டீன் ஏஜ் மோகன் தன்னம்பிக்கை உள்ளவனாகக் காணப்பட்டான். ஆனால் இந்த தன்னம்பிக்கை, வெறும் முகமூடியாகத்தான் காணப்பட்டது. உண்மையில், குழப்பமான ஒரு வீடு, அவனை பயமுள்ளவனாகவும், தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கத்தையும், அவனுடைய  குடும்பத்தின்  பிரச்சனைகளுக்கு அவன்தான் காரணம் என்ற தவறான உணர்வையும் அவனுக்குள் ஏற்படுத்தி இருந்தது. அவனுக்கு  நினைவு தெரிந்த மட்டும்,   “ஒவ்வொரு நாள் காலையும் நான் குளியல் அறைக்குள் சென்று, கண்ணாடியைப் பார்த்தவனாக, ‘நீ ஒரு முட்டாள், நீ பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கின்றாய், அதற்கெல்லாம் காரணம் நீ தான்’ என்பேன்”.

இவ்வாறு, மோகன் தன்னைத்தானே வெறுக்கும் காரியம், அவனுடைய இருபத்திஒன்றாம் வயது வரை நடைபெற்றது. அப்பொழுது அவனுக்கு இயேசு கிறிஸ்துவோடுள்ள உறவைக்குறித்து ஒரு தெய்வீக வெளிப்பாடு கிடைத்தது. “தேவன் என்னை நிபந்தனையற்ற அன்போடு நேசிக்கின்றார், இதனை எந்த வகையிலும் மாற்றமுடியாது என்பதை உணர்ந்தேன்”, மேலும் “நான் தேவனை ஒரு போதும் துக்கப்படுத்தக் கூடாது, அவர் என்னை ஒரு போதும் தள்ள மாட்டார்” என்றும் நினைவுகூர்ந்தான். இப்பொழுது மோகன் கண்ணாடியில் பார்த்து, தனக்குள்ளாக வேறு வகையாகப் பேசுகின்றான், “நீ நேசிக்கப் படுகின்றாய், நீ விசேஷமானவன், நீ திறமைசாலி” என்றான், “இது உன்னுடைய தவறல்ல” என்றும் கூறிக்கொள்வான்.

இயேசுவை விசுவாசிப்பவர்களிடம் தேவனுடைய ஆவியானவர்  என்ன செய்கின்றார் என்பதை மோகனின் மாற்றம் விளக்குகிறது. அநுபவித்தான். அவர் நம்மை மிகவும் நேசித்து, பயத்திலிருந்து விடுவிக்கின்றார் (ரோம.8:15,38-39), நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை உறுதிபடுத்துகின்றார், இந்த உரிமையினால் வரும் அனைத்து நன்மைகளையும் கொடுக்கின்றார் (8:16-17, 12:6-8). அதன் பயனாக நம் எண்ணம் புதிதாவதால், நம்மைக் குறித்து சரியாக பார்க்க முடிகிறது, நம்முடைய சிந்தனையும் புதியதாகின்றது (12:2-3).

பல ஆண்டுகளுக்குப் பின்பு, மோகன் இன்னமும் ஒவ்வொரு நாளும், தேவன் அவனைக் குறித்து என்ன கூறுகின்றாரோ அந்த வார்த்தைகளை கூறிக்கொண்டேயிருக்கிறான். பரமத் தந்தையின் கண்களில், அவன் நேசிக்கப்படுகின்றான், அவன் அழகானவன், திறமைசாலி. நாமும் கூட அப்படியே!