ஒரு பழங்கால கதையில், ஒரு பேராசையுள்ள பணக்கார பண்ணையார், ஒரு வீட்டையும் அதனோடு சேர்ந்த கிணற்றையும் ஓர் ஏழை விவசாயிக்கு விற்றார். மறுநாள், அந்த விவசாயி கிணற்றிலிருந்து தண்ணீரை தன்னுடைய வயலுக்குப் பாய்த்தான்.  அதைக் கண்ட அந்த பண்ணையார், அவனிடம் அந்தக் கிணற்றைத்தான் விற்றேன், அதிலுள்ள தண்ணீரையல்ல என்பதாக மறுப்பு தெரிவித்தார். கவலையுற்ற விவசாயி, அரசன் அக்பரின் அவைக்குச் சென்றான். இந்த வினோதமான வழக்கை கேட்ட அரசன், தன்னுடைய புத்திசாலி மந்திரி பீர்பாலிடம் ஆலோசனை கேட்டான். பீர்பால் பண்ணையாரிடம், “உண்மைதான், கிணற்றிலுள்ள தண்ணீர் விவசாயிக்குச் சொந்தமானதல்ல, அந்தக் கிணறு பண்ணையாருக்குச் சொந்தமல்ல. எனவே தண்ணீரை கிணற்றில் சேமித்து வைக்க விவசாயிக்கு வாடகை கொடுக்க வேண்டும் என்றார். தன்னுடைய தந்திரம் பலிக்காத்தால், பண்ணையார் அந்த  வீட்டையும் கிணற்றையும் குறித்த உரிமையை வாபஸ் பெற்றார்.

சாமுவேல் தன்னுடைய குமாரரை இஸ்ரவேலின் மேல் நியாயாதிபதிகளாக ஏற்படுத்தினான். அவர்கள் பேராசையால் இழுக்கப்பட்டனர். அவனுடைய குமாரர் “அவன் வழிகளில் நடவாமல்” (1 சாமு. 8:3) பொருளாசைக்குச் சாய்ந்தனர். சாமுவேலின் நேர்மைக்கு மாறாக, அவனுடைய குமாரர் “பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்”. தங்களின் பதவியை தங்களுடைய சொந்த நலனுக்குப் பயன்படுத்தினார்கள். இந்த நியாயமற்றச் செயல், இஸ்ரவேலின் மூப்பர்களையும், தேவனையும் மனம் வருந்தச் செய்தது. இதன் காரணமாக, அநேக இராஜாக்கள் இஸ்ரவேலை அரசாளும்படி வந்தனர் என்பதைப் பழைய ஏற்பாட்டின் பக்கங்களில் காண்கின்றோம் (வ.4-5).

தேவனுடைய வழியை விட்டு விலகும் போது, நற்பண்புகள் மாறி, அநியாயம் தலைதூக்குகின்றது. தேவனுடைய வழிகளில் நடக்கும் போது, நேர்மையையும், நியாயத்தையும் நம்முடைய வார்த்தைகளிலும் செயலிலும் காணமுடியும். இத்தகைய நற்குணங்கள் அவர்களோடு முடிந்து போவதில்லை, அதை பார்க்கும் மற்றவர்களும் பரலோகத்தின் தேவனை மகிமைப் படுத்துவார்கள்.