், அவனோடு இசைத்து, அந்த இசைக்கு ஓர் ஆழத்தையும், வளமையையும் கொடுத்தார். அந்த இசை முடிவுற்றபோது, அந்த ஆசிரியர் தன் தலையை அசைத்து, தன்னுடைய அங்கிகாரத்தைத் தெரிவித்தார்.

 நாம் இயேசுவோடு வாழும் வாழ்க்கையும் தனிப்பாடலைப் போன்றதல்ல, இருவர் சேர்ந்து பாடும் பாடலைப் போன்றது. சில வேளைகளில், அவர் “என் அருகில் அமர்ந்திருக்கிறார்”, அவருடைய வல்லமையினாலும், வழி நடத்தலாலும் தான், “என்னால் இயங்க முடிகிறது” என்பதையே நான் மறந்துவிடுகின்றேன். என்னுடைய சொந்த முயற்சியால், நான் சரியான சுரங்களை இசைக்க முயற்சிக்கிறேன்- என்னுடைய சொந்த பெலனால், நான் தேவனுக்கு கீழ்ப்படிய முயற்சிக்கிறேன், ஆனால் அது பலனற்றதாகவும் போலியாகவும் தான் முடிகின்றது. என்னுடைய கொஞ்ச பெலனைக் கொண்டு, நான் பிரச்சனைகளை தீர்க்க விரும்புகின்றேன், ஆனால், அது எனக்கும் பிறருக்கும் இடையே முரண்பாட்டைத் தான் கொண்டு வருகின்றது.

என்னுடைய ஆசிரியர் என் அருகிலேயே இருந்தால், காரியங்கள் வேறு விதமாக இருக்கின்றது. எனக்கு உதவும்படி, நான் தேவனைச் சார்ந்து கொள்ளும் போது, என்னுடைய வாழ்வு தேவனை மகிமைப் படுத்துவதாக உள்ளது. நான் சந்தோஷத்தோடு பணி செய்கின்றேன், தாராளமாக அன்பு செய்கின்றேன், என்னுடைய உறவுகளைத்  தேவன் ஆசீர்வதிக்கும் போது, அது ஆச்சரியமாக உள்ளது. இயேசு தன்னுடைய முதல் சீஷர்களிடம், “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது” (யோவா.15:5) என்றார்.

ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய நல்ல ஆசிரியருடன்    இணைந்து, இருவரும் பாடும் போது, அவருடைய கிருபையும், வல்லமையும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் இசையை  சிறப்பாக வாசிக்க உதவும்.