“உன்னுடைய தந்தை மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றார்” என்று அவரை கவனித்துக் கொண்டிருந்த செவிலியர் கூறினார். “மரணத்தை நெருங்குதல்” என்பது ஒருவருடைய வாழ்வின் கடைசி நிமிடங்களைக் குறிக்கும், ஆனால் அது எனக்குப் புதியதாக      இருந்தது, ஒரு ஒற்றையடி பாதையில் தனிமையாக பயணம் செய்வதைப் போல் தோன்றியது. என்னுடைய தந்தையின் கடைசி நாளில், என்னுடைய சகோதரியும் நானும் அவருடைய படுக்கையின் அருகில் அமர்ந்திருந்தோம், நாங்கள் பேசுவதை அவரால் கேட்க முடியுமா என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அவருடைய வழுக்கைத் தலையை முத்தமிட்டோம். தேவன் அவருக்குத் தந்துள்ள வாக்குத் தத்தங்களை மெதுவாக கூறினோம். நாங்கள் ஒரு பாடலைப் பாடி, சங்கீதம் 23 ஐ வாசித்தோம். நாங்கள் அவரை நேசிக்கின்றோம், அவர் எங்கள் தந்தையாக இருப்பதற்காக நன்றி கூறினோம். அவருடைய இருதயம் இயேசுவோடு இருக்க விரும்புவதை நாங்கள் அறிவோம், எனவே அவரிடம் இயேசுவிடம் போகலாம் என்று விடை கொடுத்தோம். இந்த வார்த்தைகளைச் சொல்வது தான், அவரை அனுப்பிவிடுவதில் சந்தித்த மிக வேதனை தரும் தருணம். சில நிமிடங்களில், நித்திய வீட்டில் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

நமக்கு அன்பானவர்களை வழியனுப்புதல் என்பது வேதனை தருவதாக உள்ளது. இயேசுவின் நண்பனான லாசரு மரித்தபோது, இயேசுவின் கண்கள் கண்ணீர் விட்டன (யோவா. 11:35). ஆனால், தேவன் நமக்கு வாக்களித்துள்ளபடி, இவ்வுலக மரணத்திற்கு பின்பும் நமக்கொரு நம்பிக்கையுள்ளது. “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது என்று சங்கீதம் 116:15 சொல்கின்றது. அவர்கள் மரித்தாலும் மீண்டும் வாழ்வார்கள்.

“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்று இயேசு கூறுகின்றார் (யோவா.11:25-26). நாம் எப்பொழுதும் தேவனுடைய பிரசன்னத்தில் இருப்போம் என்ற செய்தி எத்தனை ஆறுதல் அளிப்பதாக உள்ளது.